...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, December 18, 2018

அன்பார்ந்த தோழர்களே !
    10  அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் எங்கள் GDS தோழர்களுக்கு நெல்லை NFPE சார்பாக வீர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
                   அமைப்பு ரீதியாக NFPE சம்மேளனம் --AIGDSU பிளவு பட்ட போதிலும் GDS ஊழியர்களின் வர்க்க போராட்டத்தை பார்த்து நம்மால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது .
                         கடந்த மே திங்களில் நடைபெற்ற போராட்டங்களில் NFPE சங்கமும் கலந்து கொண்டதால் அஞ்சல் மூன்று -அஞ்சல் நான்கு சங்கங்கள் நான்கு முதல் ஐந்து நாட்கள் வேலைநிறுத்தம் செய்தோம் .வேலைநிறுத்தத்தின் முடிவில் அரசும் -அஞ்சல் வாரியமும் ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை முற்றிலுமாக இன்னும் நிறைவேற்றிடவில்லை .விளைவு அன்றைய களத்தில் சேர்ந்து நின்ற AIGDSU -NUGDS சங்கமும் இன்று போராடுகின்றன .
                        தமிழக அரசுஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கிறோம் -போக்குவரது ஊழியர்களின் போராட்டத்தில் வீதிக்கு வந்து போராடினோம் .நம்மோடு உயிராய் கலந்து நிற்கும் GDS ஊழியர்களின் போராட்டங்கள் வெல்ல வாழ்த்துகளையாவது அள்ளி தெளிப்போம் .
                                GDS தோழர்களின் போராட்டங்கள் வெல்லட்டும் !
மாலை நேரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்போம் ! தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK பாட்சா  கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment