அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
தடுப்பூசியும் --நிர்வாகத்தின் தட்டிக்களிப்பும் !
நமது மாநிலத்தில் அனைத்து ஊழியர்களும் கொரானா தடுப்பூசியை போட்டுக்கொள்ளவேண்டும் என்றும் தடுப்பூசி போடாதவர்களுக்கு கட்டாயமாக அவர்களது சொந்தவிடுப்பில் அனுப்பிவிட்டு தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை காட்டியபிறகே பணிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்கின்ற ஒரு அறிவிப்பை மாநில நிர்வாகம் 15.06.2021 அன்று வெளியிட்டிருந்தது .மாநில நிர்வாகத்தின் இந்த மிரட்டல் கலந்த உத்தரவினை கண்டு அனைத்து ஊழியர்களின் மத்தியில் கோபமும் அதிருப்தியும் நிலவியது .
நமது மாநிலச்சங்கமும் 15.06.2021 அன்றே மாநில நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி நமது நிலைப்பாட்டினை மிக சிறப்பாக எடுத்துக்காட்டியிருந்தது .இந்த பின்னணியில் மாநில நிர்வாகம் 18.06..2021 அன்று மற்றுமொரு தாக்கீதை அனுப்பியுள்ளது .அதில் ஊழியர்களுக்கான முன்னெச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதலை இணைத்து வெளியிட்டுள்ளது .அதன் படி
1.தடுப்பூசி போடுவதற்கான வயது 18 க்கு மேல் இருக்கவேண்டும்
2.வேறு தடுப்பூசி செலுத்தியவர்கள் 14 நாட்கள் இடைவெளியில் தான் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்
3.முதல் டோஸ் எந்தவகை தடுப்பூசி போடப்பட்டதோ அதே வகை தான் இரண்டாவது டோஸ் போடவேண்டும்
4.மருந்து மற்றும் மாத்திரைகளில் ஒவ்வாமை ,அலர்ஜி ஏற்படக்கூடியவர்கள் தடுப்பூசியை தவிர்க்கலாம்
.5.அதேபோல் கர்ப்பிணி பெண்களும் ,பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசியை தவிர்க்கலாம்
6.ஏற்கனேவே கோவிட் பாதித்தவர்கள் நான்கு முதல் 8 வாரங்களுக்கு தடுப்பூசி செலுத்தவேண்டாம்
7.உடலில் ரத்த உறைவு சம்பந்தப்பட்டவர்களும் தடுப்பூசியை தவிர்க்கலாம் .
8.நீரழிவு ,இருதய நோயாளிகள் ,நரம்பு சம்பந்தமான பாதிப்பு உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் .
9.உடலில் எதிர்ப்பு சக்தி குறையுள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசி குறைவான பயனே தரும் என்பது குறிபிடத்தக்கது
கொரானா முதல் பரவலின் போதே அஞ்சல் துறை அத்தியாவசிய துறை என்றும் அஞ்சல் ஊழியர்கள் கொரானா வீரர்கள் என்றும் பாரத பிரதமரால் பாராட்டு பத்திரங்கள் கொடுக்கப்பட்டாலும் கோட்ட மட்ட அதிகாரிகள் இந்த கொரானா காலத்தில் தங்களது உயிரை துச்சமென நினைத்து பணிக்கு வரும் ஊழியர்களுக்காக குறைந்தபட்சம் மாவட்ட சுகாதார ,ஆட்சியாளர்களை அனுகி தடுப்பூசிகளை போடுவதற்கு சிறு துரும்பை கூட எடுத்திட தயங்குவது ஏனோ ? நமது மாநிலசங்கம் வலியுறுத்திய பிறகாவது நிர்வாகம் தனது மௌனத்தை களைத்திடவேண்டும் .ஊழியர்கள் நலன் பாதுகாக்க படவேண்டும் .
நன்றி .தோழமையுடன் S.K.ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment