அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
25.08.2021 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை உங்கள் பார்வைக்கு தருகிறோம் .
1.கீழாம்பூர் -VK .புரம் மற்றும் IC பேட்டை -MS யூனிவெர்சிட்டி டெபுடேஷ ன் சென்ற ஊழியர்களின் பயணப்படி வழங்குவது தொடர்பாக அம்பை மற்றும் திருநெல்வேலி ASP களுக்கு தூர அளவுகளை அளந்திட அனுப்பப்பட்டுள்ளது .
2.தச்சநல்லூர் கவுண்டர் பார்ட்டிசிபேஷன் குறித்து LANDLORD க்கு இந்த பணிகளை செய்துதர அறிவுறுத்தப்படும் .கம்ப்யூட்டர் டேபிள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் .
3.சங்கர்நகர் அலுவகத்திற்கு புதிய பிரிண்டர் வழங்கிட ஏற்றுக்கொள்ளப்பட்டுள்து
4.திருநெல்வேலி தலைமைஅஞ்சலகத்தில் பெண் ஊழியர்களுக்கான கூடுதல் கழிப்பறை கட்டித்தர மண்டல அலுவலகத்திற்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது
5.VK .புரம் அலுவலக கட்டடத்திற்கு மாற்று இடம் குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
6.வள்ளியூர் மற்றும் அதன் சுற்றியுள்ள தென்பகுதிகளுக்கு மெயில் வேன் வசதிகள் செய்திட புதிய பரிந்துரையை மேற்கொள்ளப்படும்
7.கோட்ட அலுவகத்தில் இருந்து இயக்கப்படும் திருநெல்வேலி டிவிசன் வாட்ஸாப் மூலம் ஊழியர்களை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருவதை குறித்து விவாதிக்கப்பட்டது .இதுஒன்றும் இலாகா செலவில் ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட செல்போன் அல்ல மேலும் இலாகா செலவில் RECHARCE செய்துதருவதும் இல்லை என சுட்டிக்காட்டியபோது SSP அவர்கள் இது வெறும் தகவல்களை பரிமாறிக்கொள்ள மட்டுமே எனவும் ஊழியர்கள் அதில் தங்கள் அலுவலக குறைகளை பதிவிட்டாலும் நிச்சயம் அந்த குறைகளை களைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்றும் SSP அவர்கள் தெரிவித்தார்கள்
8.இட்டமொழி CASHOFFICE திசையன்விளைக்கு மாற்றிட ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது
9.தபால்காரர்களுக்கு வழங்கப்பட்டுவரும் DRESS அலவன்ஸ் குறித்து விவாதிக்கப்பட்டது .பிறகோட்டங்களில் வழங்குவதில் உள்ள முறைகளை நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் விண்ணப்பித்த ஊழியர்களுக்கு உரிய பதில் வந்தவுடன் அதை மாநில அளவில் எடுத்து கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது
10.மதுரை PSD யில் இருந்து தினமும் அதிகஎடைகொண்ட பார்சல்கள் பதிவு தபால்களாக வருவதால் அதை PSD க்கு டெலிவரி செய்வதில் உள்ள சிரமங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது .இதுகுறித்து விரைவில் மாற்று ஏற்பாடுகளை செய்திட ஏற்றுக்கொள்ள பட்டது .
11.தோழர் லிங்கப்பாண்டி போஸ்ட்மேன் ஏர்வாடி அவர்களின் MACP குறித்தும் தோழர் கந்தசெல்வன் போஸ்ட்மேன் பணகுடி அவர்களின் இடமாறுதல் குறித்தும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கபட்டது . .
12.NDC பாளையில் ஊழியர்கள் இருக்கையில் அமர்ந்து பணிசெய்யும் அளவிற்கு இருக்கைகள் மாற்றி தரப்படும் என்றும் திருநெல்வேலி தலைமை HO விற்கு நான்கு மானிடர் வழங்கிட மீண்டும் போஸ்ட்மாஸ்டர் திருநெல்வேலிக்கு சில விளக்கங்கள் கேட்டு கடிதம் அனுப்பப்ட்டுள்ளதாகவம் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மாநில சங்கத்திற்கு நன்றி !நன்றி !
பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்திற்கு புதிதாக வாங்கப்பட்ட 63 KV ஜெனெரேட்டரை பொருத்திட கால தாமதம் ஏற்படுவதை கடந்த 12.08.2021 அன்று மதுரையில் நடைபெற்ற BI-MONTHLY கூட்டத்தில் PMG அவர்களிடம் வலியுறுத்தியதின் விளைவாக நேற்று AE (ELECTRICAL ) குழு பாளை தலைமை அஞ்சலகத்திற்கு வந்து ஆய்வு செய்துவிட்டு இன்னும் 2 வாரத்திற்குள் பணிகளை செய்திட போவதாக தெரிவித்து சென்றுள்ளார்கள் .நமது நெல்லை -NFPE இயக்கத்தின் தொடர் முயற்சிக்கு கிடைத்த மகத்தான சாதனைகளில் இதும் என்று என பெருமையோடு தெரிவித்து கொள்கிறோம்
மேலும் தோழர் R .சண்முக சுப்ரமணியன் APS தோழரின் LSG RE-ALLAOTMENT கோவில்பட்டியில் இருந்து திருநெல்வேலிக்கு மாற்றி தருவதிலும் PMG SR அவர்களை அனுகி கடிதம் கொடுத்ததின் விளைவாக தோழர் R .சண்முக சுப்ரமணியன் APS அவர்களுக்கு திருநெல்வேலி கோட்டத்திற்கு REALLOTMENT கிடைத்துள்ளது .இந்த இருபிரச்சினைகளை PMG SR அவர்களிடம் எடுத்துச்சென்று தீர்த்துவைத்த நமது மாநில செயலர் சகோதரர் வீரமணி அவர்களுக்கும் தென்மண்டல செயலர் தோழர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ..
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -- கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment