மாநில செயற்தலைவர் மத்திய மண்டல செயலர் அண்ணன் R .குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தலைவா வா ! தலைமை ஏற்க வா !
புதுகை தந்திட்ட புதுமை தலைவனே !
பொறுமைக்கு பெருமை சேர்த்திட்ட
புதுவகை தோழனே !
அகவை அறுபதை -இன்று
தொட்டு பார்க்கும் இளைஞனே !
உன்னை வாழ்த்தி மகிழ்கின்றேன் ..
வாழ்க நீ பல்லாண்டு !
நெருக்கடியான காலத்தில் கூட -
நேர்த்தியான மாநில மாநாட்டை நடத்தி காட்டியனவே !
நெஞ்சில் ஏற்றிருந்த தலைவர்களை எல்லாம் --ஒருசேர
மேடையில் ஏற்றி அழகு பார்த்தவனே !(அண்ணன் பாலு உட்பட )
அண்ணன் KVS கட்டளையிட்ட பொழுதெல்லாம்
அகிலஇந்திய செயற்குழு முதல் பேரவை கூட்டம் வரை
குறையின்றி நடத்தி காட்டியவனே !.
மண்டல செயலராய் பணியாற்றிய போது
உன் ஆற்றல் கண்டோம் --
கஜா புயல் கோரத்தாண்டவத்தின் போது -உன்
கருணை உள்ளதை கண்டோம்
ஏற்றுக்கொண்ட தலைமையை எல்லா நேரத்திலும்
ஏற்றுக்கொண்டதில் இருந்து உன் விசுவாசத்தை கண்டோம்
எதிரிகள் என்பது உனக்கு எங்கும் இல்லை -என
கேள்விப்பட்ட போது உன் அன்பை கண்டோம்
பதவியை தேடி பலவாறு அலைகின்ற நாட்களில்
பதவி அல்லவா உன்னை தேடி அலைகிறது !
புறப்படு தோழா ! நம் தலைமை அழைக்கிறது
தலைவா வா ! தலைமை ஏற்க வா ! வா !
வாழ்த்துக்களுடன் .......SK .ஜேக்கப் ராஜ்
0 comments:
Post a Comment