அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !வணக்கம் .
இலாகா தேர்வுகளுக்காக(LGO& POSTMAN EXAMINATION ) நமது முன்னாள் பொதுச்செயலர் அருமை அண்ணன் KVS அவர்கள் தயாரித்து வெளிவந்துள்ள STUDY MATERIALS விற்பனைக்கு வந்துள்ளது .விருப்பமுள்ளவர்கள் கோட்ட சங்கத்தை தொடர்புகொள்ளவும் .மேலும் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளும் ஆன்லைன் மூலம் (GOOGLE-MEET )நடைபெற்றுவருகிறது .நமது கோட்டத்தில் இருந்து சுமார் 28 தோழர்கள் இந்த ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொண்டு வருகிறார்கள் .தேர்வுகள் சம்பந்தமாக வகுப்புகளில் சேர விரும்புகிறவர்களுக்கு STUDY MATERIALS புத்தக வடிவில் தேவைப்படுவோரும் NELLAI --NFPE கோட்ட செயலர்களை அனுகலாம் .
தமிழக அஞ்சல் வரலாற்றில் சமீபகாலமாக GDSTO PA GDS TO போஸ்ட்மேன் போஸ்ட்மேன் /MTS TO PA என அதிக எண்ணிக்கையில் தேர்ச்சிபெற்றுவருவதற்கு அவர்களுக்காக தொழிற்சங்கங்கள் உருவாக்கி கொடுத்த /கண்டுபிடித்து கொடுத்த காலி பணியிடங்களே முக்கிய காரணம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது .காலிப்பணியிடங்கள் சம்பந்தப்பட்ட கோட்டங்களோடு நின்றிருந்த காலம் மாறி அண்டை கோட்டங்களுக்கும் ஏன் RMS காலியிடங்களிலும் நமது அஞ்சல் பகுதி தோழர்கள் பதவி உயர்வு பெற்று இன்று மாநிலம் முழுவதும் நமது தோழர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்த NFPE பேரியக்கத்தின் முயற்சியும் பயிற்சியும் முக்கிய காரணம் என்பதை நினைவில் கொள்ளுவோம் !
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment