...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, December 19, 2018

                                            முக்கிய செய்திகள் 
GDS ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது ..நேற்று 18.12.2018 நடந்த பேச்சுவார்த்தையில் நிர்வாகம் தரப்பில்  நமது இலாகா செயலர் திரு 
AN .நந்தா திரு .சலீம் ஹயூ மெம்பெர் (TECNOLOGY) திரு .வினித் பாண்டே மெம்பெர் (PLI) DDG( SR ) மற்றும் DDG (ESTT)  ஆகியோர் கலந்துகொண்டனர் .
          இலாகா தரப்பில் மீண்டும் பழைய பல்லவி பாடப்பட்டது .வேலைநிறுத்தத்தை முடித்துக்கொண்டு வாருங்கள் பேசலாம் .ஏற்கனவே கமலேஷ் சந்திரா அறிக்கையின் பல சிபாரிசுகள் அமுல்படுத்தப்பட்டுவிட்டன .இன்னும் சில சிபாரிசுகள் தீவீர பரிசீலனையில் இருக்கிறது என்று தெரிவித்து வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறச்சொல்லி இரண்டுபக்க கடிதம் கொடுக்கப்பட்டது .
    மத்திய அரசு ஊழியர்கள் -பொதுத்துறை ஊழியர்கள் இணைந்து போராட்டம் ஜனவரி 8 -9 ஆகிய இருநாட்கள் நடைபெறுகிறது .மத்திய அரசு ஊழியர்களின் பிரதான கோரிக்கையான புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்பதே .2019 ஆண்டின் துவக்கமே போராட்டத்தோடு துவங்குகிறது .இதற்கு முன்னேற்பாடாக 21.12.2018 வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டு பொதுக்குழுவிற்கு தாங்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர் நெல்லை 
.



0 comments:

Post a Comment