...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, December 31, 2016

                           புரட்சி விதைகளை தூவிடுவோம் !
ஊழியர்கள் பழகி விட்டார்கள் 
உரிமை போரினை விட்டு விலகவும் தொடங்கி விட்டார்கள் 
கொடுத்ததை போதும் என்றும் 
கிடைத்தது லாபம் போன்றும் பெருந்தன்மையுடன் ?
ஏற்கவும் தொடங்கி விட்டார்கள் 

தட்டினாலும் திறக்காது என்றும் 
முட்டினாலும் முடியாது என்று தங்களுக்குளே 
தோற்கவும் துணிந்து விட்டார்கள் 

ஒரே இரவில் --பழைய 
நோட்டுகள் செல்லாமல் போனதிங்கு !
ஒரு வாசலோ --வழியோ இன்றி புது 
நோட்டுகளும் சொல்லாமல் போனதெங்கே ?

சம்பளம் கூட முழுசா வாங்க முடியவில்லை 
சமாளிக்க பழகி கொண்டோம் 
சம்பளக்குழுவிலும் பெரிசா ஒன்னும் கிடைக்கவில்லை 
சமரசம் செய்துகொள்ளவும் தயாராகிவிட்டோம் 

பத்துமணி வரை வேலையென்றாலும் 
பழக்கப்பட்டு போய்விட்டோம் 
பண்டிகை நாளில் வேலை என்றாலும் 
பட்டு கட்டியாவது வர தொடங்கிவிட்டோம் 

கார்டை தேய்த்து வாழ்ந்திடலாம் 
காலை தேச்சு பிழைத்திடலாமா ?

ஒரு உண்மை தெரியுமா ?
தோட்டத்து பூக்கள் எல்லாம் பூக்கும் --வாடும் 
தோழர் தம் உணர்வு பூக்கள் மட்டும் தான் 
பூக்கும் ..வாழும் ....வாழவைக்கும் ...ஆம் 
புரட்சிகள் மட்டும் தான்
பூக்கவும் செய்யும் வெடிக்கவும் செய்யும் ....

வாருங்கள் தொழிற்சங்க தோட்டத்தை 
செப்பனிடுவோம் !பராமரிப்போம் !
வர்க்க உணர்வுகளை எந்த வடிவிலாவது விதைத்திடுவோம் 
நாளை பூப்பதும் ..வெடிப்பதும் 
ஆட்சியாளர்கள் கையில் தான் 
புரட்சி விதைகளை தூவிடுங்கள் 
புது ஆண்டிலாவது புது பாதைக்கு தாவிடுங்கள் 
                          --SK .ஜேக்கப் ராஜ் -----------------------------

6 comments: