முடிவுக்கு வருமா பஞ்சப்படி முடக்கம் ?
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
வருகிற 26.06.2021 அன்று நேஷனல் JCM கூட்டம் புதுடெல்லியில் கேபினட் செயலாளர் தலைமையில் நடைபெறுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.அதில் முக்கிய ஆய்படுபொருளாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்ட மூன்று தவணை பஞ்சபடியை வழங்குவது குறித்து விவாதிக்கப்படப்போகிறது என்பது பரவலாக பேசப்படும் செய்தியாக இருக்கிறது .அரியர்ஸ் எல்லாம் கிடையாது தரவேண்டிய 11 சதம் DA 01.07.2021 முதல் நோஷனல் ஆக நிர்ணயம் செய்து கொடுத்தால்போதும் என்கின்ற மனநிலையில் சராசரி ஊழியர்கள் வந்துவிட்டார்கள் . இந்த 18 மாதங்களுக்குள் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு கிடைக்கவேண்டிய கிராஜுட்டி மற்றும் ஈட்டிய விடுப்பிற்கான (EL )ஊதியங்களில் உள்ள மீதமுள்ள தொகை இவைகளையும் சேர்த்து பெறவேண்டும் என்பதில் நமது தலைவர்கள் உறுதியாக இருப்பதாக தெரிகிறது .
கடந்த மார்ச் -2020 யில் கொரானா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மத்திய அரசு மே -2020 யில் 18 மாதங்களுக்கு பஞ்சபடியை முடக்குவதாக அறிவித்தது .அதன்படி வருகிற 30.06.2021 யுடன் 18 மாதங்கள்முடிவடைகிறது .அரசு அறிவித்தபடி 18 மாதங்கள் முடிந்த பின்னனியில் 2021 ஜூலை 1 ம் தேதிமுதல் நமக்கு வழங்கப்படவேண்டிய மூன்று தவணை பஞ்சபடியை தந்திடுமா ? இல்லை இன்னும் கால தாமதம் படுத்துமா என்பது மிக பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது .இன்றைய பஞ்சப்படி முடக்கத்தினால் மட்டும் அரசுக்கு 37530.08 கோடி மிச்சம் ஆனதாகவும் இந்த தொகை கொரானாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட பயன்படுத்தப்படும் என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது
கடந்த 26.02.2021 அன்று நடைபெற்ற NJCM கூட்டத்தில் 08.02.2021 உச்ச நீதிமன்ற தீர்ப்பினை சுட்டிக்காட்டி ஊழியர்களின் பஞ்சப்படி என்பதும் சம்பளத்தின் ஒருபகுதிதான் ஆகவே பஞ்சபடியை நிறுத்திவைக்க அரசுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என விரிவாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது
ஆனால் லாக்-டவுன் காலத்தில் தான் மத்தியஅரசு தொழிலாளர் சட்ட திருத்தம் ,வங்கிகள் இணைப்பு ,காப்பீட்டு துறையில் 74 சதம் அன்னிய முதலீடு ,பாதுகாப்பு துறைகளிலும் கைவைப்பு ,சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிகள் குறைக்க முனைப்பு என மறைமுக தாக்குதல்களையும் நடத்திக்கொண்டிருந்தது .
இந்த சூழ்நிலையில் அரசு ஒரு முன்மாதிரி அரசாக செயல்பட்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளில் எந்த அளவு செவிசாய்க்க போகிறது என்பது கூடிய விரைவில் தெரிய வரும் .
இதற்காகத்தான் நமது தொழிற்சங்கங்கள் கடந்த மே 22-05.2020 அன்று முதற்கட்ட ஆர்ப்பாட்டம் மத்திய பட்ஜெட் சமர்ப்பித்த 01.02.2021 ,அதனை தொடர்ந்து 15.03.2021 ,மற்றும் 26.05.2021 ஆகிய நாட்களில் தங்களது எதிர்ப்பு குரலினை பதிவு செய்திருந்தன ..இதில் தொழிற்சங்கங்கள் என்பது அஞ்சல் துறையில் நமது NFPE பேரியக்கம் மட்டுமே என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும் .
சுதந்திர இந்தியாவில் 18 மாதங்கள் பஞ்சப்படி முடக்கம் என்பது இதுதான் முதல்தடவை . இதற்கு முன்பு காங்கிரஸ் காலத்தில் கூட ஊழியர்களிடம் கட்டாய சேமிப்பு பத்திரங்களை வாங்கிட சொல்லி உத்தரவிட்டதாக கேள்விப்பட்டது நினைவிற்குவருகிறது ..
ஊதியத்தின் ஒருபகுதி மற்றும் ஓய்வூதியத்தின் ஒருபகுதிதான் பஞ்சப்படி எனும் உச்சநீதிமன்ற வார்தைகளுக்கு மதிப்பளிக்குமா மத்திய அரசு ?
தோழமையுடன் S.K.ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment