...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, August 31, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !வணக்கம் .

                    இலாகா தேர்வுகளுக்காக(LGO& POSTMAN EXAMINATION )  நமது முன்னாள் பொதுச்செயலர் அருமை  அண்ணன் KVS அவர்கள் தயாரித்து வெளிவந்துள்ள STUDY MATERIALS விற்பனைக்கு வந்துள்ளது .விருப்பமுள்ளவர்கள் கோட்ட சங்கத்தை தொடர்புகொள்ளவும் .மேலும் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளும் ஆன்லைன் மூலம் (GOOGLE-MEET )நடைபெற்றுவருகிறது .நமது கோட்டத்தில் இருந்து சுமார் 28 தோழர்கள் இந்த ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொண்டு வருகிறார்கள் .தேர்வுகள் சம்பந்தமாக வகுப்புகளில் சேர விரும்புகிறவர்களுக்கு  STUDY MATERIALS  புத்தக வடிவில் தேவைப்படுவோரும் NELLAI --NFPE கோட்ட செயலர்களை அனுகலாம் .

தமிழக அஞ்சல் வரலாற்றில் சமீபகாலமாக GDSTO PA  GDS TO போஸ்ட்மேன் போஸ்ட்மேன் /MTS TO PA  என அதிக எண்ணிக்கையில் தேர்ச்சிபெற்றுவருவதற்கு அவர்களுக்காக தொழிற்சங்கங்கள் உருவாக்கி கொடுத்த /கண்டுபிடித்து கொடுத்த காலி பணியிடங்களே முக்கிய காரணம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது .காலிப்பணியிடங்கள் சம்பந்தப்பட்ட கோட்டங்களோடு நின்றிருந்த காலம் மாறி அண்டை கோட்டங்களுக்கும் ஏன் RMS காலியிடங்களிலும் நமது அஞ்சல் பகுதி தோழர்கள் பதவி உயர்வு பெற்று இன்று மாநிலம் முழுவதும் நமது தோழர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்த NFPE பேரியக்கத்தின் முயற்சியும் பயிற்சியும் முக்கிய காரணம் என்பதை நினைவில் கொள்ளுவோம் !

               நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 

                                                டார்கெட்டும் --டார்ச்சரும் 

  தமிழகம்முழுவதும் இன்று அஞ்சல் ஊழியர்கள் மத்தியில்  நிர்வாகத்தால் பரப்பி விடப்பட்டிருக்கும் ஒரு சொல் டார்கெட் ...டார்கெட் ..ஒவ்வொருநாளும் ஊழியர்களை மனஉளைச்சலுக்கு உட்படுத்தும் இந்த மாய இலக்கை எட்டுவதற்கு கோட்ட நிர்வாகங்கள் கடைபிடிக்கும் அணுகுமுறைகள் கோட்டங்கள் தோறும் மாறுபடுகின்றன .ஒருநாள் POSB மெகா லாகின் ,மறுநாள் PLI /RPLI லாகின் ,அடுத்தநாள் TRANSACTION DAY அதற்கடுத்து AEPS  மெகா லாகின் எனவும் அறிவித்துவிட்டு ஒவ்வொரு லாகின் குறித்தும் புதுப்புது அறிவிப்புகள் குறைந்தது 10கணக்குகள் .பாலிசிகளுக்கு குறைந்தது பிரிமியம் 10000,CSC-SPV அன்று 10 CSC பணிகள் ,AEPS என்றால் குறைந்தது 10 பரிமாற்றங்கள் என ஊழியர்களை வி(மி )ரட்டி வரும் போக்குகள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன .இதற்கிடையில் ஒவ்வொரு ஆதார் அலுவலகங்களிலும் ஆதார் பணிகள், ,அறிவிக்கப்படும் பொழுதெல்லாம் தங்கப்பத்திரம் விற்றாகவேண்டும் என்ற அன்பு கட்டளைகள் வேறு ? 

                     நமது உபகோட்டம் கோட்ட அளவில் முதல் இடம் பிடிக்கவேண்டாமா என உப கோட்ட அதிகாரிகள் ,நமது கோட்டம் மண்டலத்தில் முதலிடம் பெறவேண்டாமா என கோட்ட அதிகாரிகள் என அவரவர் அவரவரர்களின் உயர்மட்டங்களில் பாராட்டும் சீராட்டும் பெறுவதற்கு நம்மை பிழிந்தெடுக்க தொடங்கிவிட்டார்கள் .

                             டார்கெட்டும் --டார்ச்சரும்  என்ன  ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளா ? RPLI வந்த பொழுதில் இதுபோன்ற நெருக்கடிகள் இருந்தன நமது மாநில சங்கத்தின் தொடர் போராட்டத்தினால் அன்று CPMG அவர்களே  டார்கெட்டும் இல்லை --டார்ச்சரும் இல்லை GDS ஊழியர்களை மோட்டிவேட் பண்ணுங்கள் போதும் என்றார்கள் .

                     ஆனால் இன்று சிலகோட்டங்களில் GDS ஊழியர் என்றால் சம்பளத்தை குறைப்பேன்  என்பதும் இலாகா ஊழியர்கள் என்றால் APAR மதிப்பெண்களை குறைப்பேன் என்றும் ,ஒருமையில் பேசுவதும் ,ஏசுவதும் என ஊழியர்களை அன்றாட பணிகளை செய்யவிடாமல் மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் நடக்கின்ற நிர்வாகத்தை கட்டுப்படுத்தவேண்டியது காலத்தின் அவசியம் .

                        கடிவாளம் இல்லாத குதிரைகளாக --அங்குசம் இல்லாத யானைகளாக திரிகின்ற போக்கை நம்மை விட்டால் வேறு யாரால் கட்டுப்படுத்திட முடியும் ..ஊழியர்களின் பொறுமையையும் அமைதியையும் கண்டு அலட்சியமாக நடத்தும் நிர்வாகத்திற்கு ஒன்று சொல்லுவோம் .இந்த அமைதி பொங்கும் முன் கடல் கொண்ட அமைதி ,வெடிக்கும் முன் எரிமலை கொடுக்கும் எச்சரிக்கை முனங்கல்கள் ....

                    ஊழியர்களின் மனநிலை இன்று கொதிநிலையில் இருக்கிறது ..நமது மாநிலச்சங்கம் அறைகூவல் விடுக்கின்ற பட்சத்தில் அன்றைய நாட்களை போல மண்டல அலுவலகங்கள் முன்பு நமது படையெடுப்பை நடத்தி காட்டுவோம் ! 

                                             கடையடைப்பு நடத்துகின்ற 

                                             காலங்கள் அல்ல --இது 

                                            படையெடுப்பு நடத்துகின்ற 

                                            காலம் இது -என்ற கவிஞனின் கூற்றை மெய்யாக்குவோம்

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை  

                    


              

Thursday, August 26, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !  வணக்கம் .

  25.08.2021 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை உங்கள் பார்வைக்கு தருகிறோம் .

1.கீழாம்பூர் -VK .புரம் மற்றும் IC பேட்டை -MS யூனிவெர்சிட்டி டெபுடேஷ ன் சென்ற ஊழியர்களின் பயணப்படி வழங்குவது தொடர்பாக அம்பை மற்றும் திருநெல்வேலி ASP களுக்கு தூர அளவுகளை அளந்திட அனுப்பப்பட்டுள்ளது .

2.தச்சநல்லூர் கவுண்டர் பார்ட்டிசிபேஷன் குறித்து LANDLORD க்கு இந்த பணிகளை செய்துதர அறிவுறுத்தப்படும் .கம்ப்யூட்டர் டேபிள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் .

3.சங்கர்நகர் அலுவகத்திற்கு புதிய பிரிண்டர் வழங்கிட ஏற்றுக்கொள்ளப்பட்டுள்து 

4.திருநெல்வேலி தலைமைஅஞ்சலகத்தில் பெண் ஊழியர்களுக்கான கூடுதல் கழிப்பறை கட்டித்தர மண்டல அலுவலகத்திற்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது 

5.VK .புரம் அலுவலக கட்டடத்திற்கு மாற்று இடம் குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது 

6.வள்ளியூர் மற்றும் அதன் சுற்றியுள்ள தென்பகுதிகளுக்கு மெயில் வேன் வசதிகள் செய்திட புதிய பரிந்துரையை மேற்கொள்ளப்படும் 

7.கோட்ட அலுவகத்தில் இருந்து இயக்கப்படும் திருநெல்வேலி டிவிசன் வாட்ஸாப் மூலம் ஊழியர்களை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருவதை குறித்து விவாதிக்கப்பட்டது .இதுஒன்றும் இலாகா செலவில் ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட செல்போன் அல்ல மேலும் இலாகா செலவில் RECHARCE செய்துதருவதும் இல்லை என சுட்டிக்காட்டியபோது SSP அவர்கள் இது வெறும் தகவல்களை பரிமாறிக்கொள்ள மட்டுமே எனவும் ஊழியர்கள் அதில் தங்கள் அலுவலக குறைகளை பதிவிட்டாலும் நிச்சயம் அந்த குறைகளை களைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்றும் SSP அவர்கள் தெரிவித்தார்கள் 

8.இட்டமொழி CASHOFFICE திசையன்விளைக்கு மாற்றிட ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது 

9.தபால்காரர்களுக்கு வழங்கப்பட்டுவரும் DRESS அலவன்ஸ் குறித்து விவாதிக்கப்பட்டது .பிறகோட்டங்களில் வழங்குவதில் உள்ள முறைகளை நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் விண்ணப்பித்த ஊழியர்களுக்கு உரிய பதில் வந்தவுடன் அதை மாநில அளவில் எடுத்து கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது 

10.மதுரை PSD யில் இருந்து தினமும் அதிகஎடைகொண்ட பார்சல்கள் பதிவு தபால்களாக வருவதால் அதை PSD க்கு டெலிவரி செய்வதில் உள்ள சிரமங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது .இதுகுறித்து விரைவில் மாற்று ஏற்பாடுகளை செய்திட  ஏற்றுக்கொள்ள பட்டது .

11.தோழர் லிங்கப்பாண்டி போஸ்ட்மேன் ஏர்வாடி அவர்களின் MACP குறித்தும் தோழர் கந்தசெல்வன் போஸ்ட்மேன் பணகுடி அவர்களின் இடமாறுதல் குறித்தும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கபட்டது . .

12.NDC பாளையில் ஊழியர்கள் இருக்கையில் அமர்ந்து பணிசெய்யும் அளவிற்கு இருக்கைகள் மாற்றி தரப்படும் என்றும் திருநெல்வேலி தலைமை HO விற்கு நான்கு மானிடர் வழங்கிட மீண்டும் போஸ்ட்மாஸ்டர் திருநெல்வேலிக்கு சில விளக்கங்கள் கேட்டு கடிதம் அனுப்பப்ட்டுள்ளதாகவம் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

                                   மாநில சங்கத்திற்கு நன்றி !நன்றி !

பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்திற்கு புதிதாக வாங்கப்பட்ட 63 KV ஜெனெரேட்டரை பொருத்திட கால தாமதம் ஏற்படுவதை கடந்த 12.08.2021 அன்று மதுரையில் நடைபெற்ற BI-MONTHLY கூட்டத்தில் PMG அவர்களிடம் வலியுறுத்தியதின் விளைவாக நேற்று AE (ELECTRICAL ) குழு பாளை தலைமை அஞ்சலகத்திற்கு வந்து ஆய்வு செய்துவிட்டு இன்னும் 2 வாரத்திற்குள் பணிகளை செய்திட போவதாக தெரிவித்து சென்றுள்ளார்கள் .நமது நெல்லை -NFPE இயக்கத்தின் தொடர் முயற்சிக்கு கிடைத்த மகத்தான சாதனைகளில் இதும் என்று என பெருமையோடு தெரிவித்து கொள்கிறோம் 

மேலும் தோழர் R .சண்முக சுப்ரமணியன் APS தோழரின் LSG RE-ALLAOTMENT கோவில்பட்டியில் இருந்து திருநெல்வேலிக்கு மாற்றி தருவதிலும் PMG SR அவர்களை அனுகி கடிதம் கொடுத்ததின் விளைவாக தோழர்  R .சண்முக சுப்ரமணியன் APS அவர்களுக்கு திருநெல்வேலி கோட்டத்திற்கு REALLOTMENT கிடைத்துள்ளது .இந்த இருபிரச்சினைகளை PMG SR அவர்களிடம் எடுத்துச்சென்று தீர்த்துவைத்த நமது மாநில செயலர் சகோதரர் வீரமணி அவர்களுக்கும் தென்மண்டல செயலர் தோழர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ..

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -- கோட்ட செயலர் நெல்லை 

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                           இலாகா தேர்வை எதிர்நோக்கியிருக்கும் எனதருமை சொந்தங்களே உங்களுக்கு ஒரு மகிழ்வான செய்தி ..

நமது NFPE பேரியக்கத்தின் சார்பாக நடத்தப்பட்டுவரும் இலாகா  தேர்விற்கான ஆன்லைன் வகுப்பினில் நமது கோட்டத்தின் சார்பாக இதுவரை 23 தோழர்கள் பயிற்சியில் பங்கேற்றுவருவது மகிழ்ச்சியே ! அவர்களுக்கான தேர்வு சம்பந்தமான புத்தகங்கள் இந்த வார இறுதியில் உங்களுக்கு வந்து சேரும் .மேலும் ஆன்லைன் பயிற்சியில் சேர விரும்புகிறவர்கள்(நெல்லை தோழர்கள் மட்டும் ) எங்களை தொடர்பு கொள்ளவும் 

SK .ஜேக்கப் ராஜ்  9442123416 NFPE -P3 கோட்ட செயலர் நெல்லை 

R.மகாராஜன் 9786619090  பயிற்றுனர் 

தோழமையுடன் NELLAI -NFPE 


Wednesday, August 25, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 

              மத்திய அமைச்சக MINISITRY OF PERSONNEL AND PUBLIC GRIVANCES PENSION , அரசு பணியாளர்கள் மற்றும் பயிற்சி (DOPT ) யில் இருந்து இந்திய அரசு துறைகளில் கருணை அடிப்படையிலான பணி வழங்குவது தொடர்பாக ஒருங்கினைந்த உத்தரவினை 23.08.2021 அன்று வெளியிட்டுள்ளது அதன்படி 

1.பணியில் இருக்கும் போது இறந்த ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களை அந்த துறையின் மூத்த அதிகாரி 30 நாட்களுக்குள் சந்தித்து இறந்த ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடிய பயன்களை குறித்து தெரிவிக்கவேண்டும் ..

2.அப்படி அந்த மூத்த அதிகாரி அந்த குடும்பத்தில் வசதியற்ற நிலை இருப்பதை அறிந்துகொண்டு அவர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி குறித்து விளக்கிட வேண்டும் 

3.அப்படி பட்ட சூழ்நிலையில் அந்த துறையின் அதிகாரிகளில் ஒருவர்  கருணை அடிப்படையிலான பணியினை விண்ணப்பிக்கும் முறைகுறித்தும் அந்த படிவத்தை நிரப்பி கொடுத்திட உதவிடவேண்டும் 

4.நிர்வாகம்  இது குறித்து திருப்தி அடைந்த பட்சத்தில் பெறப்பட்ட விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தமோ அல்லது கூடுதல் சேர்க்கை இருப்பின் சேர்த்திடவேண்டும் 

5.பெறப்பட்ட விண்ணப்பங்கள் முறைப்படுத்தபட்டபின் அந்த விண்ணப்பங்களுக்கு தனியாக பதிவு எண் கொடுத்து அந்தத்தகவல்களை சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிவித்திட வேண்டும் 

6.CBIC ,தபால் துறை ,பாதுகாப்புத்துறைகளில்  ஏற்கனவே மெரிட் பாயிண்ட் குறித்து  சுயமாக வடித்தெடுத்துள்ளதை போல் இதர துறைகளும் மெரிட் பாயிண்ட்  குறித்து முடிவெடுத்திட வேண்டும் .நமது துறையில் Relative merit points இலாகா ஊழியர்களுக்கு 2019யிலும் GDS ஊழியர்க்குக்கு 2015 யிலும் திருத்தப்பட்ட மெரிட் புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டது .

7.விண்ணப்பங்களை பதிந்து பதிவு எண்ணை தெரிவிக்கும்போதே நிரப்பப்போகும்  காலியிடங்கள் குறித்த தகவல்களை தெரிவிக்கவேண்டும் 

8.விண்ணப்பங்களை பரிசீலிக்க மூன்றுபேர் கொண்ட கமிட்டி செயல்படும் .இந்த கமிட்டி ஒவ்வொரு காலண்டர் வருடத்திற்கு ஒருமுறையும் அதிகமான விண்ணப்பங்கள் இருக்கும் பட்சத்தில் இரண்டு அல்லது அதற்கு மேலும் கூடலாம் 

9.பரிசீலிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது இந்த கமிட்டி தனது பரிந்துரையை கொடுக்கும் .இவைமுழுவதும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட மெரிட் பாயிண்ட் அடிப்படையில் இருக்கும் 

10.ஒவ்வொரு கூட்ட முடிவுகளும் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு கொடுக்கப்பட்ட புள்ளிகளோடு தெரிவிக்கப்படும் 

11.ஒவ்வொரு கூட்ட நடவடிக்கை குறிப்புகளும் மூன்று வாரத்திற்குள் அந்தந்த துறையின் வலைத்தளத்தில் வெளியிட வேண்டும் 

12 .கமிட்டியின் பரிந்துரையில் ஆட்சேபனை இருந்தால் அது அதற்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரிக்கு அனுப்பிவைக்கப்படும் .

    தோழர்களே ! கருணை அடிப்படையிலான பணி வழங்குவதில் இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு அதிகாரிகள் வழிகாட்டவேண்டும் என்பது வரவேற்கத்தக்கது .இறந்த ஊழியர்களின் இறுதிசடங்கில் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளவேண்டும் என்ற உத்தரவுகள் மெல்லமெல்ல மறைந்து போய் இன்று மெயில் ஓவர்சியர் சென்று சேமநல தொகையை கொடுப்பது வாடிக்கையாவிட்டது ...இன்று ஒருங்கிணைந்த வருமான சான்றிதழ் பெறமுடியாமல் இன்றளவும் வேலைக்கு விண்ணப்பிக்கமுடியாமல் இருக்கின்ற ஊழியர்குடும்பங்களுக்கு நிர்வாகம் உதவுகிறதோ இல்லையோ நாம் உதவிடுவோம் ! வழிகாட்டிடுவோம் ....

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Monday, August 23, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                         இந்த மாதம் நடைபெறவிருந்த  மாதாந்திர பேட்டி இரண்டுமுறை தள்ளிவைக்கப்பட்டு மீண்டும் 25.08.2021 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .நாம் ஏற்கனவே 15 பிரச்சினைகளை கோட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியிருக்கிறோம் .இந்த இடைப்பட்ட காலத்தில் நமது கவனத்திற்கு வந்த பாளை பார்சல் (NDC ) பிரிவில் உள்ள முக்கிய பிரச்சினையை கூடுதலாக சேர்த்து விவாதிக்க கேட்டிருக்கிறோம் ..

NFPE

       ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                    TIRUNELVELI DIVISIONAL BRANCH 

TIRUNELVELI—627002

------------------------------------------------------------------------------------

No.P3-MM/ dated at Tirunelveli 627002 the 23.08.2021

To

The Sr.Supdt. of Post Offices,

Tirunelveli Division

Tirunelveli-627002

Sir,

                Subject : Additional subject for monthly meeting-reg

               Ref-This union letter dtd...6.8.2021

              In continuation of the letter referred above,  the following one subject may please be taken up for discussion during the ensuing monthly meeting.

1. A standee type computer table of 3.5 feet in height, has been  supplied to NDC, Palayamkottai. So the PA working at NDC had to operate the PC only by standing , as the ordinary chairs do not suit its height. A  chair suitable for the height of  this computer table may be supplied earlier.

                                                                                                        Yours faithfully 

                                                                                                     S.K.JACOBRAJ

Monday, August 16, 2021

                               பாம்புக்கு பால் வார்த்த வல்லரசுகள் 

   அரண்மனைகளின் அழகிய நகரம் 

  ஆப்கானிஸ்தானம்  -இன்று 

 அழுகையின் கூக்குரலில் 


  வல்லரசுகளின் மடிகளில்மாறிமாறி  

  தவழ்ந்த - இந்த 

  அழகிய   புறா --இன்று 

  வல்லூறுகளின் பிடியில் ..


வினை விதைத்தவன் வினை அறுப்பான் 

என்பது சர்வேதேச பிரச்சனைகளிலும் 

நிரூபணமாகி இருக்கிறது 


சோவியத்தின்  பராமரிப்பில் 

ஜனநாயகம் துளிர்விட்ட போது 

அமெரிக்கா அதன் வேர்களில் 

வெந்நீர் பாய்ச்சியது 


பெண்களின் ஆளுமைகளை 

ஏற்றுக்கொள்ளாத தீவிரவாதம் 

தக்க தருணத்தை காத்திருந்து 

காவு கேட்க தொடங்கியது 


மெல்லமெல்ல பழமைவாதம் 

பின்வாங்கியபோது -தான் விதைத்த 

முட்களை தானே அகற்றிடவிட வேண்டிய 

கட்டாயத்தில் அமெரிக்கா 

அதற்குள் தன்னை பலப்படுத்தி 

வைத்திருந்தது தாலிபன் படைகள் 


அமெரிக்காவில் ஆட்சிமாற்றம் -இனி 

தேவையில்லாமல் தனது படைகளை 

ஏன் அங்கு என்று திரும்ப பெறுவதற்குள் 

தீவிரமானது தலிபான்களின் தாக்குதல் 


தாக்கு பிடிக்கமுடியாமல் 

தாமாகவே பணிந்தது அரசு ..

ஆட்சிமாற்றம் வந்தது --ஆனால் 

வரவேற்க அங்கே குடிமக்கள் இல்லை 


டவுண் பஸ்களில் இடம்பிடிக்க 

ஏறுவதைப்போல --விமானங்களில் 

உயிரை சுமந்துகொண்டு அந்நாட்டு மக்கள் 


விடுதலை?கிடைத்த சுவடுகள் ஏதுமின்றி 

நாட்டைவிட்டு ஓடும் குடிமக்கள் 

விந்தையாகவும் இருந்தது -

விசித்திரமாகவும் அமைந்தது 


இதையெல்லாம் தாண்டி சராசரி இந்தியனின் கவலை 

தலிபான்களை பிறைக்கொடி பறக்கும் 

மற்ற நாடுகள் ஆதரிக்கட்டும் 

செஞ்சேனை கொண்ட சீனாவும் ஆதரிக்கலாமா ?


நமது எல்லையை சுற்றி ஆபத்துகள் அதிகம் --

இனியாவது இந்தியாவில் சாதிகளை -மதங்களை 

தூக்கி எறிந்துவிட்டு நம் எல்லையை காப்போமா ?

சொந்தநாட்டில் நாம் சொர்க்கத்தை

 காணுவதைபோல் 

அண்டைநாடுகளில் வேறெங்காவது பார்க்கமுடியுமா ?

 --------- ஜேக்கப் ராஜ் ---




















Friday, August 13, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் !

மாநில நிர்வாகமே நேரடியாக மெகா லாகின் என களமிறங்கியபோது இன்னும் பொறுமை காப்பதா ? 

                        SB லாகின் .IPPB லாகின் ,ஆதார் ,EPOST ,AEPSஎன தொடர்கதையாகும் நெருக்கடிகள் ? தீர்வு என்ன ? தீர்க்கப்போவது யார் ? அஞ்சல் மூன்றை விட்டால் நம்மை காத்திட நாதியேது ?நமக்கெல்லாம் நீதியேது ?

                          சமீபகாலமாக மேளா .மெகா மேளா ,லாகின் day என கோட்டமட்டங்களில் இருந்துதான் நமக்கு டார்ச்சர் என நினைத்து மாநில /மண்டல நிர்வாகத்திற்கு நாம் நமது கோரிக்கைகளை வைத்துக்கொண்டிருந்தோம் .ஆனால் சமீபத்திய CPMG அவர்களின் உத்தரவினை பார்க்கும் பொழுது கோளாறு எங்கே என புரிகிறது ,ஆம் மாநில நிர்வாகம் இயக்குனரகத்தை கைகாட்டுகிறது ,இயக்குனரகமோ அமைச்சக  முடிவென்று கைகாட்டுகிறது ,கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு நோய் முற்றிவிட்டது இந்த பெரிய வியாதியை போக்க பெரிய மருத்துவர் போடும் பெரிய ஊசியால் தான் குணப்படுத்திட முடியும் .

ஆம் .அஞ்சல் வாரியம் அறிவிக்கும் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு லாகின் என்றால் அஞ்சல் எழுத்தர்கள் /SPMஎன INDOOR  பணி செய்திடும் ஊழியர்கள் எத்தனை வாடிக்கையாளர்களை சந்திக்கமுடியும் ?அலுவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் எல்லாம் எதாவது ஒரு கணக்கு வைத்தவர்கள் தானே ! அதையும் தாண்டி கணக்குகள் பிடிக்கவேண்டும் என்றால் அலுவலக வேலைநேரத்தில் அலுவலகத்தை அடைத்துவிட்டு கேன்வாஸ் செய்ய அதிகாரபூர்வமான அனுமதியை தரவேண்டும் ? HOURS OF BUSINES பட்டியலில் கணக்குகள் பிடிக்க நேரத்தை கோட்ட நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் ;

அடுத்து தபால்காரர்கள் ஆம் அவர்கள் தான் பொதுமக்களை நேரடியாக சந்திக்கிறவர்கள் உண்மை தான் அவர்கள் பழைய காலங்களை போல  பட்டுவாடா மட்டும் செய்யவில்லை பட்டுவாடா செய்திட்ட தகவல்களை அந்த இடத்தில இருந்தே கணினியில் பதிவேற்றம் செய்கிறார்கள் இதையும் தாண்டி அவர்கள் பொதுமக்களை அனுகி நமது இலாகாவின் பிரீமிய சேவைகளை குறித்துபேசிட ஆகும் நேரத்தை அவர்களின் வேலைநேரத்தில் சேர்த்தால் என்ன ?பிறகு என்ன கணக்கெடுப்பு ?புண்ணாக்கு ? தபால்கள் குறைந்துவிட்டது என பழைய பல்லவி ?

இறுதியாக GDS ஊழியர்கள் சுதந்தர இந்தியாவில் வேலைப்பளுவை காரணம்காட்டி  ஒரு ஊழியர் தான் வாங்கும் மாத சம்பளத்தை அடுத்த மாதத்தில் இருந்து குறைத்து வாங்குவதும் பழைய காலங்களுக்கும் சேர்த்து பிடித்தம் செய்வதும் என்பதும் வேறெங்கும் இல்லாத கொடுமையின் உச்சம் . ,அவர்களுக்கும் இலக்கை நிர்ணயிப்பது இல்லையென்றால் ஊதியத்தை குறைப்பது என்பதற்கு முடிவுகட்டிட  GDS ஊழியர்கள் செய்யும் அனைத்து வணிக சேவைகளுக்கும் வேலைநேரத்தில் சேர்க்கவேண்டும் என்றும் இலாகா ஊழியர்களுக்கு உள்ளதை போல் வேலைப்பளுவை கணக்கிட குறிப்பிட்ட சதம் COEFFICIENT என வேலைப்பளு கணக்கில் சேர்க்கவேண்டும் போன்ற புதிய சிந்தனைகள் நமது அகிலஇந்திய தலைவர்களுக்கும் சம்மேளன தலைவர்களும் வரவேண்டும் ,இந்த வர்க்க உணர்வை ஊட்டிடும் மகத்தான வரலாற்று கடமை நமது தமிழ் மாநில சங்கத்திற்கு உண்டு .அதை முறையாக முன்னெடுக்கும் ஆற்றல் நமது மாநிலச்சங்கத்திற்கு என்றும் உண்டு என்ற நம்பிக்கையில் தலமட்ட ஊழியர்களின் மன நிலை /வேதனையை புரிந்துகொண்டு இயக்கத்தை முன்னெடுப்போம் !

மேளா ,மெகா மேளா ,என சில்லறை லாபத்தில் தங்க விற்பனை ,நமது EB செலவுக்கு கூடாத கட்டுப்படியாகாத  ஆதார் சேவை என இவைகளினால் ஊழியர்களை துன்புறுத்தும் கொடுமைக்கு முடிவுகட்டுவோம் ! நாம் செய்யும் அனைத்து பணிகளுக்கும் வேலை கணக்கீட்டில் சேர்த்திட குரல்கொடுப்போம்

நன்றி ! தோழமையுடன் SK ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

                                                 

Tuesday, August 3, 2021

அஞ்சல் மூன்றின் மாநில சங்கத்திற்கு குறிப்பாக மாநிலசெயலர்  சகோதரர் வீரமணி அவர்களுக்கு நெல்லை கோட்டத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி !நன்றி !

நெல்லை கோட்ட சங்கம் மாநிலச்சங்க கவனத்திற்கு கொண்டுசென்ற பிரச்சினைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்றதற்கு நெல்லை கோட்டத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ...

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

                        தபால் காரர்கள் Postman mobile Application (PMA) செயல்படுத்துவது தொடர்பாக நிர்வாகம் தெரிவித்துள்ள புதிய வழிகாட்டுதலைகளை குறித்து நமது தபால்காரர் தோழர் /தோழியர்களுக்கு எழுகின்ற சந்தேகங்களையும் நடைமுறையில் சாத்தியமில்லாத வழிகளை குறித்தும் நாம் விவாதிக்கவேண்டியது காலத்தின் அவசியம் .

1.முதலில் PMA பயன்பாடு என்பது ஒரு அலுவலகத்தில் எத்தனை தபால்காரர்கள் பணியிடங்கள் இருக்கிறதோ அனைவருக்கும் தனியாக மொபைல் வழங்கவேண்டும் .ஆனால் நமது கோட்டத்தில் அனைவருக்கும் மொபைல் வழங்கப்படவில்லை .

2.பட்டுவாடா செய்கின்ற இடத்திலிருந்தே REMARK பதிவிடவேண்டும் என்பதெல்லாம் நெருக்கடியான நகர பகுதிகளில் குறிப்பாக போக்குவரத்து அதிகமாகவுள்ள இடங்களில் தபால்காரர்கள் எப்படி REMARK உள்ளிட்டவைகளை பதிவிடமுடியும் 

3.அதேபோல் BULK பட்டுவாடா செய்யப்படுகின்ற இடங்களிலிருந்தே APP பயன்படுத்திட நடைமுறை சாத்தியங்கள் இல்லை 

4.நேற்று நடைபெற்ற காணொளி காட்சிமூலம் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களில் நமது தபால்காரர்களின் சந்தேகங்களுக்கு கோட்ட அலுவலகத்தில் கேட்டு பதில்சொல்வதாக DSM அவர்களும் தெரிவித்துள்ளார்கள் .

                   ஆகவே நமது தோழர்கள் இந்த புதிய அறிவிப்பின் படி உங்களுக்கு ஏற்படுகின்ற நடைமுறை சிக்கல்களை கோட்ட சங்கத்திற்கு அவசியம் தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .வருகிற 06.08.2021 குள் நமது கோட்ட அலுவலகத்திற்கு இந்த மாத மாதாந்திர பேட்டியில் சேர்க்கவேண்டிய பிரச்சினைகளை கொடுக்கவேண்டியதிருப்பதால் தபால்காரர் தோழர்கள் விரைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம் 

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 





 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                             மாதாந்திர பேட்டியும் -நமது கடமைகளும் 

நமது துறையில் மட்டும் தான் ஊழியர்களின் பிரச்சினைகளை மேல்மட்ட அதிகாரிகளுடன் விவாதிக்கவும் அந்த விவாதத்தின் முடிவுகளை எழுத்துபூர்வமாக நமக்கு கொடுத்திடவும் ஒரு அரிய வாய்ப்பு உள்ளது .ஊழியர்களின் நலன் மீது அக்கறை உள்ள அதிகாரிகளிடம் மாதாந்திர பேட்டி மிக  அமைதியாகவும் ,எனக்கென்ன என்று இருக்கும் அதிகாரிகளிடம் சற்று கடினமாகவும் இந்த மாதாந்திர பேட்டிகள் நடைபெறுவதுண்டு ..சுமார் 2 மணிநேரம் வரை இந்த பேட்டி நடைபெறவும் மாதத்திற்கொருமுறை எத்தனை பிரச்சினைகளையும் குறித்து விவாதிக்கவும் இலாகா விதி அனுமதிக்கிறது .அதேபோல் தொடர்ந்து  மாதாந்திர பேட்டி நடத்தவேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது .ஆகவே இந்த வாய்ப்பினை தொழிற்சங்க நிர்வாகிகள் சரியாக பயன்படுத்திக்கொள்ள நமது உறுப்பினர்கள் தங்கள் அலுவலக பிரச்சினைகளை உடனுக்குடன் நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லவேண்டியது உங்களது கடமை .

                              நமது கோட்டத்தில் வருகிற 12.08.2021 அன்று மாதாந்திர பேட்டி நடைபெறுகிறது .வருகிற 06.08.2021 குள் பேட்டியில் விவாதிக்கப்போகும் பிரச்சினைகளை நாம் அனுப்பவேண்டியதுள்ளது .ஆகவே தோழர்கள் 06.08.2021 வரை காத்திருக்காமல் இன்றே உங்கள் பிரச்சினைகளை கோட்ட சங்கத்திற்கு தெரியப்படுத்தவும் .

           கடந்த 08.07.2021 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் எடுக்கபட்ட முடிவுகளை ஏற்கனவே உங்கள் பார்வைக்கு அனுப்பிவைத்திருந்தோம் ..பிரச்சினை தீராத விசயத்தில் நிர்வாகம் கேட்டிருக்கும் தகவல்கள் கோட்ட அலுவலகத்திற்கு சென்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்துங்கள் 

item no 41/2021 Supply of four monitors to Tirunelveli --இதற்கு திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் அவர்களிடம்  ரிப்போர்ட் கேட்கப்பட்டுள்ளதாக பதில் வந்துள்ளது . திருநெல்வேலி தலைமை அஞ்சலக ஊழியர்கள் இதை உறுதிப்படுத்தவும் 

item no 54/2021 . Request to either repair or dequarterize the SPM's quarters of Samugarengapuram SO.---இதற்கு SDH மூலம் ரிப்போர்ட் பெறப்படும் என்று பதில்வந்துள்ளது .SPM சமூகரெங்கம் அவர்கள் தங்கள் அலுவலகத்தில் இருந்து அனுப்பிய விவரத்தையும் ஆய்வாளர் வந்த்திருந்தால் அதன் தகவல்களையும் தெரிவிக்கவும் 

மேலும் இந்த இடைப்பட்ட நாட்களில் ஊழியர்கள் தெரிவித்த பிரச்சினைகளை கோட்ட நிர்வாகத்திற்கு அனுப்பிட நாம் அவர்களிடம் தெரிவித்திருந்தோம் .அதன்படி கூடன்குளம் ,இட்டமொழி  சங்கர் நகர் மற்றும் தச்சநல்லூர் அலுவகத்தில் இருந்து நமக்கு  தகவல்களை தந்துள்ளனர் ..விடுபட்ட ஊழியர்களும் இன்றே தங்கள் கோரிக்கைகளை குறைகளை கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .

                               மாதாந்திர பேட்டி --நம் தலைவர்கள் பெற்றுத்தந்த உரிமை -அதை பயனுள்ளதாக மாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமை ! கடமையை செய்வோம் ! உரிமையை கேட்போம் !

நன்றி தோழமையுடன் S.K .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


 


Monday, August 2, 2021

  அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                         கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரைத்தது என்ன ? நடைமுறைப்படுத்தியது என்ன ? பரீசீலினையில் இருப்பது என்ன ? என்கின்ற கேள்விக்கு மாநிலங்களவையில் நமது துறையின் இணை அமைச்சர் அளித்திட்ட பதில் உங்கள் பார்வைக்கு .

1.மருத்துவ உதவி /ஹெல்த் குரூப் இன்சூரன்ஸ் /ESIC மூலம் மருத்துவ சிகிச்சை 

2.கிளை அஞ்சலகங்களுக்கு புதிய வரவு /செலவு  கணக்கீடு முறை 

3.இலாகா ஊழியர்களை போன்று 12 வருடம் ,24 வருடம் 36 வருடம் சேவை முடித்தவர்களுக்கு மூன்று கட்ட பதவி உயர்வுகள் 

4.CWF WELFARE சந்தா ரூபாய் 100 யில் இருந்து 300 ஆக உயர்த்துதல் 

5.மாநில சேம நிதியில் இருந்து வழங்கும் உதவி தொகை 10 சதம் அதிகரித்தல் 

6.கூடுதலாக WELFARE நிதி மூலம் டேபிள் செல்போன் வாங்கிட ரூபாய் 10000 கடன் 

7.குரூப் இன்சூரன்ஸ் தொகை ரூபாய் 50000 யில் இருந்து 5 லட்சமாக உயர்த்துதல் 

நிராகரிக்கப்பட்ட பரிந்துரைகள் 

1.PAID LEAVE 20 நாளில் இருந்து 30 நாட்களாக உயர்த்துதல் 

2.விடுப்புகளை 180 நாட்கள் வரை சேர்த்து பணமாக்குவது 

3.COMPOSITE அலவன்ஸ் ABPM களுக்கும் வழங்குதல் 

4.வேலை நேரத்தை 8 மணிநேரமாக உயர்த்துதல் 

5.பணிஓய்வு என்பது 65 வயதில் அந்த மாத கடைசி தேதி 

6.அனைத்து தனிநபர்  BOகளை இரண்டு நபர் அலுவலகமாக மாற்றுதல் 

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை