அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம்
மத்திய அமைச்சக MINISITRY OF PERSONNEL AND PUBLIC GRIVANCES PENSION , அரசு பணியாளர்கள் மற்றும் பயிற்சி (DOPT ) யில் இருந்து இந்திய அரசு துறைகளில் கருணை அடிப்படையிலான பணி வழங்குவது தொடர்பாக ஒருங்கினைந்த உத்தரவினை 23.08.2021 அன்று வெளியிட்டுள்ளது அதன்படி
1.பணியில் இருக்கும் போது இறந்த ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களை அந்த துறையின் மூத்த அதிகாரி 30 நாட்களுக்குள் சந்தித்து இறந்த ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடிய பயன்களை குறித்து தெரிவிக்கவேண்டும் ..
2.அப்படி அந்த மூத்த அதிகாரி அந்த குடும்பத்தில் வசதியற்ற நிலை இருப்பதை அறிந்துகொண்டு அவர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி குறித்து விளக்கிட வேண்டும்
3.அப்படி பட்ட சூழ்நிலையில் அந்த துறையின் அதிகாரிகளில் ஒருவர் கருணை அடிப்படையிலான பணியினை விண்ணப்பிக்கும் முறைகுறித்தும் அந்த படிவத்தை நிரப்பி கொடுத்திட உதவிடவேண்டும்
4.நிர்வாகம் இது குறித்து திருப்தி அடைந்த பட்சத்தில் பெறப்பட்ட விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தமோ அல்லது கூடுதல் சேர்க்கை இருப்பின் சேர்த்திடவேண்டும்
5.பெறப்பட்ட விண்ணப்பங்கள் முறைப்படுத்தபட்டபின் அந்த விண்ணப்பங்களுக்கு தனியாக பதிவு எண் கொடுத்து அந்தத்தகவல்களை சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிவித்திட வேண்டும்
6.CBIC ,தபால் துறை ,பாதுகாப்புத்துறைகளில் ஏற்கனவே மெரிட் பாயிண்ட் குறித்து சுயமாக வடித்தெடுத்துள்ளதை போல் இதர துறைகளும் மெரிட் பாயிண்ட் குறித்து முடிவெடுத்திட வேண்டும் .நமது துறையில் Relative merit points இலாகா ஊழியர்களுக்கு 2019யிலும் GDS ஊழியர்க்குக்கு 2015 யிலும் திருத்தப்பட்ட மெரிட் புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டது .
7.விண்ணப்பங்களை பதிந்து பதிவு எண்ணை தெரிவிக்கும்போதே நிரப்பப்போகும் காலியிடங்கள் குறித்த தகவல்களை தெரிவிக்கவேண்டும்
8.விண்ணப்பங்களை பரிசீலிக்க மூன்றுபேர் கொண்ட கமிட்டி செயல்படும் .இந்த கமிட்டி ஒவ்வொரு காலண்டர் வருடத்திற்கு ஒருமுறையும் அதிகமான விண்ணப்பங்கள் இருக்கும் பட்சத்தில் இரண்டு அல்லது அதற்கு மேலும் கூடலாம்
9.பரிசீலிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது இந்த கமிட்டி தனது பரிந்துரையை கொடுக்கும் .இவைமுழுவதும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட மெரிட் பாயிண்ட் அடிப்படையில் இருக்கும்
10.ஒவ்வொரு கூட்ட முடிவுகளும் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு கொடுக்கப்பட்ட புள்ளிகளோடு தெரிவிக்கப்படும்
11.ஒவ்வொரு கூட்ட நடவடிக்கை குறிப்புகளும் மூன்று வாரத்திற்குள் அந்தந்த துறையின் வலைத்தளத்தில் வெளியிட வேண்டும்
12 .கமிட்டியின் பரிந்துரையில் ஆட்சேபனை இருந்தால் அது அதற்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரிக்கு அனுப்பிவைக்கப்படும் .
தோழர்களே ! கருணை அடிப்படையிலான பணி வழங்குவதில் இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு அதிகாரிகள் வழிகாட்டவேண்டும் என்பது வரவேற்கத்தக்கது .இறந்த ஊழியர்களின் இறுதிசடங்கில் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளவேண்டும் என்ற உத்தரவுகள் மெல்லமெல்ல மறைந்து போய் இன்று மெயில் ஓவர்சியர் சென்று சேமநல தொகையை கொடுப்பது வாடிக்கையாவிட்டது ...இன்று ஒருங்கிணைந்த வருமான சான்றிதழ் பெறமுடியாமல் இன்றளவும் வேலைக்கு விண்ணப்பிக்கமுடியாமல் இருக்கின்ற ஊழியர்குடும்பங்களுக்கு நிர்வாகம் உதவுகிறதோ இல்லையோ நாம் உதவிடுவோம் ! வழிகாட்டிடுவோம் ....
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
Have a good day.
ReplyDeleteVanakkam.The last para of this content is very important to our comarades who wait for job after their family member gone away.
Your useful guide to get important certificate also good job.
K.Ponnuraj
Retired P.A.
Sankarnsgar.
27-8-21