...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, August 16, 2021

                               பாம்புக்கு பால் வார்த்த வல்லரசுகள் 

   அரண்மனைகளின் அழகிய நகரம் 

  ஆப்கானிஸ்தானம்  -இன்று 

 அழுகையின் கூக்குரலில் 


  வல்லரசுகளின் மடிகளில்மாறிமாறி  

  தவழ்ந்த - இந்த 

  அழகிய   புறா --இன்று 

  வல்லூறுகளின் பிடியில் ..


வினை விதைத்தவன் வினை அறுப்பான் 

என்பது சர்வேதேச பிரச்சனைகளிலும் 

நிரூபணமாகி இருக்கிறது 


சோவியத்தின்  பராமரிப்பில் 

ஜனநாயகம் துளிர்விட்ட போது 

அமெரிக்கா அதன் வேர்களில் 

வெந்நீர் பாய்ச்சியது 


பெண்களின் ஆளுமைகளை 

ஏற்றுக்கொள்ளாத தீவிரவாதம் 

தக்க தருணத்தை காத்திருந்து 

காவு கேட்க தொடங்கியது 


மெல்லமெல்ல பழமைவாதம் 

பின்வாங்கியபோது -தான் விதைத்த 

முட்களை தானே அகற்றிடவிட வேண்டிய 

கட்டாயத்தில் அமெரிக்கா 

அதற்குள் தன்னை பலப்படுத்தி 

வைத்திருந்தது தாலிபன் படைகள் 


அமெரிக்காவில் ஆட்சிமாற்றம் -இனி 

தேவையில்லாமல் தனது படைகளை 

ஏன் அங்கு என்று திரும்ப பெறுவதற்குள் 

தீவிரமானது தலிபான்களின் தாக்குதல் 


தாக்கு பிடிக்கமுடியாமல் 

தாமாகவே பணிந்தது அரசு ..

ஆட்சிமாற்றம் வந்தது --ஆனால் 

வரவேற்க அங்கே குடிமக்கள் இல்லை 


டவுண் பஸ்களில் இடம்பிடிக்க 

ஏறுவதைப்போல --விமானங்களில் 

உயிரை சுமந்துகொண்டு அந்நாட்டு மக்கள் 


விடுதலை?கிடைத்த சுவடுகள் ஏதுமின்றி 

நாட்டைவிட்டு ஓடும் குடிமக்கள் 

விந்தையாகவும் இருந்தது -

விசித்திரமாகவும் அமைந்தது 


இதையெல்லாம் தாண்டி சராசரி இந்தியனின் கவலை 

தலிபான்களை பிறைக்கொடி பறக்கும் 

மற்ற நாடுகள் ஆதரிக்கட்டும் 

செஞ்சேனை கொண்ட சீனாவும் ஆதரிக்கலாமா ?


நமது எல்லையை சுற்றி ஆபத்துகள் அதிகம் --

இனியாவது இந்தியாவில் சாதிகளை -மதங்களை 

தூக்கி எறிந்துவிட்டு நம் எல்லையை காப்போமா ?

சொந்தநாட்டில் நாம் சொர்க்கத்தை

 காணுவதைபோல் 

அண்டைநாடுகளில் வேறெங்காவது பார்க்கமுடியுமா ?

 --------- ஜேக்கப் ராஜ் ---




















2 comments:

  1. Today's pathetic situation in afganistan wonderfully written in Tamil with your style🙏

    ReplyDelete
  2. Have a nice day.Who Believes other big countries it is true they not help with out gain for them.
    Hence our beloved Prime Minster Jawaharlal nehrew introduce ANISERANADUGAL.Circle. and balanced friendship with big countries.
    We know lesson from the Afghanistan.
    Your blog each line is valuable.
    K.Ponnuraj.
    Sankarnsgar.
    17-8-21

    ReplyDelete