...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, June 29, 2021

 தோழியர் மீனா குமாரி SPM மானுர் அவர்களுக்கு NELLAI -NFPE யின் இனிய பணிநிறைவு வாழ்த்துக்கள் 

தோழியர் மீனா குமாரி   அவர்களை 

வாழ்த்துகிறோம் ...

தோழியர் என்று அழைப்பதை விட -எங்களது 

சகோதரிகளில் ஒருவர் என்றழைப்பது தான் 

பொருத்தமாக இருக்கும் ..

அன்பு சகோதரியை வாழ்த்துகிறோம் ....

கவலை ,கஷ்டம் ,கண்ணீர் என 

எந்த துயரமும் எட்டிப்பார்க்காத 

உன்னத உள்ளம் எங்கள் சகோதரிக்கு உண்டு 

அன்பு ,ஆனந்தம் ,அர்ப்பணிப்பு --சகோதாரிக்கு 

இப்போதும் உண்டு ..

எந்த பொறுப்புகளுக்கும் நாங்கள் இவரை 

முன்னிறுத்தியதில்லை --ஆனால் கொடுத்திட்ட 

பணியினை ஒருபோதும் மறுத்திட்டதில்லை 

அலுவலகத்தில் குடும்ப உறுப்பினராக -

அடுத்த இடம் சென்றாலும் தொடரும் நட்பாக 

சகோதரியை சுற்றி இன்னும் எங்கள் 

தோழியர்கள் படையெடுப்பு 

வெளிப்படையாக கேள்விகளை கேட்பவர் -இன்றும் 

வெகுளியாய் பேசுபவர் 

கள்ளம் கபடம் ஏதுமின்றி --வெள்ளை மனம் கொண்ட 

எங்கள் சகோதரியை NELLAI -NFPE 

சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம் ..

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 






 இன்று (30.06..2021) பணிநிறைவு பெறுகின்ற தூத்துக்குடி அஞ்சல் மூன்றின் கோட்டத்  தலைவர் தோழர் சங்கரநாராயணன் அவர்களின் பணிஓய்வு காலங்கள் சிறக்க வாழ்த்துக்கள்-- 30.06.2021

முத்துநகர் தந்திட்ட 

முத்தான தலைவனே !

சந்தன மனம் மாறமல் --NFPE எனும் 

சங்க நாதம் முழங்கியவனே !

தோழர் சங்கர நாராயணனே !

உன்னை வாழ்த்துகிறோம் .


ஆர்பாட்டத்தால் ஆவேசத்தால் 

சாதிக்கமுடியாத காரியங்களை கூட -உன் 

சாதுரியத்தால் சாதித்து காட்டியவனே !

தொழிற்சங்கத்தில் கூட 

அகிம்சைக்கு அச்சாரம்  போட்டவனே !


போட்டிகளுக்கு நடுவிலே --நீ 

பொறுப்புகளுக்கு வந்தாலும் கூட 

போட்டியை தவிர்க்க  --பொறுப்புதனை 

விட்டுக்கொடுத்து புகழின் 

உச்சிக்கு சென்றவனே !


தொழிற்சங்கத்தில் அரசியலா --

அரசியலில் தொழிற்சங்கமா ?என 

அனல் பறந்த நாட்களிலில் கூட 

அணி சாயம் அவ்வளவாய் -ஒட்டிக்கொள்ளாமல் 

அண்ணன் பாலுவோடும் --அண்ணன் KVS அவர்களோடும் 

இன்றுவரை அணி வகுத்தவனே !


அடுத்ததடுத்து மற்ற தோழர்களை 

கோட்ட செயலராய் பணியாற்றிட 

வாய்ப்புகளை உருவாக்கி தந்தவனே !

கோட்ட செயலராய் -கோட்ட தலைவராய் 

எந்த பொறுப்பில் இருந்தாலும் 

NFPE தூத்துக்குடி வலைத்தளத்தில் 

உன் வாசனைகள் இல்லாத 

வாசகங்கள் ஏது ?

இனிமேல் உன்போன்ற அமைதி மிகு 

ஆளுமைகள் ஏது ?ஏது ?

வாழ்க !நீ பல்லாண்டு !

என வாழ்த்தி மகிழும் --

உந்தன் தம்பி SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 















 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 

                                                சமீபத்திய சேமிப்பு வங்கி சம்பந்தமான உத்தரவுகள் 

SB 13/2021  DTD 28.06.2021

                         CBS அஞ்சலங்களில் சேமிப்பு புத்தகங்களில் பிரிண்ட் போட MTS/GDS ஊழியர்களை பயன்படுத்துவது தொடர்பான ஆணை ..

      இதன்படி அடையாளம் காட்டப்பட்ட MTS/GDS ஊழியர்களுக்கு CBS-CPC மூலமாக USERID  கொடுக்கப்படும் .அவர்கள் கீழ்கண்ட நான்கு FINACLE மெனுவில் மட்டுமே பணியாற்றிட முடியும் .1.HPPB 2.HACCBAL 3.HAFT 4.HPR 

-------------------------------------------------------------------------------------------------------------------

SB 14/2021  DTD 28.06.2021

நிறுத்தப்பட்ட சேமிப்பு திட்டங்களான NSS-87 மற்றும் NSS-92  இவைகளை CBS அலுவலகங்களுக்குள் மாற்றல் செய்வது சம்பந்தமாக 

     தற்சமயம் வரை சம்பந்தப்பட்ட தலைமை அஞ்சலகங்களில் மட்டுமே எந்தவித பரிவர்த்தனையும் செய்யமுடியும் என்பதனை மாற்றி வாடிக்கையாளர்கள் விரும்பும் அவர்கள் அருகாமையில் உள்ள தலைமை அஞ்சலகங்களில் மாறுதல் செய்து தொகையினை பெற்றுக்கொள்ளலாம் .அப்படி பெறப்படும் தொகை காசோலையாகவோ அல்லது சேமிப்பு நடப்பு கணக்கில் வரவு வைத்தோ மட்டுமே தரப்படும் .கையெழுத்து FINACLE லில்  இருந்தால் ஒரு செட்  KYC உள்ளிட்ட ஆவணங்களை மட்டுமே பெற்றுக்கொண்டு கணக்கை மாற்றிக்கொள்ளலாம் .கையெழுத்து FINACLE லில் இல்லையென்றால்  இரண்டு செட்  KYC உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டு ஒரு செட்டையை சம்பந்தப்பட்ட தலைமை அஞ்சலகத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டும் .எந்த அலுவலகத்தில் கணக்கு இருக்கிறதோ அந்த அலுவகத்தில் மாறுதல் செய்யப்பட்டு அதன் தகவலை விண்ணப்பங்கள் பெறப்பட்ட அலுவகத்திற்கு அனுப்பிவைக்கப்படும் .

நன்றி .தோழமையுடன் S.K .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Sunday, June 27, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

                                                பஞ்சப்படி மற்றும் ஓய்வூதியர்களுக்கான ரிலீப் வழங்குவது தொடர்பாக 26.06.2021 அன்று தேசிய கூட்டு ஆலோசனைக்குழு (NJCM ) நடத்திய பேச்சுவார்தகைகள் குறித்து நாடெங்கும் பரப்பப்பட்டு வரும் செய்திகள் குறித்து நமது தோழர்களின் சந்தேகங்களுக்கு ஒரு விளக்கத்தை  அளித்திடும் நோக்கில் இந்த பதிவினை பதிவிடுகிறோம் .

இந்த கூட்டத்தில்  நேரடியாக கலந்துகொண்ட ஊழியர் தரப்பு பிரதிநிதிகள் மொத்தம் 6 பேர் .மீதமுள்ள நிர்வாகிகள் காணொளி காட்சியின் மூலம் பங்கேற்றார்கள் .நேரடியாக கலந்துகொண்டவர்களில் நமது NFPE சம்மேளன பொதுச்செயலர் தோழர் R.N.பராசர் அவர்களும் ஒருவர் ..

                     கேபினெட் செயலர் தலைமையில் நடைபெற்ற இந்தகூட்டத்தில்   மொத்தம் 29 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டுள்ளன .ஏனைய கோரிக்கைகளைவிட DA குறித்தான கோரிக்கையில் அரசின் நிலைப்பாட்டை தெரிந்துகொள்ளவே ஊழியர்களும் ஓய்வூதியர்களும் பேரார்வத்தில் இருப்பது என்பது எதார்த்தமே !

                            முடக்கிவைக்கபட்ட பஞ்சபடியை கொடுத்திட ஏற்கனவே கடந்த பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் நிதித்துறையின் துணை அமைச்சர் கொடுத்த வாக்குறுதி நினைவூட்டப்பட்டது ..பஞ்சப்படி வழங்குவது குறித்து சாதகமான குறிப்புகள் மத்திய நிதித்துறை மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் அதற்குப்பின் அமைச்சரவையில் வைத்து விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் .இதற்கிடையில் சமூக வலைத்தளங்களால் பரப்பப்படும் செய்திகள் ஏதும் உண்மை இல்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும் .

                             பொதுவாக ஜூன்  மாதத்திற்கான விலைவாசி புள்ளிகள் ஜூலை 14 ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் அதிலிருந்து முடிவெடுக்க குறைந்தபட்சம் 10 வாரங்கள் ஆகும் என்பதால் வழக்கமாக நமக்கு DA அறிவிப்புகள் செப்டெம்பரில் தான் வந்துகொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்க ..

                                           பேச்சுவார்த்தை நம்பிக்கை தரும் வகையில் அமைந்திருந்ததாக தெரிவித்தனர் .நல்லெண்ணம் நம்பிக்கை வாக்குறுதி இவைகள் நமக்கும் அரசுக்கும் புதிதல்ல என்றாலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்கத்தை சரிசெய்ய பஞ்சபடியை மேலும் நிறுத்திவைக்காமல் வழங்குவதுதான் தீர்வு என்கின்ற நிலைக்கு நாடும் தள்ளப்பட்டுள்ளது என்பதும் திண்ணம் .

   ஆக எப்படியிருந்தாலும் கொடுக்கின்ற பஞ்சப்படி முன்தேதியிட்டு வழங்கிட வாய்ப்பில்லை என்றும் நமது தலைவர்கள் தவணை முறையிலாவது நிலுவை தொகையோடு பெற்றிட வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள் .

                                   ஜூலை 2021-- 15ம் தேதிக்குள் பஞ்சப்படி குறித்து சாதகமான அறிவிப்புகள் வெளியிடப்படவில்லையென்றால் மீண்டும் போராட்ட பாதையில் பயணிக்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது .

                                துக்ளக்  சினிமாவில் வரும் வாசகம் ஒன்று நினைவிற்கு வருகிறது .

அமைச்சர் --அரசு ஊழியர்கள் போராடினால் என்ன செய்ய ?

பிரதமர் -பேச்சுவார்த்தை நடத்துங்கள் 

.அமைச்சர்--மீண்டும் போராடினால் ?

பிரதமர்--மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்கள் 

நன்றி ..தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

மாநில செயற்தலைவர் மத்திய மண்டல செயலர்  அண்ணன் R .குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 
                                     தலைவா வா ! தலைமை ஏற்க வா !
புதுகை தந்திட்ட  புதுமை தலைவனே !
பொறுமைக்கு பெருமை சேர்த்திட்ட 
புதுவகை தோழனே !

அகவை அறுபதை -இன்று 
தொட்டு பார்க்கும் இளைஞனே !
உன்னை வாழ்த்தி மகிழ்கின்றேன் ..
வாழ்க நீ பல்லாண்டு !

நெருக்கடியான காலத்தில் கூட -
நேர்த்தியான மாநில மாநாட்டை நடத்தி காட்டியனவே !
நெஞ்சில் ஏற்றிருந்த  தலைவர்களை எல்லாம் --ஒருசேர 
மேடையில் ஏற்றி அழகு பார்த்தவனே !(அண்ணன் பாலு உட்பட )

அண்ணன் KVS கட்டளையிட்ட பொழுதெல்லாம் 
அகிலஇந்திய செயற்குழு முதல் பேரவை கூட்டம் வரை 
குறையின்றி நடத்தி காட்டியவனே !.

மண்டல செயலராய் பணியாற்றிய போது 
உன் ஆற்றல் கண்டோம் --
கஜா புயல் கோரத்தாண்டவத்தின் போது -உன் 
கருணை உள்ளதை கண்டோம் 
ஏற்றுக்கொண்ட தலைமையை எல்லா நேரத்திலும் 
ஏற்றுக்கொண்டதில் இருந்து உன் விசுவாசத்தை கண்டோம் 
எதிரிகள் என்பது உனக்கு எங்கும் இல்லை -என 
கேள்விப்பட்ட போது உன் அன்பை கண்டோம் 

பதவியை தேடி  பலவாறு அலைகின்ற நாட்களில் 
பதவி அல்லவா உன்னை தேடி அலைகிறது !
புறப்படு தோழா ! நம் தலைமை அழைக்கிறது 
தலைவா வா ! தலைமை ஏற்க வா ! வா !
வாழ்த்துக்களுடன் .......SK .ஜேக்கப் ராஜ் 






Thursday, June 24, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

                                             ஆதார் பணிகள் இப்பொழுது அவசியமா ? ஊழியர்களின் உயிர் குறித்து நிர்வாகம் எப்பொழுதும்  அலட்சியமா ?

                                அஞ்சலகத்தில்   ஆதார் பணிகளை மீண்டும்  தொடங்கிட  மாநில நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது ..தமிழகஅரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் கொண்ட 11 மாவட்டங்களை தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என அறிவித்துள்ளது ..

                                  கொரானா மூன்றாம் அலையை எதிர்நோக்கி கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில் மாநிலநிர்வாகத்தின் இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை .

                                  பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கான தடைகள் இன்னும் விலக்கப்படாத சூழலில் ,கூட்டங்கள் விழாக்கள் நடத்துவதற்கு முற்றிலுமாக அனுமதி கொடுக்கப்படாத நிலையில் ஆதார் பணிகளை அஞ்சலகத்தில் தொடங்குவது ஆபத்தான ஒன்று மட்டுமல்ல மாநில நிர்வாகத்தின் இந்த முடிவும் அபத்தமானது என்பதனை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லவேண்டும் .. 

                                     ஆதார் பாணிகளுக்காக  திரளப்போகும் மக்கள் கூட்டத்தை குறித்து இதுவரை எந்த நிர்வாகமும் கவலை பட்டதாக தெரியவில்லை .நாளொன்றுக்கு எத்தனை பேருக்கு நாம் எடுத்தாலும் கடைசியாக வந்த நபருக்கு சேவை மறுக்கப்பட்டால் கூட அவர்களது புகாருக்கு நிர்வாகம் விழுந்தடித்துக்கொண்டு அவருக்கும் ஆதார் சேவையை செய்யுங்கள் என்ற கட்டளையை பிறப்பிக்கத்தான் போகிறது .

                                          ஆகவே நமது மாநிலச்சங்கம் ஊழியர்களின் உயிர் காக்கும் பிரச்சினைகளில் உடனடியாக தலையிட்டு கொரானா அச்சுறுத்தல்கள் நீங்கும் வரை ஆதார் பணிகளை நிறுத்தி வைத்திட மாநில நிர்வாகத்தை வலியுறுத்தவேண்டும் .மாநில நிர்வாகம் நமது கோரிக்கைகளில் செவிசாய்க்கவில்லை என்றால் நமது தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கவேண்டும் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Wednesday, June 23, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

                                                 மாநில கவுன்சில் --மற்றும் மாநில தலைவர் தோழர் .M .செல்வ கிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுவிழா 

நாள் --03.07.2021 இடம் --சென்னை எழும்பூர் நக்கீரன் அரங்கம் 

காலியாகவுள்ள மாநில தலைவர் பதவியை நிரப்புதல் சம்பந்தமாகவும் ,இலாகா பணிஓய்வு பெற்ற மாநில தலைவர் தோழர்  தோழர் .M .செல்வ கிருஷ்ணன்  அவர்களுக்கு பாராட்டுவிழாவும் நமது மாநிலச்சங்கத்தின் சார்பாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .மாநில கவுன்சிலில் பங்கேற்க நமது கோட்டத்தின் சார்பாக பிரதிநிதிகள் இரண்டுபேர் .(ஜேக்கப் ராஜ் -T.அழகுமுத்து )மேலும் வரவிரும்புகிறவர்கள் இன்று மாலைக்குள் தங்கள் விருப்பத்தினை தெரிவிக்கவும் .ஊரடங்கின் நிலைமை சீராகவில்லை என்றால் நிகழ்ச்சிகள் அனைத்தும் காணொளி காட்சி மூலமாக நடைபெறும் .

*விதி அறிவு களஞ்சியம் புத்தகம் இரண்டாவது கட்டமாக நமது கோட்டத்திற்கு 20 புத்தகங்கள் வரவிருக்கின்றன ..இதுவரை பணம் அனுப்பிவர்கள் 

முத்துலட்சுமி  ,பாலகுருசாமி ,வனஜா சுபா இவர்கள் தோழர் பேராட்சி மூலம் அனுப்பியவர்கள் ,பிச்சையா GDS பாலாஜி ,பிரான்சிஸ் சேவியர் (RETD)பொன்விஜயலக்ஷ்மி ,மகாராஜன் OA ..

இன்னும் 11 புத்தகங்களே மீதி இருக்கிறது .தேவைப்படுவோர் இன்றே POSB 4876043185(ஆனந்தராஜ் ) கணக்கிற்கு ரூபாய் 450 அனுப்பிவைக்கவும் .

                                நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                 நமது கோட்டத்தில்  புதிதாக பணியில் சேர்ந்த GDS ஊழியர்கள் யாருக்கெல்லாம் இதுவரை ரெகுலர் ENGAENENT உத்தரவு (CONFIRMATION ) வரவில்லையோ அவர்களது தகவல்களை நமது கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவும் .2019 முதல் ரெகுலர் ENGAENENT உத்தரவு வராத GDS ஊழியர்கள் பல பேர் இருக்கிறார்கள் .இதுவரை 20 தோழர்கள் தங்களது தகவல்களை தெரிவித்துள்ளனர் . இடமாற்றம் /போனஸ் இவைகளை பெற ரெகுலர் ENGAENENT உத்தரவு அவசியம் .எதற்காக இந்த காலதாமதம் சான்றிதழ் சரிபார்ப்பு எங்கே சென்றிருக்கிறது எங்கே தேங்கிக்கிடக்கிறது என்ற தகவல்களை திரட்டி  நமது  தோழர்களுக்கு உதவிடுவோம் .

தோழமையுடன் II.ஞான பாலசிங் கோட்ட செயலர் AIGDSU  நெல்லை 

Monday, June 21, 2021

 அன்பார்ந்த தோழர்களே !

                        நமது மாவட்டத்தில் மீண்டும் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் பேருந்து வசதி இல்லாத ஊழியர்களுக்குக்காவது அருகாமையில் உள்ள அலுவலகத்தில் பணிசெய்திட அனுமதி அளிக்கும்படி கோட்ட நிர்வாகத்திற்கு நாம் எழுதிய கடிதம் 

NFPE

ALL INDIA POSTAL EMPLOYEES UNION 

                                GROUP-C                                                                          TIRUNELVELI DIVISIONAL BRANCH

TIRUNELVELI—627002

No.P3-ORG  / dated at Tirunelveli  627002  the 21.06.2021

To

The Sr. Supdt. of Post Offices,

Tirunelveli Division

Tirunelveli-627002

Sir,

        Though the state Government has given guidelines for many relaxations during lockdown from 21.6.2021 , the transportation services have not yet been restored.  Hence this union put forth an appeal for issuing orders towards attachment of officials in nearby offices to their residences, for whoever applies for it and  if their application is found genuine and reasonable. 

                     It is based on humanitarian grounds as it is a much difficult task  for anyone who attends office quite distant from their residences. Favorable orders are solicited

                                                             Thanking you Sir

                                                                                                     Yours Sincerely

                                                                                                    S.K.JACOBRAJ

 

 

.


அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 

                                                   தடுப்பூசியும் --நிர்வாகத்தின் தட்டிக்களிப்பும்   !

                                                நமது மாநிலத்தில் அனைத்து ஊழியர்களும் கொரானா தடுப்பூசியை  போட்டுக்கொள்ளவேண்டும் என்றும் தடுப்பூசி போடாதவர்களுக்கு கட்டாயமாக   அவர்களது சொந்தவிடுப்பில் அனுப்பிவிட்டு தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை காட்டியபிறகே பணிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்கின்ற ஒரு அறிவிப்பை மாநில நிர்வாகம் 15.06.2021 அன்று வெளியிட்டிருந்தது .மாநில நிர்வாகத்தின் இந்த மிரட்டல் கலந்த உத்தரவினை   கண்டு அனைத்து ஊழியர்களின் மத்தியில் கோபமும் அதிருப்தியும் நிலவியது .

                                       நமது மாநிலச்சங்கமும் 15.06.2021 அன்றே மாநில நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி நமது நிலைப்பாட்டினை மிக சிறப்பாக எடுத்துக்காட்டியிருந்தது  .இந்த பின்னணியில் மாநில நிர்வாகம் 18.06..2021 அன்று மற்றுமொரு தாக்கீதை  அனுப்பியுள்ளது .அதில் ஊழியர்களுக்கான முன்னெச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதலை இணைத்து வெளியிட்டுள்ளது .அதன் படி 

1.தடுப்பூசி போடுவதற்கான வயது 18 க்கு மேல் இருக்கவேண்டும் 

2.வேறு தடுப்பூசி செலுத்தியவர்கள் 14 நாட்கள் இடைவெளியில் தான் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் 

3.முதல் டோஸ் எந்தவகை தடுப்பூசி போடப்பட்டதோ அதே வகை தான் இரண்டாவது டோஸ் போடவேண்டும் 

4.மருந்து மற்றும் மாத்திரைகளில் ஒவ்வாமை ,அலர்ஜி ஏற்படக்கூடியவர்கள் தடுப்பூசியை தவிர்க்கலாம் 

.5.அதேபோல் கர்ப்பிணி பெண்களும் ,பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசியை தவிர்க்கலாம் 

6.ஏற்கனேவே கோவிட் பாதித்தவர்கள் நான்கு முதல் 8 வாரங்களுக்கு தடுப்பூசி செலுத்தவேண்டாம் 

7.உடலில் ரத்த உறைவு சம்பந்தப்பட்டவர்களும் தடுப்பூசியை தவிர்க்கலாம் .

8.நீரழிவு ,இருதய நோயாளிகள் ,நரம்பு சம்பந்தமான பாதிப்பு உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் .

9.உடலில் எதிர்ப்பு சக்தி குறையுள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசி குறைவான பயனே தரும் என்பது குறிபிடத்தக்கது 

                                கொரானா முதல் பரவலின் போதே அஞ்சல் துறை அத்தியாவசிய துறை என்றும் அஞ்சல் ஊழியர்கள் கொரானா வீரர்கள் என்றும் பாரத பிரதமரால் பாராட்டு பத்திரங்கள் கொடுக்கப்பட்டாலும் கோட்ட மட்ட அதிகாரிகள் இந்த கொரானா காலத்தில் தங்களது உயிரை  துச்சமென நினைத்து பணிக்கு வரும் ஊழியர்களுக்காக  குறைந்தபட்சம் மாவட்ட சுகாதார ,ஆட்சியாளர்களை அனுகி தடுப்பூசிகளை போடுவதற்கு சிறு துரும்பை கூட எடுத்திட தயங்குவது ஏனோ ? நமது மாநிலசங்கம் வலியுறுத்திய பிறகாவது நிர்வாகம் தனது மௌனத்தை களைத்திடவேண்டும் .ஊழியர்கள் நலன் பாதுகாக்க படவேண்டும் .

நன்றி .தோழமையுடன் S.K.ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை  


Saturday, June 19, 2021

                                   முடிவுக்கு வருமா பஞ்சப்படி முடக்கம் ?

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

    வருகிற 26.06.2021 அன்று நேஷனல் JCM கூட்டம் புதுடெல்லியில்  கேபினட் செயலாளர் தலைமையில் நடைபெறுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.அதில் முக்கிய ஆய்படுபொருளாக மத்திய அரசு  ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்ட மூன்று தவணை  பஞ்சபடியை வழங்குவது குறித்து விவாதிக்கப்படப்போகிறது என்பது பரவலாக பேசப்படும் செய்தியாக இருக்கிறது .அரியர்ஸ் எல்லாம் கிடையாது தரவேண்டிய 11 சதம் DA 01.07.2021 முதல் நோஷனல் ஆக நிர்ணயம் செய்து கொடுத்தால்போதும் என்கின்ற மனநிலையில் சராசரி ஊழியர்கள் வந்துவிட்டார்கள் . இந்த 18 மாதங்களுக்குள் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு கிடைக்கவேண்டிய கிராஜுட்டி மற்றும் ஈட்டிய விடுப்பிற்கான (EL )ஊதியங்களில் உள்ள மீதமுள்ள தொகை   இவைகளையும் சேர்த்து பெறவேண்டும் என்பதில் நமது தலைவர்கள்  உறுதியாக இருப்பதாக தெரிகிறது .

                         கடந்த மார்ச் -2020 யில் கொரானா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மத்திய அரசு மே -2020 யில் 18 மாதங்களுக்கு பஞ்சபடியை முடக்குவதாக அறிவித்தது .அதன்படி  வருகிற 30.06.2021 யுடன் 18 மாதங்கள்முடிவடைகிறது .அரசு அறிவித்தபடி 18 மாதங்கள் முடிந்த பின்னனியில் 2021  ஜூலை 1 ம் தேதிமுதல் நமக்கு வழங்கப்படவேண்டிய மூன்று தவணை பஞ்சபடியை தந்திடுமா ? இல்லை இன்னும் கால தாமதம் படுத்துமா என்பது  மிக பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது .இன்றைய  பஞ்சப்படி முடக்கத்தினால் மட்டும் அரசுக்கு 37530.08 கோடி மிச்சம் ஆனதாகவும் இந்த தொகை  கொரானாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட பயன்படுத்தப்படும் என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது  

                           கடந்த  26.02.2021 அன்று  நடைபெற்ற NJCM கூட்டத்தில் 08.02.2021 உச்ச நீதிமன்ற தீர்ப்பினை சுட்டிக்காட்டி ஊழியர்களின் பஞ்சப்படி என்பதும் சம்பளத்தின் ஒருபகுதிதான் ஆகவே பஞ்சபடியை  நிறுத்திவைக்க அரசுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என விரிவாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது 

                              ஆனால் லாக்-டவுன் காலத்தில் தான் மத்தியஅரசு தொழிலாளர் சட்ட திருத்தம் ,வங்கிகள் இணைப்பு ,காப்பீட்டு துறையில் 74 சதம் அன்னிய முதலீடு ,பாதுகாப்பு துறைகளிலும் கைவைப்பு ,சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிகள் குறைக்க முனைப்பு என  மறைமுக தாக்குதல்களையும் நடத்திக்கொண்டிருந்தது .

                               இந்த சூழ்நிலையில் அரசு ஒரு முன்மாதிரி அரசாக செயல்பட்டு தொழிலாளர்களின்  கோரிக்கைகளில் எந்த அளவு செவிசாய்க்க போகிறது என்பது கூடிய விரைவில் தெரிய வரும் .

                                 இதற்காகத்தான் நமது தொழிற்சங்கங்கள் கடந்த மே 22-05.2020 அன்று முதற்கட்ட ஆர்ப்பாட்டம் மத்திய பட்ஜெட் சமர்ப்பித்த 01.02.2021 ,அதனை தொடர்ந்து 15.03.2021 ,மற்றும் 26.05.2021 ஆகிய நாட்களில் தங்களது எதிர்ப்பு குரலினை பதிவு செய்திருந்தன ..இதில் தொழிற்சங்கங்கள் என்பது அஞ்சல் துறையில் நமது NFPE பேரியக்கம் மட்டுமே என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும் .

                            சுதந்திர இந்தியாவில் 18 மாதங்கள் பஞ்சப்படி முடக்கம் என்பது இதுதான் முதல்தடவை .  இதற்கு முன்பு காங்கிரஸ் காலத்தில் கூட ஊழியர்களிடம் கட்டாய சேமிப்பு பத்திரங்களை வாங்கிட சொல்லி உத்தரவிட்டதாக கேள்விப்பட்டது  நினைவிற்குவருகிறது ..

                            ஊதியத்தின் ஒருபகுதி மற்றும் ஓய்வூதியத்தின் ஒருபகுதிதான் பஞ்சப்படி எனும் உச்சநீதிமன்ற வார்தைகளுக்கு மதிப்பளிக்குமா மத்திய அரசு ?

தோழமையுடன் S.K.ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை  

                               



                      

Wednesday, June 16, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                                  முக்கிய செய்திகள்  

*அஞ்சலகங்களில் வேலைநேரத்தை பழைய நிலைக்கு கொண்டுவருவதில் தமிழகம் முழுவதும் கோட்ட அதிகாரிகள் படுவேகமாக செயல்பட்டு தங்கள் கடமையை நிறைவேற்றியுள்ளார்கள் .நமது  கோட்டத்திலும் போக்குவரத்து சீர்படும் வரை NEAR BY ஸ்டேஷன்களில் பணிபுரியும் சில ஊழியர்களையாவது  அட்டச்மெண்ட் செய்யப்பட்ட அலுவலகங்களில் பணியாற்றிட நாம் கேட்டுள்ளோம் .  

*மேலும் ரோஸ்டர் தொடரக்கூடாது என பெரும்பாலனான அதிகாரிகள் தங்கள் பின்னோட்டங்களை மாநில நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளதாக அறிகிறோம் ..

*கோவிட் தடுப்பூசி போடாதவர்கள் தங்கள் சொந்த விடுப்பில் செல்லவும் தடுப்பூசி போட்டவர்கள் அதற்கான சான்றை காட்டிடவும் மாநில நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது .அந்தந்த கோட்ட நிர்வாகமே தடுப்பூசிக்கான சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்துகொடுக்கலாம் என்ற சிந்தனை ஏனோ நிர்வாகத்திற்கு இன்றுவரை எழவில்லை .

 *POSB உத்தரவு 10 /2021இன் படி SAS /MPKBY  முகவர்கள் தங்களது முதலீட்யாளர்களின் சேமிப்பு தொகையினை SB -7 படிவம் மூலம் முதலீடு   செய்ய அனுமதிக்க கூடாது என்றும் இதுகுறித்து பல்வேறு முகவர்கள் அமைப்புகள் கொடுத்த வேண்டுகோள்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் இந்த உத்தரவுகள் தெரிவிக்கின்றது 

*ஒன்றுக்கு மேற்பட்ட அஞ்சலக காப்பீடு உள்ள பாலிசிதாரர்கள் அவர்களது அனைத்து பாலிசிகளின் பிரிமியத்தையும் ஒரே CUSTOMER-ID மூலம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது ...

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --கோட்ட செயலர் நெல்லை  

Tuesday, June 15, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

                                                           முக்கிய செய்திகள் 

*ஊரடங்கின் தளர்வினை தொடர்ந்து அஞ்சலகங்களில் வேலைநேரத்தை மீண்டும் பழைய நிலைக்கு அமுல்படுத்திட மாநில அஞ்சல் நிர்வாகம் 14.06.2021 அன்று உத்தரவிட்டுள்ளது .மேலும் ரோஸ்டர் முறை தொடர வேண்டுமா ?என்கின்ற கருத்தையும் 16.06.2021 குள் அனுப்பிட அனைத்து மட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

*BSNL நெட் கிடைக்காத இடங்களில் 4G DEVICE பயன்படுத்திட அஞ்சல் வாரியம் அனுமதியளித்துள்ளது .முதல்கட்டமாக நாடுமுழுவதும் 3000 DEVICEயும் அதில் தமிழகத்தில் 1611 க்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .

*எழுத்தர் பிரிவுகளை தொடர்ந்து தபால்காரர் &MTS பிரிவிற்கான SPORTS QUOTA  தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் மாநில நிர்வாகத்தால் வெளிவந்துள்ளது .நமது கோட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழியர் மதுபாலா (MTS) அவர்களுக்கு வாழ்த்துக்கள் .மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கையில் தமிழகத்தில் தான் SPORTS QUOTA  நியமனங்கள் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . 

*முடக்கப்பட்ட பஞ்சப்படி குறித்து விவாதிக்க நேஷனல் JCM  ஊழியர் தரப்பு , அரசு பணியாளர்கள் மற்றும் நிதி அமைச்சக செயலாளர்களுடன் வருகிற 26.06.2021 அன்று சந்தித்து பேசுகின்றனர் .

*கருணை அடிப்படையில் இறந்த GDS ஊழியர்களுக்கு பணி விரைந்து வழங்கிடும் ஆயத்த நடவடிக்கைகள்  மாநில நிர்வாகத்தால் முடுக்கிவிடப்பட்டுள்ளது .அதன்படி அந்தந்த உபகோட்டங்கள் வாயிலாக வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் மற்றும் இதுவரை விண்பிக்காதவர்கள் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டுவருகிறது .நமது தோழர்கள் தங்கள் பகுதியில் பணியின் போது இறந்த GDS ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த செய்தியினை கொண்டு சேர்க்கும் படி கேட்டுக்கொள்ள படுகிறார்கள் .

                                     நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள்  நெல்லை 

Thursday, June 10, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 

                                  உதவிய உ(ள்ள )ங்களுக்கு  நன்றி ! நன்றி !--சிலமணிநேரத்தில் ரூபாய் 17000 --- அனைத்து சொந்தங்களுக்கும் நன்றி நன்றி 

திருவண்ணாமலை கோட்ட எழுத்தர் தோழர் திரு .முகமது ஷெரிப்  அவர்களின் கொரானா பாதிப்பு அதனை தொடர்ந்து ஏற்பட்ட கரும்புஞ்சை நோயினால் பார்வையை இழக்கக்கூடிய கட்டத்தில் அவரது கண்களை அகற்றிட நடக்கும் அவசர சிகிச்சைக்கு உடனடியாக தேவைபடும் ரூபாய் 8 லட்சம் தொகைக்காக உதவிக்கரம் நீட்டிட நமது  மாநிலச்சங்க  வாட்ஸாப்ப் குழுவில் பதியப்பட்ட வேண்டுகோளை தொடர்ந்து நமது கோட்ட வாட்ஸாப்ப் குழுவில் இளந்தோழர் மகாராஜன் OA  கோட்ட அலுவலகம் அவர்களால் பதியப்பட்ட செய்தியை பார்த்து தானாக முன்வந்து நன்கொடைகளை வழங்கிய நமது அன்பு சொந்தங்களுக்கு NELLAI -NFPE சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ..செய்தி பதியப்பட்ட   சிலமணிநேரத்தில் ரூபாய் 17000 நமது கோட்ட  சங்க உறுப்பினர்களால் அனுப்பப்பட்டுள்ளது என்பதனை நன்றியோடு தெரிவித்துக்கொள்கிறோம்  இதுவரை ...1.தோழர் மகாராஜன் OA --1000 2. தோழியர் ஹேனா SPM மூன்றடைப்பு -1000 3.தோழியர் ஆரோக்கிய வளர்மதி  DY POSTMASTER பாளை --1000 4.தோழர் A.சுப்ர மணியன் DSM பாளை --1000 5.தோழியர் S.விஜயராணி SPM குலவனிகர் புரம் --1000  6.தோழர் S.வள்ளி நாயகம் SPM சுத்தமல்லி -1000 7.தோழியர் தனுஜா OA -1000 தோழியர் 8.உஷா தேவி PA மானுர் -1000 9.தோழியர் அருணாரணி PA டவுண் -1000 10.தோழியர் துர்கா PA பாளை -1000  11.தோழியர் அனுராதா SPM பர்கிட்மாநகரம் --1000 12.தோழியர் செல்லம்மாள் LSGPA திசையன்விளை --1000 13.தோழர் SK .ஜேக்கப் ராஜ் LSGPA பாளை -1000 14.தோழியர் விஜயலட்சுமி LSGPA பேட்டை -1000 15.தோழர் ஜஹாங்கிர் PA TVLHO -1000 16.தோழியர் ஜெயலட்சுமி PA TVLHO  -1000 17.தோழியர் சுபா SPM ராஜவல்லிபுரம் -1000...தொடரட்டும் நமது சேவைகள் -உதவி என்பது சொல் அல்ல -செயல்    தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Tuesday, June 8, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

கோவிட்  பெருந்தொற்று காலத்தில் பணிக்கு வராத ஊழியர்களின்  விடுப்பு  நாட்களை எவ்வாறு ஒழுகுபடுத்தலாம் என்ற முந்தைய ஆணைக்கு புதிய விளக்கத்தை DOPT &TRG 07.06.2021 தேதியன்று வெளியிட்டுள்ளது .அதன் சாராம்சத்தை உங்கள் பார்வைக்கு தருகிறோம் 

a ) அரசு ஊழியருக்கு கோவிட் பாசிட்டிவ் உறுதிசெய்ய பட்டநிலையில் அவர் அவரது வீட்டில் தனிமைபடுத்தப்பட்டிருந்தால் ......

(i )  அவருக்கு 20 நாட்கள் COMMUTTED  விடுப்பு வழங்கலாம் (மருத்துவ சான்று இல்லாமல் வெறும் கோவிட் பாசிட்டிவ் என சான்று மட்டும் போதும் 

(ii )COMMUTEED  விடுப்பு இல்லாத பட்சத்தில் 15 நாட்கள் சிறப்புவிடுப்பு  அதனை தொடர்ந்து  EL /HPL யை (EL /HPL இல்லாத பட்சத்தில் EXOL )தொடர்ந்து 5 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம் 

b )அரசு ஊழியருக்கு கோவிட் பாசிட்டிவ் ஆனபின் அவர் மருத்துவமனையில் இருந்தால் 

(i)அவருக்கு 20 நாட்கள் COMMUTTED விடுப்பு வழங்கலாம் (மருத்துவ சான்று இல்லாமல் வெறும் கோவிட் பாசிட்டிவ் என சான்று மட்டும் போதும் ) 

(ii )COMMUTTED விடுப்பு இல்லாத பட்சத்தில் 15 நாட்கள் சிறப்புவிடுப்பு  அதனை தொடர்ந்து  EL /HPL யை (EL /HPL இல்லாத பட்சத்தில் EXOL )தொடர்ந்து 5 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம் .

(III) 20 நாட்களுக்கு பிறகும் விடுப்புதேவைப்பட்டால் எஞ்சியுள்ள நாட்களுக்கு COMMUTTED விடுப்பு வழங்கலாம் 

C ) குடும்ப உறுப்பினர்களுக்கு கோவிட் பாசிட்டிவ்என்றால் 

(i) 15 நாட்கள் சிறப்பு விடுப்பு  வழங்கலாம் .

(ii  தொற்று ஏற்பட்டவருடன் நேரடி தொடர்பில்  இருந்திருந்தால் 7 நாட்களுக்கு வீட்டில் இருந்து பணி செய்ததாக கணக்கில் கொண்டு பணி காலமாக   கருதப்படும் 

d )  கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் (Containment Zone ) வசிப்பவராக இருந்தால்  கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து  அந்தப்பகுதி  விலக்கி கொள்ளும் வரை  வீட்டில் இருந்து பணி செய்ததாக கணக்கில் கொண்டு பணி காலமாக   கருதப்படும் 

இந்த  உத்தரவு முதலாம் ஊரடங்கு பிறப்பித்த 25.03.2020 முதல் மறு உத்தரவு வரும் வரை  பொருந்தும் .இது பழைய காலங்களில் வேறு விடுப்புகள் வழங்கியிருந்தாலும் ஊழியருக்கு பயன்பெறும் வகையில் மாற்றிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது .இந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட  மருத்துவ சான்றிதழ் இல்லாமல் எடுத்த EXOL நாட்கள் சேவைக்காலத்திற்கு கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும் .

இந்த உத்தரவினை தொடர்ந்து நமது இலாகா உத்தரவினை வெளிட்டபிறகு பாதிக்கப்பட்ட ஊழியர்கள் ஏற்கனவே எடுக்கப்பட்ட விடுப்பினை தங்களுக்கு பயனுள்ள விடுப்பாக மாற்றிக்கொள்ள விண்ணப்பிக்கலாம் .இதுகுறித்து உதவிகள் தேவைப்படுவோர் கோட்ட சங்கத்தை அனுகவும் .

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள்  நெல்லை