...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, December 14, 2016

                     பாராளுமன்றம் நோக்கி நம் பேரணி செல்லட்டும் -
பாராமுகமாய் இருக்கும் NDA அரசிடம் நம் கோரிக்கைகள்  சொல்லட்டும் 
   நம் கோஷங்கள்  செவிடர் காதில் ஊதும் சங்கல்ல !
   நம் கோபங்கள்  நீர்த்துப்போகும் நிலையில்  இல்லை !
   தள்ளிவைத்தது  நம் தவறுதான் --அதற்காக அரசாங்கமும் 
  அலவன்சுகளை தள்ளி வைப்பது  நியாயமா ?       
   


இன்று நாம் வைத்திருக்கும் கோரிக்கைகளுக்கு அரசாங்கம்  நேரடியாக பதில் சொல்லாமல்  ரிசர்வ் வங்கி கவர்னர்  DR.Urjit R. Patel,   மூலம் பதில்  கொடுக்கப்படுகிறது  . 
                 
  அலவன்ஸ் கமிட்டி க்கு மேலும் இரண்டு மாத காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் இறுதி முடிவுகள் எடுப்பதற்கு அடுத்த  நிதியாண்டுவரை ஆகும் என்கிறார் Dr. Urjit R. Patel.                இதில் வேடிக்கை என்னவென்றால்    பிரதமர் அறிவிக்கவேண்டியதை இவர் அறிவிக்கிறார் .இவர் அறிவிக்கவேண்டியதை பிரதமர்  அறிவிக்கிறார்  ( பழைய 500 -1000 நோட்டுகள் செல்லாத கதை )  .நமது பிரதான கோரிக்கையான பிட்மென்ட் பார்முலா மாற்றம் --    குறைந்தபட்ச ஊதியம் இவைகளை அனாமலி கமிட்டிக்கு தள்ளிவிடுவது  கோரிக்கைகளின்  தற்கொலைக்கு சமம் என்பது    தெளிவாகிறது 
30.06.2016  பேச்சுவார்த்தையில் நாட்டின் பலமிக்க   மந்திரிகள்   
ராஜ்நாத் சிங்(உள்துறை ).அருண் ஜெட்லி(நிதி )சுரேஷ் பிரபு (ரயில்வே )மனோஜ் சின்கா (இணை அமைச்சர் ரயில்வே )பங்கேற்றும் எந்த உறுதிமொழியும் பின்பற்றப்படவில்லை .
இதற்கிடையில் அனாமலி கூட்டத்தில் அதிகாரிகளால் எந்த உறுதிமொழியும் தரப்படவில்லை .ஊழியர் தரப்பின் வாதங்களை மட்டும் கேட்டு கொள்கிறார்கள் என்ற செய்தியும் மீண்டும் ஊழியர்களுக்கு எரிகிற தீயில் எண்ணெய் வார்ப்பது போல் இருக்கிறது .
இனியாவது வாக்குறுதி --பேச்சுவார்த்தை -நம்பிக்கை --உயர் கமிட்டி -புது கமிட்டி என்றில்லாமல் ஒட்டுமொத்த மத்தியஅரசு ஊழியர்களை திரட்டுவோம் .நாட்டில் உள்ள 138 மத்தியஅரசு ஊழியர் துறைகளில் எத்தனை துறைகளில் இந்த செய்தி சென்றடைகிறது என்பதனை சுய பரிசோதனைக்கு விட்டு பார்க்கவேண்டும் .ரயில்வே தடம் புரளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் .
வெல்லட்டும் -நம் போராட்டம் வெல்லட்டும் 
சொல்லட்டும் -நாளை வெற்றி செய்தியை சொல்லட்டும் 


  தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 










                                                                 

0 comments:

Post a Comment