அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
கடந்த 25.08.2021 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியின் நடைமுறை குறிப்புகள் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளன. பெரும்பாலான பிரச்சினைகளில் சாதகமான முடிவுகளும் ,தனது அதிகார வரம்பிற்கு மேலான விஷயங்களை மண்டல நிர்வாகத்திற்கும் எடுத்துசெல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .ஓரிரு பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து எந்தவித Request இல்லை என்று முடித்துவைக்கப்பட்டுள்ளது .மாதாந்திர பேட்டி தவிர நமது கோட்ட சங்கம் எழுதுகின்ற கடிதஙக்ளுக்கு உடனுக்குடன் நிர்வாகத்தால் பதில் வருவது பாராட்டிற்குரியது .அடுத்த பேட்டி 23.09.2021அன்று நடைபெறுவதாகவும் வருகிற 15.09.2021 குள் நாம் நமது பிரச்சினைகளை கோட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .ஆகவே நமது தோழர்கள் /தோழியர்கள் தங்கள் அலுவலக பிரச்சினைகளை எங்களிடம் தெரிவித்தால் மாதாந்திர பேட்டிக்கு செல்வதற்கு முன் சம்பந்தப்பட்ட அலுவகத்தில் இருந்து கடிதங்களை அனுப்ப நமது கோட்ட சங்கம் உதவி செய்திட தயாராக இருக்கிறது ..நமது கோரிக்கைகளின் மீது அலட்சியம் காட்டாமல் அலசி ஆராய்ந்து அதை நிவிர்த்திசெய்ய முனைப்பு காட்டும் கோட்ட நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை நாமும் பூர்திசெய்வோம் .வெறும் வாய்மொழியால் மட்டுமே பிரச்சினைகளை சொல்லிக்கொண்டு இருக்காமல் கோட்ட நிர்வாகத்திற்கு எழுத்துபூர்வமாக பிரச்சினைக்ளை கொண்டு சேர்ப்போம் ....நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment