...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, December 5, 2018

அன்பார்ந்த தோழர்களே !
   மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனத்துடன் இணைந்து அஞ்சல் பகுதியில் NFPE --FNPO சம்மேளனங்கள் பங்கேற்கும் இரண்டு நாள் வேலைநிறுத்தம்   08.01.2019 & 09.01.2019 வெல்லட்டும் 
          கடந்த 15.11.2018 அன்று புதுடெல்லியில் கூடிய போஸ்டல் JCA (NFPE -FNPO) அஞ்சல் துறையில் புகுத்தப்படும் கார்ப்பரேஷன் முடிவுகளை கட்டுப்படுத்த வருகிற ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய இருநாட்கள் நடைபெறும் NJCA வேலைநிறுத்த அறிவிப்போடு நாமும் சேர்ந்து வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது என முடிவெடுத்துள்ளது .
கார்ப்பரேசனின் முதல்படியாக IPPB  அதனை தொடர்ந்து பார்சல் இயக்குனரகம்  அடுத்த ப(அ )டி  PLI &RPLI  தனி வாரியம் என எதிர்கால அஞ்சல் துறையை அச்சுறுத்தும் அரசின் கொள்கைமுடிவுகள் -எல்லா மட்டங்களிலும் நிலவும் ஆட்பற்றாக்குறை -உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் வழங்கிய MACP மற்றும் RTP சம்பந்தமான ஊழியர்கள் நலன் சார்ந்த தீர்ப்புகளை அமுல்படுத்துதல் கமலேஷ் சந்திரா கமிட்டியை முழுமையாக அமுல்படுத்துதல்  என நமது பகுதிப்பிரச்சினைகள் 
NJCA வின் பிரதான கோரிக்கையான புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல் என கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இரண்டுநாள் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் .
               நமது கோட்டத்தில் வேலைநிறுத்த கூட்டங்களை டிசம்பர் மூன்றாம் வாரத்தில் நடத்தவும் உத்தேசித்துள்ளோம் .
                அந்தந்த பகுதி தோழர்கள் நமது கோட்டத்தில் வேலைநிறுத்தத்தை சிறப்பாக நடத்த இன்றே தயாராகும் படி கேட்டுக்கொள்கிறோம் .
                                                  தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் 
RV.தியாகராஜ பாண்டியன் --V .தங்கராஜ் கிளைசெயலர்கள் 
E.காசிவிஸ்வநாதன் கோட்ட செயலர் NFPE GDS 

0 comments:

Post a Comment