...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, December 27, 2018

அன்பார்ந்த தோழர்களே !
   அஞ்சல் நான்கின் 31 வது மாநில மாநாடு 29.12.2018 மற்றும் 30.12.2018 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது .நெல்லையில் இருந்து 
தோழர்கள் SK .பாட்சா  சீனிவாச சொக்கலிங்கம் T .புஷ்பாகரண் G.சாக்ரடீஸ் K .முருகேசன் P செல்வின் துரை S .இசக்கி  
.P .பாலகுருசாமி மகேந்திரன் T சுபாஷ் சிந்து மற்றும்  SK .ஜேக்கப் ராஜ் D.பிரபாகர் K .குத்தாலிங்கம் KG.குருசாமி KSYசாகுல்  ஞானசேகரன் 
ஆகியோர் செல்கின்றனர் .நெல்லையில் இருந்து புறப்படுகிற தோழர்கள் 28.12.2018 இரவு 10.40 மணி 22667 கோவை விரைவு வண்டிக்கு வரவும் .சார்பாளர் /பார்வையாளர் கட்டணம் ரூபாய் 1100 .
                                 கோவை மாநாடு வெல்லட்டும் 
கோவை மாநாடு வெல்லட்டும் --
கொள்கை மறவர்கள் கோலோச்சும் -
கோவை மாநகரில் நடக்கும் மாநாடு 
வெல்லட்டும் -புதிய வரலாற்றை சொல்லட்டும் 

காக்கி சட்டைக்கென்று -தனி ஒரு 
கர்வம் உண்டு -இங்கே 
கருப்பு மற்றும் சிகப்பு தலைவர்களின் 
கருத்தொற்றுமை உண்டு 

வெள்ளைக்காரன் காலத்திலேயே 
வீறுகொண்டு போராடிய வரலாறு உண்டு 
 84 ளில் தனித்து நின்று வேலைநிறுத்தம் செய்திட்ட 
வெற்றி சரித்திரம் இங்கு உண்டு 

அடுக்கடுக்கான தாக்குதல்களை -மாநில 
அஞ்சல் நிர்வாகம் தொடுத்த போதெல்லாம் 
அடுத்தடுத்து களம்கண்டு -ஆபத்துகளை 
அணைபோட்டு தடுத்திட்ட ஆற்றல் உண்டு 

அடுத்தவன் வேலையை (IPPB ) செய்வதற்கு 
அதிகாரம் தந்தது யார் என்று 
ஆவேச குரல் கொண்டு அதிகாரிகளை 
அச்சுறுத்திய நிகழ்வுகளும் நினைவில் உண்டு 

சம்பளக்குழு செய்திட்ட சதி ஆணையை 
உச்சநீதிமன்றம் வரை சென்று உடைத்து 
லட்சங்களை ஊழியர்களுக்கு பெற்று தந்த 
பேராற்றல் அஞ்சல் நான்குக்கு உண்டு 

மிச்சமிருக்கும் கோரிக்கைகளை வென்றெடுக்க -தலைவர்கள் 
விட்டுச்சென்ற ஒற்றுமையை பற்றி கொண்டு 
வெற்றி கீதம் பாட 
வீறு கொண்டு வா என் தோழா !
                                  தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 





0 comments:

Post a Comment