...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, May 31, 2019

நெல்லை கோட்டத்தின் முன்னாள் ASP -ராமநாதபுரம் ASP 
 திரு 
M .வீரபத்திரன் அவர்களுக்கு பணிநிறைவு வாழ்த்துக்கள் 

பெயரில் வீரத்தையும் -
உள்ளத்தில் ஈரத்தையும் 
ஒருங்கே அமைந்திட்டவரே !
இரக்கமும் -இன்முகமும் 
இயற்கை உங்களுக்கு அளித்திட்ட 
வரப்பிரசாதங்கள் 

கோபமும் -சாபமும் 
ஒருநாளும்  பார்த்ததில்லை 
அமைதியும் -அடக்கமும் 
எந்நாளும் உங்களை விட்டு விலகியதில்லை 

அதிகார சாட்டையை 
ஒருநாளும் சுழற்றியதில்லை 
தண்டிக்கவேண்டும் என்று 
ஒருவரையும் விரட்டியதில்லை 

ஏற்றத்தை கண்டு இறு மாப்பு கொண்டதில்லை 
இறக்கத்தை கண்டு இடிந்து போகவுமில்லை 
எல்லா சூழ்நிலையிலும் சமாளித்தவர் நீங்கள் 
எல்லா இடங்களிலும் நல்ல பெயர் சம்பாதித்தவரும் நீங்கள் 

உங்களை வரவேற்க புதியதொரு 
உலகம் காத்திருக்கிறது 
பணிநிறைவு காலங்கள் 
மனநிறைவோடு மகிழ்ந்திருக்க 
வாழ்த்துகிறோம் ! 
                                   வாழ்த்துக்களுடன் 
                                           -----------------------   SK .ஜேக்கப் ராஜ் ------------------------------
                                                     




0 comments:

Post a Comment