...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, May 14, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                  சுழல் மாறுதல் எனும் சூப்பர் மாறுதல்கள் 
  நமது கோட்டத்தில் நேற்று சுழல் மாறுதல் உத்தரவுகள் ,அதைத்தொடர்ந்து RULE 38 மாறுதல்கள் என மொத்தம் சுமார் 136 ஊழியர்கள் இடம்பெற்றுள்ள மெகா மாறுதல் உத்தரவுகள் வந்துள்ளன .ஆரம்பத்திலே கோட்ட நிர்வாகம் சொன்னபடி சீனியாரிட்டி முற்றிலும் கடைபிடிக்கப்படும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவும் வெளிப்படையாகவும் இருந்ததால் இந்த இடமாறுதல்கள் குறித்து நமது ஊழியர்கள் யாரும் எந்தவித பரபரப்போ -படபடப்போ இல்லாமல் இருந்தார்கள் என்பதும் உண்மை . சிலவருடம் சுழல் மாறுதல் சூறாவளியாக நம்மை தாக்கியதுண்டு -சூழ்ச்சிகள் நிறைந்த சுழல் மாறுதல்களையும் சந்தித்துள்ளோம் .ஆனால் இவ்வளவு பெரிய அளவில் நடைபெற்ற இடமாறுதல்களில் சிறுசிறு மாற்றங்களை தவிர ஊழியர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மாறுதல்கள் வழங்கிட்ட நமது முதுநிலை கண்காணிப்பாளர் அவர்கள்மற்றும்  அவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்ட உதவி (ய )கண்காணிப்பாளர்கள் கோட்ட அலுவலக ஊழியர்கள் என அனைவருக்கும் நெல்லை NFPE தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது  .
              கடந்த சிலவருடங்களாக டெபுடேஷன் விஷயத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட மூத்த ஊழியர்களுக்கு ஒரு விடிவு கிடைத்திருக்கிறது -எத்தனை வழிகாட்டுதல் வந்தும் நமது ஊழியர்களை குறிவைத்து விரட்டிய கொடுமைக்கு ஒரு முடிவு வந்துள்ளது ..குறிப்பாக ஆட்பற்றாக்குறையினால் தலைமை அஞ்சலங்களில் மூடப்பட்ட கவுண்டர்கள் ஆதார் சேவை ,BPC ,BACK OFFICE போன்ற பிரிவுகளில் இனி முழுமையாக ஆட்களை நியமிக்க கோட்ட சங்கம் உறுதிப்படுத்தும் .
    குறிப்பாக திருநெல்வேலி தலைமை அஞ்சலத்திற்கு அறிவிக்கப்பட்ட காலி இடங்கள் மொத்தம் -- 15 வ(த )ந்ததோ 18
பாளையங்கோட்டையில்  22 இடங்களுக்கு 20 இடங்கள் கிடைத்துள்ளன ..அம்பாசமுத்திற்கு 6 இடத்திற்கு 8 ஊழியர்கள் வருகிறார்கள் .அதுபோக மிக நீண்ட காலமாக அம்பாசமுத்திரத்தில் நீடித்து வந்த ஆட்பற்றாக்குறை அடியோடு நீக்கப்பட்டுள்ளது .ஆரம்பத்தில் இருந்தே நமது SSP அவர்களும் அம்பாசமுத்திரத்தில் ஆட்பற்றாக்குறையை முற்றிலும் நீக்குவேன் என்று சொல்லிவந்தார்கள் .அவர்களது எண்ணத்தின்படியே RULE 38 யில் வந்த ஊழியர்களில் முப்பத்தி மூன்றில் பதினைந்து ஊழியர்கள் அம்பாசமுத்திரம் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர் .இதுபோக கடந்த காலங்களில் தொலைதூர இடங்களுக்கு மாற்றப்பட்டு TENURE  முடிக்காமல் ஆனால் விண்ணப்பித்திருந்த பழைய விருப்பகடிதங்களின் அடிப்படையில் பல ஊழியர்களுக்கு இடமாறுதல்களை கொடுத்து பேருதவி செய்ததையும் மறக்கமுடியாது .அதேபோல் LRPA அட்டாச் செய்வதிலும் Re designate ஆன ஊழியர்களை அவர்களின் விருப்பங்களுக்கேற்ப  இடமாறுதல்கள் தந்ததையும் ஊழியர்கள் நன்றியோடு நினைவு கூறுகின்றனர் .இருந்தாலும் விடுபட்ட அல்லது புதிய விருப்பங்களையும்  கோட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு விரைவில் எடுத்துச்சென்றுமுற்றிலுமாக  நிவர்த்திசெய்வோம் என்று உங்களுக்கு உறுதி கூறுகின்றோம் 
                LSG இடமாறுதல்களை பொறுத்தவரை மண்டல அலுவலக ஒப்புதலுக்கு சென்றுள்ளன .அவைகளும் விரைவில் வந்தவுடன் நமது கோட்டத்திற்கு RE ALLOTMENT பெற்ற LSG ஊழியர்கள் பயன்பெறுவார்கள்          
          மேலும்  மண்டல  நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட போஸ்ட்மாஸ்டர் கிரேடு I  இடமாறுதல்கள் உத்தரவுகள் ஏற்கனவே வெளிவந்த கிரேடு III உத்தரவுகளையும் விரைந்து அமுல்படுத்த வேண்டும் எனவும் கோட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம் .
                 தோழர்களே ! மற்ற கோட்டங்களை ஒப்பிட்டு பார்க்கையில் ஆட்பற்றாக்குறை என்பது நமது கோட்டத்தில் இல்லை என்பதும் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் RULE 38 இடமாறுதல்களில் ஊழியர்கள் வந்ததும் நமது மாநிலச்சங்கம் எடுத்த மகத்தான முயற்சி என்பதை நினைவில் கொண்டு இந்த NFPE பேரியக்கத்தின் வலிமையை மீண்டும் நிலைநாட்ட தோழர்கள் உறுதிபூண்டு செயல்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் .
                                               BE PROUD BEING A MEMBER OF NFPE 
            நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment