...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, December 31, 2016

அன்பிற்கினிய தோழர்களே !தோழியர்களே ! உங்கள் அனைவருக்கும் நெல்லை NFPE ன் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .உங்கள் அனைவருடைய வாழ்த்துக்களை வாழ்த்து அட்டைகள் மூலமாகவும் --SMS வழியாகவும் .தொலைபேசியிலும் ,வாட்ஸாப் தளத்திலும் கிடைக்க பெற்றேன் .உங்கள் அன்பிற்கும் ,ஆதரவிற்கும் என்றும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம் .
                                                   புத்தாண்டு டைரி  2017 
இந்தாண்டு நமது கோட்ட சங்கம் சார்பாக வெளிவரவிருக்கும் டைரியில் புதியவர்களின் படைப்புகளை வெளியிட எண்ணியிருந்தோம் .நமது வேண்டுதலை ஏற்று முத்தான கவிதையை படைத்த தோழியர்
 S .முத்துலட்சுமி PA   அவர்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .....
...........................
எத்தனை உறுதிமொழியோடு 
தொடங்கினாலும் எப்போதும் போலவே 
முடிந்து விடுகின்றன எல்லா ஆண்டுகளும் ...
எந்திரங்கள் ஓய்வெடுக்க --நாம் 
எந்திரங்கள் ஆனோம் ....
நித்தம் ஒரு அரசாணை 
கடுகு போன இடம் ஆராய்ந்தோம் 
பூசனிக்காய் போன இடம் தெரியவில்லை 
ஒரு நாள் விடுமுறைக்கு 
வீதி வந்த போராட்டம் .........
சங்கங்கள் இல்லையென்றால் 
சங்கடம் தான் நம் பாடு ........
பூக்களை தான் சுமப்போம் என்று சொல்லவில்லை 
பொதிகளையும் சுமக்க மாட்டோம் ......
ஜீரணிக்க முடியவில்லை 
மக்களாட்சியில் வாரிசு தேடும் அரசியலை 
புத்தாண்டே நீயாவது மீட்டு கொடு 
மாண்டு கொண்டிருக்கும் மக்களாட்சியையும் 
எங்கள் மனசாட்சியையும் --
                  கவிஞர் S.முத்து லட்சுமி PA பாளையம்கோட்டை
                                         வாழ்த்துகிறோம்
திண்டிவனத்தில் நடைபெற்ற 30 வது தபால்காரர் சங்க மாநாட்டில் நெல்லை அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா அவர்கள் மாநில உதவி தலைவராக தேர்ந்தெடுக்க பட்டார்கள் என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம் .(முழு புகைப்படங்கள் விரைவில் )மாநில தலைவராக தோழர் பன்னீர் செல்வம் அவர்களும் மாநிலசெயலராக தோழர் G.கண்ணன் அவர்களும் போட்டியி ன்றி  தேர்வு செய்யப்பட்டார்கள் .புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் எங்கள் வீர  வாழ்த்துக்கள் .
மாநாட்டு மேடையில் மூத்த தோழர் AGP அவர்கள் மாநிலத்தலைவர்  பண்ணீர் செல்வம்  உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள்
   நெல்லை கோட்டசெயலர் தோழர் SKJ அவர்களின் வாழ்த்துரை
 நெல்லை கோட்டத்தின் சார்பாக அமைப்புநிலை விவாதத்தில் பங்குபெற்ற தோழர் புஷ்பாகரன் அவர்களின் உணர்ச்சி உரை 


 மாநில உதவி தலைவராக தேர்வு செய்யப்பட்ட தோழர் SK பாட்சா அவர்களுக்கு நமது கோட்ட தோழர்களின் பாராட்டுகளை தெரிவிக்கும் காட்சிகள் 


0 comments:

Post a Comment