அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
முக்கிய செய்திகள்
*அஞ்சலகங்களில் வேலைநேரத்தை பழைய நிலைக்கு கொண்டுவருவதில் தமிழகம் முழுவதும் கோட்ட அதிகாரிகள் படுவேகமாக செயல்பட்டு தங்கள் கடமையை நிறைவேற்றியுள்ளார்கள் .நமது கோட்டத்திலும் போக்குவரத்து சீர்படும் வரை NEAR BY ஸ்டேஷன்களில் பணிபுரியும் சில ஊழியர்களையாவது அட்டச்மெண்ட் செய்யப்பட்ட அலுவலகங்களில் பணியாற்றிட நாம் கேட்டுள்ளோம் .
*மேலும் ரோஸ்டர் தொடரக்கூடாது என பெரும்பாலனான அதிகாரிகள் தங்கள் பின்னோட்டங்களை மாநில நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளதாக அறிகிறோம் ..
*கோவிட் தடுப்பூசி போடாதவர்கள் தங்கள் சொந்த விடுப்பில் செல்லவும் தடுப்பூசி போட்டவர்கள் அதற்கான சான்றை காட்டிடவும் மாநில நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது .அந்தந்த கோட்ட நிர்வாகமே தடுப்பூசிக்கான சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்துகொடுக்கலாம் என்ற சிந்தனை ஏனோ நிர்வாகத்திற்கு இன்றுவரை எழவில்லை .
*POSB உத்தரவு 10 /2021இன் படி SAS /MPKBY முகவர்கள் தங்களது முதலீட்யாளர்களின் சேமிப்பு தொகையினை SB -7 படிவம் மூலம் முதலீடு செய்ய அனுமதிக்க கூடாது என்றும் இதுகுறித்து பல்வேறு முகவர்கள் அமைப்புகள் கொடுத்த வேண்டுகோள்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் இந்த உத்தரவுகள் தெரிவிக்கின்றது
*ஒன்றுக்கு மேற்பட்ட அஞ்சலக காப்பீடு உள்ள பாலிசிதாரர்கள் அவர்களது அனைத்து பாலிசிகளின் பிரிமியத்தையும் ஒரே CUSTOMER-ID மூலம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது ...
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment