ரயில் நிலையங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் டிசம்பர் 10 வரை மட்டுமே அனுமதிகப்படும் என்று தகவல் வெளியிட்டுள்ளதுமத்திய அரசு.
டிசம்பர் 10 ஆம் தேதிக்கு பிறகு பழைய 500 ரூபாய் நோட்டுகள் ரயில் நிலையம், பேருந்து, மெட்ரோ உள்ளிட்ட இடங்களில் ஏற்றுக் கொள்ளப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னர் டிசம்பர் 2 ஆம் தேதிக்கு பிறகு பழைய 500 ரூபாய் நோட்டுக்கள், பெட்ரோல் நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, மக்கள் கடுமையான பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது.
----------------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Post a Comment