அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம்
டார்கெட்டும் --டார்ச்சரும்
தமிழகம்முழுவதும் இன்று அஞ்சல் ஊழியர்கள் மத்தியில் நிர்வாகத்தால் பரப்பி விடப்பட்டிருக்கும் ஒரு சொல் டார்கெட் ...டார்கெட் ..ஒவ்வொருநாளும் ஊழியர்களை மனஉளைச்சலுக்கு உட்படுத்தும் இந்த மாய இலக்கை எட்டுவதற்கு கோட்ட நிர்வாகங்கள் கடைபிடிக்கும் அணுகுமுறைகள் கோட்டங்கள் தோறும் மாறுபடுகின்றன .ஒருநாள் POSB மெகா லாகின் ,மறுநாள் PLI /RPLI லாகின் ,அடுத்தநாள் TRANSACTION DAY அதற்கடுத்து AEPS மெகா லாகின் எனவும் அறிவித்துவிட்டு ஒவ்வொரு லாகின் குறித்தும் புதுப்புது அறிவிப்புகள் குறைந்தது 10கணக்குகள் .பாலிசிகளுக்கு குறைந்தது பிரிமியம் 10000,CSC-SPV அன்று 10 CSC பணிகள் ,AEPS என்றால் குறைந்தது 10 பரிமாற்றங்கள் என ஊழியர்களை வி(மி )ரட்டி வரும் போக்குகள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன .இதற்கிடையில் ஒவ்வொரு ஆதார் அலுவலகங்களிலும் ஆதார் பணிகள், ,அறிவிக்கப்படும் பொழுதெல்லாம் தங்கப்பத்திரம் விற்றாகவேண்டும் என்ற அன்பு கட்டளைகள் வேறு ?
நமது உபகோட்டம் கோட்ட அளவில் முதல் இடம் பிடிக்கவேண்டாமா என உப கோட்ட அதிகாரிகள் ,நமது கோட்டம் மண்டலத்தில் முதலிடம் பெறவேண்டாமா என கோட்ட அதிகாரிகள் என அவரவர் அவரவரர்களின் உயர்மட்டங்களில் பாராட்டும் சீராட்டும் பெறுவதற்கு நம்மை பிழிந்தெடுக்க தொடங்கிவிட்டார்கள் .
டார்கெட்டும் --டார்ச்சரும் என்ன ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளா ? RPLI வந்த பொழுதில் இதுபோன்ற நெருக்கடிகள் இருந்தன நமது மாநில சங்கத்தின் தொடர் போராட்டத்தினால் அன்று CPMG அவர்களே டார்கெட்டும் இல்லை --டார்ச்சரும் இல்லை GDS ஊழியர்களை மோட்டிவேட் பண்ணுங்கள் போதும் என்றார்கள் .
ஆனால் இன்று சிலகோட்டங்களில் GDS ஊழியர் என்றால் சம்பளத்தை குறைப்பேன் என்பதும் இலாகா ஊழியர்கள் என்றால் APAR மதிப்பெண்களை குறைப்பேன் என்றும் ,ஒருமையில் பேசுவதும் ,ஏசுவதும் என ஊழியர்களை அன்றாட பணிகளை செய்யவிடாமல் மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் நடக்கின்ற நிர்வாகத்தை கட்டுப்படுத்தவேண்டியது காலத்தின் அவசியம் .
கடிவாளம் இல்லாத குதிரைகளாக --அங்குசம் இல்லாத யானைகளாக திரிகின்ற போக்கை நம்மை விட்டால் வேறு யாரால் கட்டுப்படுத்திட முடியும் ..ஊழியர்களின் பொறுமையையும் அமைதியையும் கண்டு அலட்சியமாக நடத்தும் நிர்வாகத்திற்கு ஒன்று சொல்லுவோம் .இந்த அமைதி பொங்கும் முன் கடல் கொண்ட அமைதி ,வெடிக்கும் முன் எரிமலை கொடுக்கும் எச்சரிக்கை முனங்கல்கள் ....
ஊழியர்களின் மனநிலை இன்று கொதிநிலையில் இருக்கிறது ..நமது மாநிலச்சங்கம் அறைகூவல் விடுக்கின்ற பட்சத்தில் அன்றைய நாட்களை போல மண்டல அலுவலகங்கள் முன்பு நமது படையெடுப்பை நடத்தி காட்டுவோம் !
கடையடைப்பு நடத்துகின்ற
காலங்கள் அல்ல --இது
படையெடுப்பு நடத்துகின்ற
காலம் இது -என்ற கவிஞனின் கூற்றை மெய்யாக்குவோம்
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
அஞ்சல் துறையின் இன்றைய நிலையை சரியாக பிரதிபலித்து உள்ளது தங்கள் பதிவு🙏
ReplyDelete