அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
பஞ்சப்படி மற்றும் ஓய்வூதியர்களுக்கான ரிலீப் வழங்குவது தொடர்பாக 26.06.2021 அன்று தேசிய கூட்டு ஆலோசனைக்குழு (NJCM ) நடத்திய பேச்சுவார்தகைகள் குறித்து நாடெங்கும் பரப்பப்பட்டு வரும் செய்திகள் குறித்து நமது தோழர்களின் சந்தேகங்களுக்கு ஒரு விளக்கத்தை அளித்திடும் நோக்கில் இந்த பதிவினை பதிவிடுகிறோம் .
இந்த கூட்டத்தில் நேரடியாக கலந்துகொண்ட ஊழியர் தரப்பு பிரதிநிதிகள் மொத்தம் 6 பேர் .மீதமுள்ள நிர்வாகிகள் காணொளி காட்சியின் மூலம் பங்கேற்றார்கள் .நேரடியாக கலந்துகொண்டவர்களில் நமது NFPE சம்மேளன பொதுச்செயலர் தோழர் R.N.பராசர் அவர்களும் ஒருவர் ..
கேபினெட் செயலர் தலைமையில் நடைபெற்ற இந்தகூட்டத்தில் மொத்தம் 29 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டுள்ளன .ஏனைய கோரிக்கைகளைவிட DA குறித்தான கோரிக்கையில் அரசின் நிலைப்பாட்டை தெரிந்துகொள்ளவே ஊழியர்களும் ஓய்வூதியர்களும் பேரார்வத்தில் இருப்பது என்பது எதார்த்தமே !
முடக்கிவைக்கபட்ட பஞ்சபடியை கொடுத்திட ஏற்கனவே கடந்த பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் நிதித்துறையின் துணை அமைச்சர் கொடுத்த வாக்குறுதி நினைவூட்டப்பட்டது ..பஞ்சப்படி வழங்குவது குறித்து சாதகமான குறிப்புகள் மத்திய நிதித்துறை மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் அதற்குப்பின் அமைச்சரவையில் வைத்து விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் .இதற்கிடையில் சமூக வலைத்தளங்களால் பரப்பப்படும் செய்திகள் ஏதும் உண்மை இல்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும் .
பொதுவாக ஜூன் மாதத்திற்கான விலைவாசி புள்ளிகள் ஜூலை 14 ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் அதிலிருந்து முடிவெடுக்க குறைந்தபட்சம் 10 வாரங்கள் ஆகும் என்பதால் வழக்கமாக நமக்கு DA அறிவிப்புகள் செப்டெம்பரில் தான் வந்துகொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்க ..
பேச்சுவார்த்தை நம்பிக்கை தரும் வகையில் அமைந்திருந்ததாக தெரிவித்தனர் .நல்லெண்ணம் நம்பிக்கை வாக்குறுதி இவைகள் நமக்கும் அரசுக்கும் புதிதல்ல என்றாலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்கத்தை சரிசெய்ய பஞ்சபடியை மேலும் நிறுத்திவைக்காமல் வழங்குவதுதான் தீர்வு என்கின்ற நிலைக்கு நாடும் தள்ளப்பட்டுள்ளது என்பதும் திண்ணம் .
ஆக எப்படியிருந்தாலும் கொடுக்கின்ற பஞ்சப்படி முன்தேதியிட்டு வழங்கிட வாய்ப்பில்லை என்றும் நமது தலைவர்கள் தவணை முறையிலாவது நிலுவை தொகையோடு பெற்றிட வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள் .
ஜூலை 2021-- 15ம் தேதிக்குள் பஞ்சப்படி குறித்து சாதகமான அறிவிப்புகள் வெளியிடப்படவில்லையென்றால் மீண்டும் போராட்ட பாதையில் பயணிக்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது .
துக்ளக் சினிமாவில் வரும் வாசகம் ஒன்று நினைவிற்கு வருகிறது .
அமைச்சர் --அரசு ஊழியர்கள் போராடினால் என்ன செய்ய ?
பிரதமர் -பேச்சுவார்த்தை நடத்துங்கள்
.அமைச்சர்--மீண்டும் போராடினால் ?
பிரதமர்--மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்கள்
நன்றி ..தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment