அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் !
மாநில நிர்வாகமே நேரடியாக மெகா லாகின் என களமிறங்கியபோது இன்னும் பொறுமை காப்பதா ?
SB லாகின் .IPPB லாகின் ,ஆதார் ,EPOST ,AEPSஎன தொடர்கதையாகும் நெருக்கடிகள் ? தீர்வு என்ன ? தீர்க்கப்போவது யார் ? அஞ்சல் மூன்றை விட்டால் நம்மை காத்திட நாதியேது ?நமக்கெல்லாம் நீதியேது ?
சமீபகாலமாக மேளா .மெகா மேளா ,லாகின் day என கோட்டமட்டங்களில் இருந்துதான் நமக்கு டார்ச்சர் என நினைத்து மாநில /மண்டல நிர்வாகத்திற்கு நாம் நமது கோரிக்கைகளை வைத்துக்கொண்டிருந்தோம் .ஆனால் சமீபத்திய CPMG அவர்களின் உத்தரவினை பார்க்கும் பொழுது கோளாறு எங்கே என புரிகிறது ,ஆம் மாநில நிர்வாகம் இயக்குனரகத்தை கைகாட்டுகிறது ,இயக்குனரகமோ அமைச்சக முடிவென்று கைகாட்டுகிறது ,கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு நோய் முற்றிவிட்டது இந்த பெரிய வியாதியை போக்க பெரிய மருத்துவர் போடும் பெரிய ஊசியால் தான் குணப்படுத்திட முடியும் .
ஆம் .அஞ்சல் வாரியம் அறிவிக்கும் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு லாகின் என்றால் அஞ்சல் எழுத்தர்கள் /SPMஎன INDOOR பணி செய்திடும் ஊழியர்கள் எத்தனை வாடிக்கையாளர்களை சந்திக்கமுடியும் ?அலுவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் எல்லாம் எதாவது ஒரு கணக்கு வைத்தவர்கள் தானே ! அதையும் தாண்டி கணக்குகள் பிடிக்கவேண்டும் என்றால் அலுவலக வேலைநேரத்தில் அலுவலகத்தை அடைத்துவிட்டு கேன்வாஸ் செய்ய அதிகாரபூர்வமான அனுமதியை தரவேண்டும் ? HOURS OF BUSINES பட்டியலில் கணக்குகள் பிடிக்க நேரத்தை கோட்ட நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் ;
அடுத்து தபால்காரர்கள் ஆம் அவர்கள் தான் பொதுமக்களை நேரடியாக சந்திக்கிறவர்கள் உண்மை தான் அவர்கள் பழைய காலங்களை போல பட்டுவாடா மட்டும் செய்யவில்லை பட்டுவாடா செய்திட்ட தகவல்களை அந்த இடத்தில இருந்தே கணினியில் பதிவேற்றம் செய்கிறார்கள் இதையும் தாண்டி அவர்கள் பொதுமக்களை அனுகி நமது இலாகாவின் பிரீமிய சேவைகளை குறித்துபேசிட ஆகும் நேரத்தை அவர்களின் வேலைநேரத்தில் சேர்த்தால் என்ன ?பிறகு என்ன கணக்கெடுப்பு ?புண்ணாக்கு ? தபால்கள் குறைந்துவிட்டது என பழைய பல்லவி ?
இறுதியாக GDS ஊழியர்கள் சுதந்தர இந்தியாவில் வேலைப்பளுவை காரணம்காட்டி ஒரு ஊழியர் தான் வாங்கும் மாத சம்பளத்தை அடுத்த மாதத்தில் இருந்து குறைத்து வாங்குவதும் பழைய காலங்களுக்கும் சேர்த்து பிடித்தம் செய்வதும் என்பதும் வேறெங்கும் இல்லாத கொடுமையின் உச்சம் . ,அவர்களுக்கும் இலக்கை நிர்ணயிப்பது இல்லையென்றால் ஊதியத்தை குறைப்பது என்பதற்கு முடிவுகட்டிட GDS ஊழியர்கள் செய்யும் அனைத்து வணிக சேவைகளுக்கும் வேலைநேரத்தில் சேர்க்கவேண்டும் என்றும் இலாகா ஊழியர்களுக்கு உள்ளதை போல் வேலைப்பளுவை கணக்கிட குறிப்பிட்ட சதம் COEFFICIENT என வேலைப்பளு கணக்கில் சேர்க்கவேண்டும் போன்ற புதிய சிந்தனைகள் நமது அகிலஇந்திய தலைவர்களுக்கும் சம்மேளன தலைவர்களும் வரவேண்டும் ,இந்த வர்க்க உணர்வை ஊட்டிடும் மகத்தான வரலாற்று கடமை நமது தமிழ் மாநில சங்கத்திற்கு உண்டு .அதை முறையாக முன்னெடுக்கும் ஆற்றல் நமது மாநிலச்சங்கத்திற்கு என்றும் உண்டு என்ற நம்பிக்கையில் தலமட்ட ஊழியர்களின் மன நிலை /வேதனையை புரிந்துகொண்டு இயக்கத்தை முன்னெடுப்போம் !
மேளா ,மெகா மேளா ,என சில்லறை லாபத்தில் தங்க விற்பனை ,நமது EB செலவுக்கு கூடாத கட்டுப்படியாகாத ஆதார் சேவை என இவைகளினால் ஊழியர்களை துன்புறுத்தும் கொடுமைக்கு முடிவுகட்டுவோம் ! நாம் செய்யும் அனைத்து பணிகளுக்கும் வேலை கணக்கீட்டில் சேர்த்திட குரல்கொடுப்போம்
நன்றி ! தோழமையுடன் SK ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment