அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
ஆதார் பணிகள் இப்பொழுது அவசியமா ? ஊழியர்களின் உயிர் குறித்து நிர்வாகம் எப்பொழுதும் அலட்சியமா ?
அஞ்சலகத்தில் ஆதார் பணிகளை மீண்டும் தொடங்கிட மாநில நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது ..தமிழகஅரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் கொண்ட 11 மாவட்டங்களை தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என அறிவித்துள்ளது ..
கொரானா மூன்றாம் அலையை எதிர்நோக்கி கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில் மாநிலநிர்வாகத்தின் இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை .
பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கான தடைகள் இன்னும் விலக்கப்படாத சூழலில் ,கூட்டங்கள் விழாக்கள் நடத்துவதற்கு முற்றிலுமாக அனுமதி கொடுக்கப்படாத நிலையில் ஆதார் பணிகளை அஞ்சலகத்தில் தொடங்குவது ஆபத்தான ஒன்று மட்டுமல்ல மாநில நிர்வாகத்தின் இந்த முடிவும் அபத்தமானது என்பதனை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லவேண்டும் ..
ஆதார் பாணிகளுக்காக திரளப்போகும் மக்கள் கூட்டத்தை குறித்து இதுவரை எந்த நிர்வாகமும் கவலை பட்டதாக தெரியவில்லை .நாளொன்றுக்கு எத்தனை பேருக்கு நாம் எடுத்தாலும் கடைசியாக வந்த நபருக்கு சேவை மறுக்கப்பட்டால் கூட அவர்களது புகாருக்கு நிர்வாகம் விழுந்தடித்துக்கொண்டு அவருக்கும் ஆதார் சேவையை செய்யுங்கள் என்ற கட்டளையை பிறப்பிக்கத்தான் போகிறது .
ஆகவே நமது மாநிலச்சங்கம் ஊழியர்களின் உயிர் காக்கும் பிரச்சினைகளில் உடனடியாக தலையிட்டு கொரானா அச்சுறுத்தல்கள் நீங்கும் வரை ஆதார் பணிகளை நிறுத்தி வைத்திட மாநில நிர்வாகத்தை வலியுறுத்தவேண்டும் .மாநில நிர்வாகம் நமது கோரிக்கைகளில் செவிசாய்க்கவில்லை என்றால் நமது தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கவேண்டும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment