...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, May 10, 2019

 அன்பார்ந்த தோழர்களே !
                               COD யில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க அஞ்சலக பார்சல் வாரியம் 09.05.2019 அன்று அனுப்பியுள்ள கடிதத்தில் புதிய நடைமுறைகளை பின்பற்ற அறிவித்துள்ளது .தொடக்க காலம் முதலாகவே COD பார்சல் மூலமாக அஞ்சலக வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதையும் அதனால் பொதுமக்கள் மத்தியில் அஞ்சல்துறைக்கு உள்ள நற்பெயர் மெல்லமெல்ல சிதைந்து வருவதையும் நமது தொழிற்சங்கங்கங்கள் எல்லா மட்டங்களிலும் எடுத்துரைத்தும் பாராமுகமாக இருந்த நிர்வாகம் இப்பொழுதான் அதற்கான நடைமுறைகளை அறிவித்துள்ளது .இனிமேல் COD BULK /RETAIL  வாடிக்கையாளர்கள் அதில் உள்ளடக்கம் குறித்த விவரங்களை பொதுவான DECLARATION ஒன்றை கொடுக்கவும் ANNEXURE A படிவத்தையும் இணைத்து வழங்கிடவேண்டும் ..இதன்மூலமாகவாவது அப்பாவி பொதுமக்கள் விளம்பரங்களை கண்டு ஆன்லைன் மூலம் பொருள்களை வரவழைத்து பணம்கட்டி  அஞ்சல் அலுவலகங்கள் மூலமாக ஏமாறுவது தடைபட்டால்  நல்லது. 
                              IPPB குறித்த அடுத்த அறிவிப்பு 
 சென்ற ஏப்ரல் மாத கணக்கெடுப்பின் படி IPPB யின் பிசினஸ் வளர்ச்சி என்பது சொல்லும்படியாக இல்லை என்றும் அதை மேம்படுத்த செய்ய வேண்டிய வழிமுறைகளை குறித்தும் IPPB யும் PBI யும் கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுத்துள்ளதாக 9.05.2019 அன்று ஒரு அறிக்கையை அனைத்து மாநிலநிர்வாக அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ளது .வழக்கம் போலவே IPPB பணிகளுக்கு நமது ஊழியர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று தொடங்கி DOOR-STEP பரிவர்த்தனை வரை பொதுமக்கள் மத்தியில் அதிகமாக கொண்டுசெல்லப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது .
     கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையும் கதைபோல --PLI வாடிக்கையாளர்களை தொழிற்சார் கல்வி முடித்தவர்கள்வரை விரிவு படுத்தியபிறகாவது PLI பிரிமியம் IPPB மூலம் செலுத்த  அஞ்சல்துறைக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகள் கிடப்பிலே போட்டுவிட்டு வெறும் RECHARGE மற்றும் EB BILL உள்ளிட்ட மூன்றாம் நிலை தயாரிப்புகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அஞ்சல் வாரியம் ஏன் நமது சொந்த தயாரிப்புகளுக்கு கொடுக்கவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது .IPPB மூலம் PLI -RPLI பிரிமியம் செலுத்துவதற்கு முயற்சித்தாலே IPPB சேவை தானாகவே பிரபலமாகும் என்பதே சாதாரன ஊழியர்களின் கருத்துக்கள் .
எங்கள் ஆலோசனைகள் ஏற்கப்படுமா ?
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment