அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
முக்கிய செய்திகள்
*ஊரடங்கின் தளர்வினை தொடர்ந்து அஞ்சலகங்களில் வேலைநேரத்தை மீண்டும் பழைய நிலைக்கு அமுல்படுத்திட மாநில அஞ்சல் நிர்வாகம் 14.06.2021 அன்று உத்தரவிட்டுள்ளது .மேலும் ரோஸ்டர் முறை தொடர வேண்டுமா ?என்கின்ற கருத்தையும் 16.06.2021 குள் அனுப்பிட அனைத்து மட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
*BSNL நெட் கிடைக்காத இடங்களில் 4G DEVICE பயன்படுத்திட அஞ்சல் வாரியம் அனுமதியளித்துள்ளது .முதல்கட்டமாக நாடுமுழுவதும் 3000 DEVICEயும் அதில் தமிழகத்தில் 1611 க்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .
*எழுத்தர் பிரிவுகளை தொடர்ந்து தபால்காரர் &MTS பிரிவிற்கான SPORTS QUOTA தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் மாநில நிர்வாகத்தால் வெளிவந்துள்ளது .நமது கோட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழியர் மதுபாலா (MTS) அவர்களுக்கு வாழ்த்துக்கள் .மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கையில் தமிழகத்தில் தான் SPORTS QUOTA நியமனங்கள் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
*முடக்கப்பட்ட பஞ்சப்படி குறித்து விவாதிக்க நேஷனல் JCM ஊழியர் தரப்பு , அரசு பணியாளர்கள் மற்றும் நிதி அமைச்சக செயலாளர்களுடன் வருகிற 26.06.2021 அன்று சந்தித்து பேசுகின்றனர் .
*கருணை அடிப்படையில் இறந்த GDS ஊழியர்களுக்கு பணி விரைந்து வழங்கிடும் ஆயத்த நடவடிக்கைகள் மாநில நிர்வாகத்தால் முடுக்கிவிடப்பட்டுள்ளது .அதன்படி அந்தந்த உபகோட்டங்கள் வாயிலாக வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் மற்றும் இதுவரை விண்பிக்காதவர்கள் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டுவருகிறது .நமது தோழர்கள் தங்கள் பகுதியில் பணியின் போது இறந்த GDS ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த செய்தியினை கொண்டு சேர்க்கும் படி கேட்டுக்கொள்ள படுகிறார்கள் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment