மாநில சங்க செய்திகள்
இன்று(13.12.2018) CPMG அவர்களுடன் பேசிய சில முக்கிய பிரச்னைகள் குறித்து கீழே உங்கள் பார்வைக்கு:-(மாநில சங்க பதிவில் இருந்து )
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°.
1.. மதுரை தலைமை அஞ்சல் அதிகாரி திரு. நாகநாதன் அவர்களின் அத்துமீறல்கள், ஊழியர் விரோதப்போக்கு , பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்தும், இதன்
மீது விசாரிக்க அமைக்கப்பட்ட மூன்று அதிகாரிகள் குழுவின் தெளிவான பரிந்துரைக்குப் பின்னரும் மேல் நடவடிக்கை எடுக்காமலும் அவர் இடமாற்றம் செய்யப் படாமலும் இருப்பது குறித்தும் CPMG அவர்களிடம் கடிதம் அளித்து விவாதிக்கப் பட்டது. PMG, SR அவர்களும், DPS, SR அவர்களும் கமிட்டியின் அளிக்கையை ஒத்துக் கொண்டு இன்று காலை நமது தென் மண்டலச் செயலருக்கு தனியே கடிதம் அளித்து புகாரில் அளிக்கப்பட்ட பிரச்னைகளைத் தீர்த்திட நிர்வாகத்திற்கு உத்திரவு அளித்துள்ள போதிலும், அவரை இடமாற்றம் செய்திடாமல் ( ஏற்கனவே Independent charge அளிக்கக் கூடாது என அவருக்கு ரகசியக் கோப்புக் குறிப்பு உள்ளதாலும், தென் மண்டலத்தில் வேறு Sr.PM இடம் இல்லாததாலும் என)பல்வேறு காரணங்கள் கூறி இடமாறுதல் செய்திட அளிக்கப்பட்ட பரிந்துரை மற்றும் உறுதி மொழியை மீறுதல் கூடாது ; அவர் மாநில அளவில் எங்காவது உடன் மாற்றப்பட வேண்டும் எனக் கோரினோம். இதனை ஒப்புக் கொண்ட CPMG அவர்கள் நாளை இது குறித்து தென் மண்டல அதிகாரியுடன் பேசுவதாகவும், இது குறித்த அனைத்துக் கோப்பினையும் பெற்று ஆய்வு செய்து வெகு விரைவில் சாதகமான நடவடிக்கை எடுத்திடவும் உறுதியளித்தார்.
2. தபால் காரர்களுக்கு உச்ச நீதி மன்றத் தீரப்பு மற்றும் இலாக்கா உத்திரவுப்படி 11.10.97 முதல் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை JCA போராட்டத்தின்போது அளித்த உறுதி மொழியின்படி மேலும் கால தாமதம் செய்திடாமல் உடனே வழங்கிட வேண்டினோம். இது குறித்து Clarification கேட்டதன் அடிப்படையில் இலாக்காவிடமிருந்து பெறப்பட்ட விளக்க ஆணையை சென்ற வாரமே அனைத்து மண்டலங்களுக்கும் அனுப்பி விட்டதாகவும் மேலும் இது குறித்து
IFA (GM Finance) க்கு கேட்கப்பட்ட வழிகாட்டுதலுக்கு இதுவரை பதில் வரவில்லை என்றும் CPMG தெரிவித்தார். இலாக்காவிலிருந்து விளக்க ஆணை பெறப்பட்டபின் IFA ன் ஒப்புதல் பெறத் தேவையில்லை என்றும் இது ஏற்கனவே கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் வழங்கப்பட்டு விட்டதால் தமிழகத்திலும் முழுமையாக நாளையே வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்திக் கோரினோம். நீண்ட விவாதத்திற்குப் பின்னர் நமது வாதத்தை ஏற்றுக் கொண்ட CPMG அவர்கள் நாளை இலாக்காவின் தெளிவாணைக்குப் பின்னரும் வழங்க மறுக்கும் கோட்டங்கள் குறித்து மண்டல ரீதியாக கேட்டு உடனடி அறிவுறுத்தல்கள் வழங்கி ஓரிரு நாட்களுக்குள் முழுமையாக பட்டுவாடா உறுதி செய்யப்படும் என சாதகமான பதிலை அளித்தார்.
3. தற்போது கேடர் சீரமைப்பில் நிரப்பப் படாத காலியிடங்களில் 50% LGO தேர்வுக்கு அறிவிக்கப்
பட்டுள்ளதால் மீதமுள்ள 50% காலியிடங்களில் கோட்ட வாரியாக தேங்கிக் கிடக்கும் விதி 38 இடமாற்றங்களை
அளித்திட
விரைவில் உத்திரவு இட வேண்டினோம். இதனை ஏற்றுக் கொண்ட CPMG அவர்கள் விதி 38 இட மாறுதல் கேட்புகள் குறித்து ஏற்கனவே கோட்ட வாரியாக விபரங்கள் கேட்டுப் பெறப்பட்டு வைப்பில் உள்ளதாகவும் இவை உடன் பரிசீலிக்கப்பட்டு டிசம்பர் இறுதி அல்லது அதிகபட்சம் ஜனவரி 2019க்குள் இருக்கும் காலியிடங்களுக்கு ஏற்ப Communal Vacancy அடிப்படையில் இடமாறுதல்கள் அளித்திட ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.
4.. நடப்பு ஆண்டுக்கான உரிய HSG I I , HSG I, PMGrade II, PM Grade III பதவி உயர்வுக்கான DPC இன்னமும் கூட்டப்படவில்லை என்றும் இதனால் நிரப்பப்படக் கூடிய குறைந்த அளவு உயர் பதவிகள் கூட நிரப்பப்படாமல் தகுதியான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உரிய DPC கூட்டப்பட்டு பதவி உயர்வுகள் மேலும்
காலதாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என கடிதம்
அளித்துப் பேசி வலியுறுத்தினோம்.
இதன்மீது உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பதவி உயர்வுகள் கூடிய விரைவில் வழங்கப்படும் என்று CPMG அவர்கள் உறுதியளித்தார்.
நன்றி .தோழமையுடன்
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment