நெல்லை கோட்ட செய்திகள்
நெல்லையில் அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு சங்கங்களின் கூட்டு பொதுக்குழு கூட்டம் தோழர்கள்
T .அழகுமுத்து -தலைவர் P 3சீனிவாசசொக்கலிங்கம் தலைவர்
P 4 அவர்கள் தலைமையில் நடைபெற்றது .செயல் தலைவர் தோழர் N .கண்ணன் அவர்கள் பொதுக்குழுவை தொடங்கிவைத்து தனது ஆலோசனைகளை வழங்கினார்கள் .கூட்டத்தின் முக்கிய முடிவுகள்
1.அஞ்சல் நான்கின் மாநில மாநாடு --வருகிற டிசம்பர் 29மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் அஞ்சல் நான்கின் மாநில மாநாட்டிற்கு அஞ்சல் நான்கின் மாநில உதவி தலைவர் தோழர் SK .பாட்சா அவர்கள் தலைமையில் 19 தோழர்கள் நெல்லையில் இருந்து செல்கிறார்கள் .மாநில மாநாட்டு நன்கொடையாக விருப்பமுள்ள தோழர்களிடம் ரூபாய் 100 மட்டும் வசூலிப்பது என்றும் துணை அஞ்சலகங்களில் பணியாற்றுவோர் தோழர் ஜேக்கப் ராஜ் அவர்களின் SB கணக்கில் 0072773482 செலுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது .பணம் செலுத்தியவர்கள் தகவல்களை உடனே தெரிவிக்கவும் கேட்டு கொள்ளப்படுகிறது ..மாநாட்டில் எடுக்கவேண்டிய தீர்மானங்களை தோழர்கள் புஷ்பாகரண் தோழர் சாக் ரடீஸ் மற்றும் இளைய /புதிய தோழர் பாலகுருசாமி ஆகியோர்கள் தயாரித்து கொடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது .
2.வருகிற ஜனவரி 8 மற்றும் 9 ஆகியதேதிகளில் நடைபெறும் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவது என்றும் புதிய பென்ஷன் ரத்து என்ற நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி பிரசாரங்களை மேற்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டது .
3.டெபுடேஷன் உத்தரவில் தபால்காரராக பணியாற்றி எழுத்தராக பதவிஉயர்வு பெற்ற தோழர்களின் MACP II என்ற வரையறையை தெளிவு படுத்தி இரண்டாம் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு விலக்கு அளிக்க கோட்ட நிர்வாகத்தை அனுகுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது .
4.திருநெல்வேலி தபால் மருத்துவமனை உள்ளிட்ட 33 மருத்துவமனைகள் CGHS உடன் 01.01.2019 முதல் இணைவது தொடர்பாக தோழர் குத்தாலிங்கம் அவர்கள் விளக்கி கூறினார்கள் .இதன் பயன்களை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் NFPE சங்கம் தனியாக குழு அமைத்து விலகிச்சென்ற அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மீண்டும் CGHS யில் இனைவது குறித்து மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க அகிலஇந்திய சங்க கவனத்திற்கு கொண்டு சென்று பிரச்சினைகளை தீர்க்க முடிவெடுக்கப்பட்டது .இந்த பொறுப்பை தோழர் குத்தாலிங்கம் அவர்கள் தலைமையேற்று கோரிக்கை மனுவை தயாரிக்க தோழர் குத்தலிங்கம் அவர்களிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது
இதர பிரச்சினைகள் குறித்து கோட்ட செயலர் தோழர் SK .ஜேக்கப் ராஜ் விளக்கி கூறினார்கள் .
1.HSG II /HSG I பதவிகளை தற்காலிகமாக நிரப்ப கோட்ட நிர்வாகம் நேற்று புதிய WILLINGNESS கோரியுள்ளது .மூத்த தோழர்கள் அதாவது LSG வந்தவர்களும் LSG அல்லாத GP 4200 பெறுகிறவர்கள் HSG II பதவிக்கும் GP 4600 பெறுகிற தோழர்கள் HSG I (பாளையம்கோட்டை -திருநெல்வேலி DYPM ) பதவிக்கும் விண்ணப்பிக்கலாம் .
2.போஸ்ட்மாஸ்டர் கேடெர் ஜெனரல் லைன் உடன் இனைக்க 20.12.2018 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் அஞ்சல் வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது .அதனால் போஸ்ட்மாஸ்டர் தனி கிரேடு என்று நமது NFPE யில் இருந்து விலகி சென்ற அனைவரையும் மீண்டும் நமது NFPE சங்கத்தில் அவர்களை சேர்க்க நமது முன்னணி தோழர்கள் முயற்சி எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது ..
3.பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் ஊழியர்களுக்கு குறிப்பாக தோழியர்களுக்கு டைனிங் ரூம் தனியாக அமைத்து அனைத்து வசதிகளையும் செய்து தர தோழர்கள் N.கண்ணன்செயல்தலைவர் உதவி செயலர்கள் தளவாய் மற்றும் சரவணன் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது .இவர்களது ஆலோசனைகளை பெற்று கோட்ட நிர்வாகத்திற்கு நாம் கோரிக்கை வைக்கவும் தீர்மானிக்கப்பட்டது .
4.கேடர் சீரமைப்பு அமலாக்கத்தில் நமது மாநிலச் சங்கம் பல கட்டங்களில் அளித்த கோரிக்கைக் கடிதங்கள் மீது முழு முடிவுகள் இன்னமும் நிர்வாகத்தால் தெரிவிக்கப் படவில்லை.
இதில் முக்கியமாக Treasury Replacement உள்பட 854 பதவிகள் புதிதாக Identify செய்வதில் ஏற்கனவே 19.3.2018 ல் ஊழியர் தரப்புடன்
பேசி Minutes record செய்யப்பட்ட விஷயங்களில் தற்போது மாற்றி முடிவுகள் எடுப்பதாகத் தெரிகிறது. LSG பதவி உயர்வின்போது வெளியில் சென்ற ஊழியர், Decline செய்த ஊழியர், Treasury ல் இருந்து வெளியேறும் ஊழியர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் முன்னுரிமை, விதி 38 இடமாறுதல் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் மீண்டும் பேசி முடிவெடுத்திட
மீண்டும் ஒரு ஊழியர் தரப்புடனான கூட்டம் கட்டாயம் நடத்திட CPMG ஒப்பு கொண்டுள்ளதாக மாநிலச்சங்க செய்தி கூறுகிறது .
நேற்றைய பொதுக்குழுவில் ஆர்வமுடன் கலந்துகொண்ட அனைவருக்கும் கோட்ட உதவி நிதி செயலர்தோழர் G.நெல்லையப்பன் அவர்கள் நன்றி கூற பொதுக்குழு ஒரு பயனுள்ள கூட்டமாக நிறைவுபெற்றது .நேற்றைய பொதுக்குழுவிற்கு ஸ்னாக்ஸ் வழங்கிய தோழர் S.முருகன் SPM ஹைகிரவுண்ட்ஸ் அவர்களுக்கும் நன்றி .நன்றி !
ஒற்றுமையே நமது பலம் --கூட்டு செயல்பாடே நமது தொடர் வெற்றி !
வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment