...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, December 15, 2016

மத்திய அரசு ஊழியர்மகா சம்மேளனம் சார்பாக நடைபெற்ற பேரணி மாபெரும் வெற்றி --15.12.2016
ஒருநாள் போராட்டம் கண்டு மத்திய அரசு  பணியுமா ?
பத்தாண்டுக்கு ஒருமுறை கிடைக்கக்கூடியதை பெறாமல் விட்டால் ஊழியர்களின் கோபம் தான் தணியுமா ?
வாபஸ் --தள்ளிவைப்பு  என்பது இனியுமா ? நம் போராட்டம் 
தண்டவாளத்தோடு  இணையுமா ?

  ஊதியக்குழுவில் ஏற்பட்ட முரண்பாடுகளை கலைந்திடவும் -அலவன்சுகளை முழுமையாக பெற்றிடவும் மகா சம்மேளனம் நடத்திய பேரணி மாபெரும் வெற்றி பெற்றது .ரயில்வே மற்றும் பாதுகாப்பு துறை சாராத முழுக்க முழுக்க மத்திய அரசு ஊழியர்கள் நடத்திய பேரணி --மத்தியஅரசு துறைகளிலும் அஞ்சல் பகுதியின் பங்கு சிறப்பாக இருந்தது .பங்குபெற்ற ஊழியர்களின்  ஆர்வம் /எதிர்பார்ப்பு பேரணி முடிவில் அறிவிக்கப்பட்ட ஒருநாள் வேலைநிறுத்தம் (15.02.2017   என்ற அறிவிப்பினால் சற்று குறையத்தான் செய்தது .

இந்த ஒருநாள் வேலைநிறுத்தத்தை ஜூலை --2016 இல் செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற ஆதங்கங்களை கேட்கவும் முடிந்தது .ஊதியக்குழு கோரிக்கைகளை முன்னிறுத்தி நாம் மட்டும் நடத்துவது எந்தவகையில் அரசை இறங்க வைத்திட முடியும்?
 .1000/500 பழைய ரூபாய் செல்லாத அறிவிப்பு  வந்த பிறகு 
ATM முன்னாள் செத்தவர்களை பற்றி யாராவது கேட்க முடிந்ததா ? நாட்கணக்கில் வங்கிகளில் காத்திருந்தவர்களின் கவலை யாருக்காவது தெரிந்ததா ?
அரசு ஊழியர்கள் மட்டுமல்ல அனைத்துதொழிலாளர்களும் தனது சம்பளத்தைக்கூ ட  முழுசாய் வாங்காமல் ரேஷன் பொருளைப்போல அளவாய் வாங்கும் அவலங்கள் ஒருபுறம் --அச்சடிக்கப்பட்ட நோட்டுகள் வங்கிக்கு வராமலே தங்கியது ஒரு புறம் -இந்த அரசு  தனது ஊழியர்களை விட முதலாளிகளின் மேல் காட்டும் கருணை ஒரு புறம் -நாட்டை உலுக்கி கொண்டிருக்கும் பிரச்சினைகளில் கூட வாய்திறக்காத அரசை எதிர்த்து - ஒரு வலுவான போராட்டத்தை --தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தினால் தான் சாத்தியமாகும் என்பது தலைவர்களுக்கும் தெரியாதது அல்ல  --ஆகவே போராட்டம் நடத்தவேண்டும் என்பதற்காக மட்டும் போராடாமல் அனைவரையும் திரட்டி ஒன்றுபட்ட போராட்டத்தை கோரிக்கைகள் நிறைவேறும்வரை காலவரையற்ற போராட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதே சராசரி ஊழியரின் எதிர்பார்ப்பு --இது பல ஆண்டு போராட்டம் -அடுத்த பத்தாண்டுகளுக்கு  நமது துயரோட்டும் !  -SKJ -நெல்லை 

  மாநில தலைவர் மோகன் ,செயலர் JR ,பொருளாளர் வீரமணி ஆகியோருடன் தோழர் அழகு முத்து --பாட்சா 
 தோழர்கள் செல்வராஜ் (Sr .AO ),சேர்முகபாண்டியன் (Sr AO DELHI)இவர்களுடன் நமது தோழர்கள் குருசாமி (கோட்ட தலைவர் )பாட்சா( P 4செயலர் ,)உதவிசெயலர் வண்ணமுத்து துணைத்தலைவர் அழகுமுத்து மற்றும் பொருளாளர் நமச்சிவாயம் 


















0 comments:

Post a Comment