...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, July 28, 2020



Monday, July 27, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
                                                  முக்கிய செய்திகள் 
     BSNL 4G டெண்டர் கேன்சல்...Jio 5G டெக் தொழில் நுட்பத்தில் கூகிள் உடன் முதலீடு...
BSNL சந்தாதாரர்கள் எல்லோரும் 4G தொழில் நுட்பத்தை அடையாமல் 3G தொழில் நுட்பம் மட்டும் உபயோக படுத்த வைத்துவிட்டு.... அதே நேரம் Jio 5G தொழில் நுட்பம் நிறைவேற்ற வைத்தால்...கொஞ்ச நாளில் BSNL வாடிக்கையாளர் அனைவரும் Jio விற்கு மாறுவர். 
அப்புறம் வாடிக்கையாளர் இல்லாமல் BSNL நஷ்ட கணக்கு காட்டப்படும். பிறகென்ன... BSNL நிறுவனம் குறைந்த தொகைக்கு அம்பானிக்கு விற்கப்படும். அரசு நிறுவனம் தனியாருக்கு போகும். இந்தியா முழுதும் உள்ள BSNL டவர்கள் கருவிகள் கட்டிடம் என்று சகலமும் Jio வாக மாறும்.  
*   வங்கித் துறையில் இணைப்பை வலுக் கட்டாயமாக திணிக்கிறது மத்திய அரசு. ஆனால் பொது இன்சூரன்ஸ் துறையில் இணைப்பு வேண்டும் என்று தொழிற் சங்கங்கள் கோரிக்கை வைத்து, 3 அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை இணைப்பது என்றும் எடுத்த முடிவில் இருந்து மத்திய அரசு பின் வாங்குகிறது. ஏன் இந்த முரண்பாடு? ஒரு முரண்பாடும் அரசுக்கு இல்லை. இணைப்பானாலும், முறிப்பானாலும் அது தனியார்க்கு பயன்படுமா என்பதுதான் அரசின் கவலை.    
*          நாட்டு மக்களைப் காப்பாற்றிட, அரசமைப்புச்சட்டத்தின் தலைவர் என்ற முறையில், மத்திய மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பித்திட வேண்டும் என்று நாட்டின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு, மத்தியத் தொழிற்சங்கங்கள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தொமுச உட்பட பத்து தொழிற்சங்கங்கள் சார்பில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:    தொழிலாளர்நலச் சட்டங்களை, தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றும் விதத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்களை நிறுத்தி வைத்திட வேண்டும். தொழிலாளர்நலச் சட்டங்கள் அனைத்தையும் நான்கு தொழிலாளர் சட்டங்களாக மாற்றும் முயற்சியை நிறுத்தி வைத்திட வேண்டும். இவை தொடர்பாக இந்தியத் தொழிலாளர் மாநாட்டை உடனடியாகக் கூட்டி அதன்பின்னரே இவற்றின் மீது நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். சுகாதாரம், கல்வி  மற்றும் வேளாண்மையை விரிவாக்கும் விதத்தில் முதலீடு செய்யப்பட வேண்டும். இன்றியமையாப் பண்டங்கள் சட்டத்தைத் திருத்துவது உட்பட வேளாண்மை தொடர்பாகக்கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டங்கள் மூன்றையும் ரத்து செய்திட வேண்டும்.   
நன்றி .   தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை                  
   
                                                

Friday, July 24, 2020

                                                                   வாழ்த்துக்கள் 
இன்று தன விருப்ப ஓய்வில் செல்லும் தோழியர் J.பிரேமலதா அவர்களின் பணிஓய்வு காலங்கள் சிறக்க வாழ்த்துகிறோம் .நமது சம்மேளனம் நடத்திய அனைத்து இயக்கங்களிலும் தவறாமல் பங்கேற்றவர் .
வாழ்த்துக்களுடன் NELLAI NFPE 

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 
*கிளை அஞ்சலகங்களிலும் MIS/SCSS/KVP /NSC/PPF சேவைகள் விஸ்தரிக்கப்பட்டுளன .இதற்கான உத்தரவுகள் SB 27.2020 23.07
.2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது .கணக்கு தொடங்குவது முதல் அனைத்தும் காசோலைகள் மூலம் நடைபெறும் /MIS SCSS வட்டிகள் சேமிப்புக்கணக்குகள் மூலம் தான் பெற்றுக்கொள்ளமுடியும் .
*GDS TO போஸ்ட்மேன் தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ள தோழியர் கௌர் BPM கானார்பட்டி அவர்களை NELLAI NFPE வாழ்த்தி வரவேற்கிறது 
*.LSG இடமாறுதல்கள் MOVE ஆகிவிட்டன .அடுத்த வாரத்தில் ஏனைய எழுத்தர்களுக்கான சுழல் மாறுதல்கள் பரீசீலிக்கப்படவுள்ளன .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T,புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, July 23, 2020


Service Requests Procedure to be followed in CBS Post offices – POSB Rule Wise

The Savings Bank and Savings Certificate operations are being performed on CBS platform in post offices. Hence, it is common that customers of one Post office will approach another Post Office for various service requests.


Therefore, every staff must have thorough knowledge pf procedure to be followed in such cases to provide customer friendly services. A few such common service requests frequently received in the counters and the procedure to be followed are enumerated below Rule wise.

Service Requests Procedure of Transactions that can be done only at the office [SOL] in which the Account stands: 

SL NoType of Service requests commonly received in respect of same SOL and other SOLApplicable Rule of POSB CBS ManualWhether it can be provided in same SOL or at different SOLs also.
01Revival of SB AccountsRule 55Revival of Account will be done in the concerned HO of the SOL. Hence, application can be accepted in the same SOL or in the HO of the concerned SOL.
02Issue of Duplicate Pass Book in lieu of Lost oneRule 45The Duplicate Pass Book can be issued by HO only. So the application can be accepted either in the same SOL or in the HO of the concerned SOL.
[Fee Rs.50+9=Rs.59]
03Issue of Duplicate Pass Book in lieu of spoil oneRule 46The Duplicate Pass Book can be issued by HO only. So the application can be accepted either in the same SOL or in the HO of the concerned SOL.
[Fee Rs.50+9=Rs.59]
04Issue of Duplicate Pass Book in lieu of lost or mutilated certificate[NSC/KVP]Rule 160It will be done in the HO of concerned SOL. The application can be accepted in the same SOL and be forwarded to concerned HO.
[Fees Rs.10+2 per registration]
05Discharge of NSC/KVPRule 150It can be done in same SOL only. However ,if the certificates are produced for discharge at other SOL, then it must be got transferred to said office by collecting applicable transfer fee from the customer.
06Request for conversion of normal SB into Cheque AccountAppendix III of POSB CBS ManualIt can be done in same SOL only.
07Issue of Fresh Cheque Book in the existing SB Cheque AccountAppendix III of POSB CBS ManualIt can be done in same SOL only.
[Fees: up to 10 cheques in a calendar year no fees. Thereafter at Rs.2 per cheque]
08Issue of fresh ATM cardRule 3[ix]It can be done in same SOL only.
09Blocking the lost ATM cardRule 3[ix]It can be done in same SOL only.
10Replacement of magnetic strip ATM card with EMV chip cardRule 3[ix]It can be done in same SOL only.
11Pledging of NSC/KVPsRules 159It can be done in the HO of the concerned SOL. So application can be accepted either in the same SOL or in the Ho of concerned SOL.
[Fees Rs.100+18=Rs.118]
12Release of pledge in r/o NSC/KVPsRules 159It can be done in the HO of the concerned SOL. So application can be accepted either in the same SOL or in the HO of concerned SOL.
13Acceptance of application for claim in respect of deceased depositorsRule 60It must be done in same SOL only. As Per Rule 60[2][ii] of POSB CBS Manual, if the claim is preferred at any other post office ,the BPM/SPM/PM/Senior PM should accept the witness and forward the case along all documents to the post office where the Account stands by Service Insured Post on the date of its receipt.
14Fresh nomination in case of nomination is not already registeredRule 15Can be done in same SOL only.
15Cancellation/change of nomination in case where nomination is already registeredRule 15Can Be done in same SOL Only.
[Fees Rs.50+9=Rs. 59]
16Closure of AccountsRules 37[SB]
Rule 78 [RD]
Can be done in the same SOL where the Account stands. If the application for closure is received in other SOL, the Account must be got transferred to said SOL by collecting applicable transfer fees [Rs.100+18] from the customer as per rule.
17Debit FreezingRule 63[1]Can Be done in the same SOL if there are two identified supervisors. In case of all other offices, it must be done at the concerned HO only.
18Credit FreezingRule 63[1]Can Be done in the same SOL if there are two identified supervisors. In case of all other offices , it must be done at the concerned HO only.
19Renewal/Extension of TD accountsRule 94[1]Can be done in the same SOL after receiving application in Form 3 Account holder for extension/renewal of account.

Type of Service requests commonly received in respect of same SOL and other SOL
However, if any customer service requests for availing the above services at an post office other than the office at which the Account stands open, then he can be guided about the facility of transfer of Account from office to office on payment of prescribed fees. However, it is optional for the customer to get his Account transferred or not. He must not be compelled.

SL NoType of Service requests commonly received in respect of same SOL and other SOLApplicable Rule Of POSB CBS ManualWhether it can be provided in same SOL or at different SOLs also.
01Acceptance of subsequent cash deposit in SB/RD/PPF/SSARule 26 [SB]
Rule 73 [RD]
Rule 106 [PPF]
Rule 141 [SSA]
The cash deposit can be made in the same SOL as well as in different SOL, But , in the different SOL,the limit is Rs. 25,000 in cash per day subject to applicable rule of the scheme.
02Acceptance of subsequent deposit in POSB cheque in SB/RD/PPF/SSAAppendix III of POSB CBS ManualAs per SB Order 12/2019, POSB Cheque can be accepted at other SOLS without restriction of amount for credit in POSB/RD/PPF/SSA Accounts subject to the limits if any prescribed in the scheme.
03Withdrawal from SB Account of other SOLRule 28As per SB Order 12/2019,all POSB Cheques issued by any CBS Post office if presented at any CBS Office should be treated as AT PAR cheques and should not be sent for clearing. No POSB cheque for more than Rs.25000 should be accepted for cash withdrawal at other SOLs in a day.
04Issue of Fresh Pass Book in lieu of used up oneRule 44Can be issued by any CBS Post Office.
05Entry of transactions in Pass BooksRule 29Can be done in any CBS office without restriction on SOLs.
06Issue of statement of Account/Balance enquiryRule 12Can be done in any CBS office without restriction on SOLs.
[Fees Rs.20+4=Rs.24]
07Acceptance of 15H137 [A]Can be accepted in any CBS Post Office. However, it must forward the same to concerned SOL where the Accounts stands.
08Posting of Interest in SB/SSARule 49 [SB]
Rule 141 [SSA]
It can be done by any CBS PO without restrictions of SOL.
09Transfer of Account from one SOL to another SOLRule 42The application can be accepted in the same SOL or in the transferee office or in the HO of the concerned SOL.
[Fees Rs.100+18=Rs.118

This may be kept as reference in the office while attending the service requests of the customers. The savings Bank/Savings Counter PAs may be suitably guided in this regard.

Wednesday, July 22, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                நமது முன்னாள் பொதுச்செயலர் தலைவர் KVS அவர்கள் அஞ்சல் துறையில்  DEFENSE ASSISTANT  ஆக பணியாற்றிட விரும்பும் ஊழியர்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல் வகுப்புகள் நடத்த உள்ளார்கள் .நமது கோட்டத்தில் நன்னடத்தை விதிகள் குறித்த வகுப்புகளில் சேர விரும்புகிறவர்கள் கோட்ட சங்கத்தை தொடர்புகொள்ளவும் ..குறிப்பாக இளையத்தோழர்கள் மற்றும்  மூத்த அனுப்பமுள்ள தோழர்களும் இதில் பங்கேற்கலாம் 
*அஞ்சல் துறையில் அமுலில் இருந்த INSTANT MONEY ORDER (IMO) SERVICE  14.07.2020 முதல் ரத்துசெய்யப்பட்டுள்ளது 

*SB Order No. 26/2020 : Regarding discontinuation of ACG-17 taking from SAS/MPKBY agents for commission payment at the time of acceptance of business in CBS Post Offices

*GDS ஊழியர்களுக்கு கொரானா தொற்று சிகிச்சைக்காக மாநில சேம நல நிதியில் இருந்து ரூபாய் 20000 வாழங்கப்படும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Tuesday, July 21, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                                       முக்கிய செய்திகள் 
* NIGHT DUTY  ALLOWANCE குறித்த விளக்க ஆணை DOPT யால் 13.07.2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது .
*ஆய்வாளரில் இருந்து உதவி கண்காணிப்பாளர்களுக்கான பதவி உயர்வு   பட்டியல் நேற்று வெளிவந்துள்ளது    

*நெல்லை BSNL நிறுவனத்தின் தற்போதய நிலை மிகவும் பரிதாபகரமாக மாறியுள்ளது. 7 மாடியில் 1,000 போ் பணியாற்றிய அலுவலகத்தில் தற்போது 50 போ் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


                            

Saturday, July 18, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
                                              முக்கிய செய்திகள் 
*LGO தேர்வில் 2019 ம் ஆண்டிற்கான காலிடங்களில்  தமிழ் மாநிலத்திலும் 31.12 .2019 வரை ஏற்பட்ட எதிர்பாராத எழுத்தர் காலியிடங்களை 2019 ஆம் ஆண்டின் காலியிடங்களாக கணக்கில் கொண்டு 2019ஆம் ஆண்டு தேர்வு எழுதிய தபால்காரர் ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும் என்று நமது மாநிலச்சங்கம் நேற்று CPMG அவர்களுக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளது .
*தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் கோரிக்கையை ஏற்று 07.07.2020 வெளியிடப்பட்ட LSG பதவி உயர்வு பட்டியலை(Kept on hold) தற்காலிகமாக நிறுத்திவைத்து தமிழ் மாநில நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. .நமது கோட்டத்திலும் தோழியர் சண்முகசுந்தரி அவர்களின் பெயர் விடுபட்டதை சுட்டிக்காட்டியுள்ளோம் ..
*கொரானா பரிசோதனை செய்ய நமது ஊழியர்கள் எவ்வாறெல்லாம் அலைக்கப்படுகிறார்கள் என்பதனை நாம் கண்கூடாக பார்க்கமுடிந்தது .நேற்றுக்கூட இந்த பிரச்சினை குறித்து நாம் உடனே பேசினோம் ..ஆகவே இந்த சூழலில் நமது ஊழியர்கள் தங்களுக்கு விடுப்பு தேவைப்பட்டால் தயங்காமல் எடுத்துக்கொள்ளவும் .அந்த அதிகாரி இப்படி சொன்னார் இந்த அதிகாரி இப்படி சொன்னார் என வருத்தப்படாதீர்கள் ..அப்படி யாருக்காவது பிரச்சினை என்றால் கோட்ட செயலருக்கு அல்லது அந்தந்தப்பகுதி நமது முன்னனி தோழர்களிடம் கூறவும் .
நன்றி /தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன்  கோட்ட செயலர்கள் நெல்லை 

Friday, July 17, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 
*கோவிட் காலத்தில் மத்திய அரசு துறைகளில் அமுல்படுத்தப்படும் ரோஸ்டர் முறைகளில் இருந்து மாற்று திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கலாம் என அஞ்சல் வாரியம் தனது 15.07.2020 தேதியிட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது 
*RTP சேவைக்காலத்தை பணியில் சேர்ப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தகுதியுள்ள அனைவருக்கும் அமுல்படுத்திட நமது சம்மேளனம் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது 
*நாடாளுமன்றம்  மாநிலங்களவை  உறுப்பினர் மான்புமிகு ராஜீவ் சந்திரசேகர் அவர்கள் நீலகிரி  குன்னூர் தபால்காரராக பணியாற்றி ஓய்வு பெற்ற திரு                       D. சிவன்(GDS).அவர்களின் சிறப்பான அஞ்சல்  சேவையை  பாராட்டி நன்றி  தெரிவித்து ஒரு லட்சம்  ரூபாய் வெகுமதி  வழங்கியுள்ளார் எத்தனை துறைகள் இருந்தாலும் மக்களோடு  இணைந்து  அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக தபால்காரர்கள் திகழ்கின்றார்கள்  என புகழாரம் சூட்டியுள்ளார் 
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, July 16, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
     *கொரானா தொற்றின் காரணமாக திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் மூன்று நாட்களும் (15.,07.2020 முதல் 17,07,2020) பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம்மற்றும் கோட்ட அலுவலகம்  இரண்டு நாட்களும் (15.,07.2020 முதல் 16,07,2020) மூடப்படுவதாக அதிகாரப் பூர்வமான அறிவிப்புகள் வந்துவிட்டது .பாளையம்கோட்டை தலைமைஅஞ்சலகம் நாளை செயல்படும் .ஊழியர்கள் அனைவரும் மிக எச்சரிக்கையாக பணியாற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
*இரண்டு தலைமை அஞ்சலத்திலும் ஊழியர்கள் அனைவருக்கும் கோவிட பரிசோதனை செய்வது சாத்தியமில்லை என்றும் பாதிக்கப்பட்ட ஊழியர்களோடு நேரடி தொடர்புடைய சில ஊழியர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்துகொண்டால் போதும் என்று மருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளனர் .மேலும் தோழர்கள் தங்களுக்கு எதாவது உடல்நலம் குறைவு என எண்ணினால் எத்தனை நாட்கள் என்றாலும் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம் 
*நேற்றைய LSG உத்தரவுகள் கிட்டத்தட்ட அனைவருக்கும் பொதுவானதாகவும் ஊழியர்கள் நலன் சார்ந்த அடிப்படையில் இருந்தது .இதற்காக நமது SSPமற்றும்  ASP HOS ஆகியோர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
*MTS மற்றும் தபால்கார்களுக்கான பதவிஉயர்வு சம்பந்தமான இடமாறுதலுக்கான கமிட்டியும் நேற்று நடைபெற்றது .அனைவருக்கும் அவரவர் விருப்ப இடங்கள் கிடைத்துள்ளது 
*நமது கோட்டை செயல்தலைவர் N.கண்ணன் SBCO தோழர் கணேஷ் சேரன்மகாதேவி SPM போஸ் ஆராமுதன் மற்றும் விக்னேஷ் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வேண்டுகிறோம் .
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் T,புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, July 15, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
                                                       முக்கிய செய்திகள் 
*நமது கோட்டத்தில் இன்று LSG ஊழியர்களுக்கான இடமாறுதல் கமிட்டி  தொடர்கிறது .ஏற்கனவே TENURE  முடித்தவர்கள்,
 RE ALLOTMENT  பெற்றவர்கள் அவர்களை தொடர்ந்து LSG பதவிஉயர்வால் கடந்தாண்டு வெளியிடங்களுக்கு சென்றவர்களுக்கான விருப்ப மனுக்களும் இன்று பரீசீலிக்கப்படுவதாக தெரிகிறது .
*புதிதாக LSG பதவிஉயர்வு பெற்ற 61 ஊழியர்களுக்கும் தென்மண்டலமே கிடைத்திருந்த போதிலும் நமது கோட்டத்தில் அதற்கும் பாதிதான் VACANCY இருக்கிறது /சென்னை மண்டலத்தில் 125 பேரில் 57 பேர் மேற்குமண்டலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளனர் 
* 2018- 19 ஆண்டிற்கான  GPF Balance Sheet வழங்கப்படாததை சுட்டிக்காட்டி உடனடியாக அதனை வழங்கிட வேண்டி மாநில நிர்வாகத்திற்கு மாநில சங்க சார்பில்\ கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது 
*இனி நிரப்பப்படும் LSG பதவி உயர்வு பெற்ற ஊழியர்களுக்கு நிரப்பப்படாத HSG II  இடங்களை LSG பதவியாக கணக்கில் கொண்டு இயக்குனராக  05.12.2018 தேதியிட்ட உத்தரவை அனைத்து கோட்டங்களிலும் அமுல்படுத்த மாநிலச்சங்கம் மீண்டும் வலியுறுத்துவருகிறது 
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை  

Tuesday, July 14, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
                                           மாநிலச்சங்க செய்திகள் 
*RTP  குறித்த வழக்கு நமது மத்திய சங்கத்தால் Principle CAT New delhi  யில் தொடரப்பட்டு அது தொடர்ந்து வருவது உங்களுக்குத் தெரியும். எனவே வழக்கு ஏற்கனவே Principle CAT New Delhi ல் நிலுவையில் உள்ள சூழலில் புதியதாக ஒரு வழக்கு சென்னை CAT ல்  தொடர  அவசியம் இருக்காது. மேலும் புதிய வழக்கு  கால தாமதத்தை அதிகரிக்கச் செய்யும் .இதுகுறித்து நமது வழக்கறிஞரை கலந்தாலோசித்தோம்   அவரும் சற்று பொறுமை காக்கும்படி அறிவுறுத்தி உள்ளார்.  Principle CAT New Delhi ல் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதில் குறிப்பிடத்தகுந்த அளவு முன்னேற்றம் அடுத்த hearing ல் வரவில்லை என்றால் நாம் மேற்கொண்டு புதியதாக ஒரு வழக்கினை சென்னை CAT ல் தொடரலாம். மேலும் நேரடியாக உயர்நீதிமன்றத்திற்கு செல்வதற்கும் இதில் வாய்ப்பு இல்லை நமது தலைவர் தோழர் KVS அவர்கள் பொதுச்செயலாளராக இருந்த போதுதான் டெல்லி  Principal CAT ல்  இந்த வழக்கானது தொடுக்கப்பட்டது என்பதை யாரும் மறக்க முடியாது மறுக்க முடியாது. மேலும் நம்முடைய NFPE சங்கம்  மட்டுமே தபால்காரர் களுக்கான உயர் ஊதியத்திற்காக வழக்கினை தொடர்ந்து நடத்தி இறுதியில் வெற்றி பெற்று அனைத்து தோழர்களும்  லட்சக்கணக்கில் நிலுவைத்தொகை வாங்குவதற்கு காரணகர்த்தாவாக செயலாற்றி உள்ளது. அதே போன்று RTP  வழக்கிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது .ஆகவே அனைவரும் இந்தத் தருணத்தில் சற்று அமைதி காக்க வேண்டும் .மேலும் மாநில சங்கம் கூடிய விரைவில் அதனுடைய முடிவினை இது சம்பந்தமாக மூத்த வழக்கறிஞர்களை கலந்து ஆலோசித்து பின்னர் வெளியிடும். எனவே மீண்டும் அமைதி காக்க வேண்டுகிறேன்.
*இன்று 7/7/20  DPS CCR அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம் covid-19 சம்பந்தமாக பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் துரித நடவடிக்கையில்  கொடுக்க உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தபால்காரர் தோழர்கள் வேலை முடிந்தால் வீட்டுக்கு சென்றுவிடலாம் யாரும் கூட்டம் சேர வேண்டாம் சென்னை மண்டலத்தில் மட்டும் 5 தோழர்கள் இறந்தது பற்றி வருத்தம் தெரிவித்தார் எனவே அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்  என்றும் பாதுகாப்பின் அவசியத்தை பற்றியும் சொன்னார் ஏதாவது பிரச்சனை இருந்தால் என்னிடத்தில் தெரியப்படுத்துங்கள் உடனடி நடவடிக்கை எடுக்கிறேன் என்று  உறுதி அளித்தார் DPS CCR அவர்களுக்கு மாநில சங்கத்தின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி.தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T .புஷ்பாகரன் கோட்டசெயலர்கள் நெல்லை  

Monday, July 13, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
               GDS TO MTS தேர்ச்சிபெற்று பயிற்சியில் இருக்கும் தோழர்கள் 
R .   இசக்கிஅம்மாள் B .தளவாய் சுந்தரம் மற்றும் M . சாலிபாஷா நமது NFPE இயக்கத்தில் சேர்ந்துள்ளார்கள் /அவர்களை NELLAI  NFPE வாழ்த்துகிறது .
*GDS TO தபால்காரர் தேர்வில் வெற்றிபெற்று இன்றுமுதல் பயிற்சியில் சேரும் அனைத்து தோழர்களுக்கும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .தோழர்கள் S .ரமேஷ்   R .முருகன்
 A .முருகானந்த லட்சுமி N .சக்திகலா P .சீதாலட்சுமி A .பெரியதுரை 
P .பஞ்சவர்ணம் இதில் தோழியர் B .முருகேஸ்வரி BPM வள்ளியம்மாள்புரம் மட்டும் பயிற்சிக்காலத்தை தள்ளிப்போட கோரியுள்ளார் .தோழர்கள்மென்மேலும் அடுத்தகட்ட பதவி உயர்வை    அடைய வாழ்த்துகிறோம் 
*திருநெல்வேலி RMS அலுவலகத்தில் பணிபுரியும் மெயில்கார்டு   (59) தோழருக்கு கொரானா தோற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் நேற்றும் இன்றும் RMS மூடப்படுகிறது    
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ்P3  -T.புஷ்பாகரன்P4  கோட்ட செயலர்கள்                          
                      

Saturday, July 11, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
                                                           முக்கிய செய்திகள் 
*GDS TO போஸ்ட்மேன் தேர்வில் வெற்றிபெற்ற தோழர்களுக்கு வருகிற 
13/07.2020 முதல் 25.07.2020 வரை பாளையம்கோட்டையில் பயிற்சி தொடங்குகிறது 
*நீண்ட  இழுபறிக்கு இடையே திருநெல்வேலி தலைமை அஞ்சலக அதிகாரி 
திரு .V.கடற்கரையாண்டி அவர்கள் NFG பதவி உயர்வில் நாகர்கோவிலுக்கு செல்ல மண்டல அலுவலகம் நேற்று அனுமதியளித்துள்ளது .பணிஓய்விற்கு முன்பு பதவிஉயர்வினை அடையும் தோழர் V.கடற்கரையாண்டி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் 
*நமது கோட்டத்தில் LSG ஊழியர்களுக்கான சுழல் மாறுதல் உத்தரவுகள் தயார் நிலையில் இருக்கின்றது .
*HSG I  TO NFG பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் படி அஞ்சல் வாரியம் 06.07.2020 தேதியிட்ட உத்தரவில் அனைத்து மாநிலங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது .சில மாநிலத்தில் 24.06.2020 வழிகாட்டுதலில் விதி மீறல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
*கணினி வாங்குவதற்கான முன்பணம் அதிகபட்சமாக ரூபாய் 50000 என உயர்ந்துள்ளது .2020-2021 ஆண்டுக்கான விண்ணப்பங்கள் 15.07.2020 குள் அனுப்பிட மாநில நிர்வாகம் 08.07.2020 தேதியிட்ட உத்தரவில்  கூறியுள்ளது .
நன்றி /தோழமையுடன் 
SK ,ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் P3 .T.புஷ்பாகரன்  கோட்டசெயலர் P4 

Friday, July 10, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
                                                முக்கிய செய்திகள் 
*நமது கோட்டத்தில் LSG ஊழியர்களுக்கான சூழல்மாறுதல் குறித்த கமிட்டி நேற்று (0.7.2020 )கூடியது ..கோவில்பட்டி முதுநிலை கண்காணிப்பாளர் திரு பாண்டியராஜன் அவர்களும் இந்த கமிட்டியில் மற்றொரு உறுப்பினராக பங்கேற்றார்கள் .கூடுமானவரை ஊழியர்களின் விருப்ப இடங்கள் கிடைத்திருக்கிறது என்பதனை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம் .இத்துடன் Re allotment பெற்ற ஊழியர்களுக்கும் பதவி உயர்விற்கான மாறுதல் கொடுக்கப்பட்டுள்ளது .LSG  நீங்கலான இதர எழுத்தர்களுக்கான  சுழல் மாறுதலுக்கான கமிட்டியில் தூத்துக்குடி கோட்ட கண்காணிப்பளர்கள் அவர்கள் மற்றொரு மெம்பராக செயல்படுவார்கள்
 *GDS TO போஸ்ட்மேன் தேர்வில் வெற்றிபெற்ற தோழர்கள் .தோழியர்களை NELLAI  NFPE  சார்பாக வாழ்த்துகிறோம்.வரவேற்கிறோம் 
1..S.ரமேஷ் கீழ காடுவெட்டி 2.R.முருகன்திடியூர் 3.B .முருகேஸ்வரி வள்ளியம்மாள்புரம் 4.A.முருகநாதலட்சுமி இளங்குளம் 5/N.சக்திகலா  சுவிசேஷபுரம் 6.P.சீதா லட்சுமி சேரன்மகாதேவி 
7..A.பெரிய துரை மேலபுத்தனேரி 8.P.பஞ்சவர்ணம் இட்டமொழி 
*சமீபத்தில் வெளியான LSG பட்டியலில் உள்ள குளறுபடிகளை உடனே நிவிர்த்தி செய்திட வலியுறுத்தி நமது மாநில சங்கம் CPMG அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது .(தனியாக கடிதம் பதியப்பட்டுள்ளது )
*தோழியர் கற்பகம் PA பர்கிட்மாநகரம் அவர்களின் TEMPORARY TRANSFER EXTENSION குறித்து நேற்று நமது மண்டல செயலருக்கும் மாநில செயலருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது 
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் P3 T.புஷ்பாகரன் கோட்ட செயலர் P4 



Thursday, July 9, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
                                                        முக்கிய செய்திகள்
                        நேற்றைய முன்தினம்  வெளிவந்த LSG பதவிஉயர்வில் நமது கோட்டத்திற்கு மட்டும் சுமார் 60 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வந்துள்ளது .இன்றைய நிலையில் நமது கோட்டத்தில் இருக்கும் LSG  காலி இடங்களோ கிட்டத்தட்ட  34  தான் .அதிலும் கடந்த மார்ச் மாதம் (17.03,2020 ( RE ALLOTMENT பெற்ற  (8+1 ) ஊழியர்கள் போக   மீதமிருப்பது 25 தான் .மற்றவர்களுக்கு மீண்டும் வெளிக்கோட்டம் செல்லவேண்டிய நிலை .இந்த சூழலில் இன்று LSG  இடமாறுதலுக்கான கமிட்டி கூடுவதாக தெரிகிறது ...இதற்குப்பிறகு தான் புதியதாக LSG வந்த ஊழியர்களுக்கான ALLOTMENT 15 நாட்களுக்குள் மண்டல அலுவகத்தில் இருந்தும் கோட்ட அளாவிலான உத்தரவுகள் அதிலிருந்து 5 நாட்களுக்குள்ளும் இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்க மாநில நிர்வாகத்தில் இருந்து ஆணை வந்துள்ளது.
  *நமது கோட்டத்திலும் தோழர் விக்னேஷ் (வீரவநல்லூர் ) தோழர் ஆராமுதன்(சேரன்மகாதேவி ) ஆகியோர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுவோம்.அதேபோல் வீரவநல்லூர் சேரன்மகாதேவி ஊழியர்களுக்கும் பாதிப்புகள் ஏதுமின்றி நல்ல முடிவுகள் வந்திடவும் வாழ்த்துவோம் .
நன்றி .தோழமையுடன் 
SK ,ஜேக்கப் ராஜ் P3-T.புஷ்பாகரன்P4 கோட்ட செயலர்கள் நெல்லை 


Wednesday, July 8, 2020


அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 
தமிழகத்தில் மீண்டும் ஒரு மெகா LSG  பதவி உயர்வு பட்டியல் வெளியி டப்பட்டுள்ளது .மொத்தம் 901 ஊழியர்கள் LSG பதவி உயர்வு பெறுகிறார்கள் .பதவி உயர்வு பெறும் அனைவருக்கும் அந்தந்த மண்டலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .நமது கோட்டத்தில் LSG பதவி பெறுகின்ற தோழர்கள் 
N .செண்பக வள்ளி E .அரவாமுதன் .S .சுசிவஞான ஜோதி J.குணசேகர் 
M .நம்பிராஜன் V.அறம்வளர்தம்மாள் R .சுகிர்தா J.மேரி 
M .ராஜேஸ்வரி N .சுஜா S .மகபூப் ஜான் G.உமா K .மீனா
 C .அல்போன்ஸ்கீதா  E .சுபா A .பரிதி .வதனா PN .ஜெயலட்சுமி S .சிவலக்ஷ்மி P மைக்கேல் V.பூமணி 
M .வெங்கடேசன் M .கற்பகம் M .அருணாராணி M .கீதா A .வெங்கடேசன் 
S .ராமச்சந்திரன் V.சரவணன் A .சுப்ரமணியன் A .ரசூல் J.பிரேமலதா 
M .ராம்சித்ரா B .மலைஅரசி R .சுதாஹரி P .முத்துலட்சுமி S .சாலோமோன் 
G.பரமசிவன் S .முத்துமாலை I .சீனி S .காசி  R .ரகுமாதவன் V.செல்லம்மாள் 
A .பழனி T .கோபாலன் M.கிருஷ்ணன் B.குமாரி S.சூரியகலா P.முத்து 
R .சண்முக சுப்ரமணியம் G.ராஜேந்திர போஸ்  O.மூக்கையா G.தமிழரசி 
N.வெண்ணிக்குமார் K.பாக்கியமணி 
அனைவருக்கும் NELLAI NFPE யின் வாழ்த்துக்கள் 

.

Tuesday, July 7, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
       நமது முன்னாள் மாநில செயலரும் முன்னாள் அகிலஇந்திய செயலருமான தோழர் J.ராமமூர்த்தி அவர்கள் தொழிற்சங்க வரலாறு குறித்த பதிவுகளை எழுதிவருகிறார்கள் .இளைய தோழர்கள் மற்றும் தோழியர்கள் அனைவரும் அவசியம் தெரிந்திருக்கவேண்டிய உண்மை வரலாறு .நமது கோட்ட சங்க உறுப்பினர்களும் இந்த உன்னத வரலாற்றை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு மீள் பதிவாக இங்கு பதிவிடுகிறோம் .
தொழிலாளி வர்க்க இயக்கங்கள் துவங்குதலும் -
சிகாகோ பேரெழுச்சியும் !
             பகுதி - 1 ~~~~
1. வர்க்கப் பிரிவினை
உழைக்கும் தொழிலாளர்களுக்கு எதிரான அடக்கு முறைகளும் கொடுமைகளும், அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதும் தொடரும்போது
தன்னெழுச்சியாக
தனிமனித எதிர்ப்புகளும், தொடர்ந்து குழுவாக எதிர்த்தலுமான
எதிர்ப்பு நிலைகளும்,  பின்னாளில் அந்தக் குழுக்களே தனித்தனியாகவோ, ஒன்று சேர்ந்தோ கூட்டு எதிர்ப்பு முயற்சிகளை பல வடிவங்களில் மேற்கொள்ளத் துவங்கியதே அவை தொழிற்சங்க இயக்கமாக மாறக்காரணம்.
இவை எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் தனிப்பட்ட முறையில் சொந்தமானதல்ல.
வர்க்கப் போராட்டம்
என்றாலே ஏதோவொரு அரசியல் கட்சிதான் அதற்கு சொந்தம் என பொய்யாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. அது தவறு. இதனை உணர்ந்துதான் நாம் வர்க்கமாக ஒண்றிணைவோம்; அரசியல் தேவையில்லை என்கிறோம்.
அரசன் - குடி மக்கள் ;
ஆண்டான் அடிமை ;
பிரபுக்கள் - கூலி ;
நிலச்சுவான்தார்- விவசாயக் கூலித் தொழிலாளர் ;
தொழிற்சாலை முதலாளி- தொழிலாளி;
இப்படியாக முதலாளி வர்க்கத்தினர் ஒரு பகுதியாகவும் தொழிலாளர் வர்க்கத்தினர் ஒரு பகுதியாகவும் பிரியத் துவங்கினர்.
இதுவே பின்னாளில் முதலாளி வர்க்கம் ; தொழிலாளி வர்க்கம் என வர்க்கப் பிரிவினையானது.
அதுவே தொடர்ந்து வர்க்கப் போராட்டமாக உருவெடுக்கலாயிற்று.
இதில் எந்த வகையான உழைப்பைச் செலுத்துபவர்களும் தொழிலாளி வர்க்கமாகவும், எந்தவிதமான முதலீட்டை செலுத்துபவர்களும், அவர்களுக்கான உயர்நிலை  நிர்வாகிகளும்
முதலாளி வர்க்கமாகவும் அடையாளப் படுத்தப் பட்டனர்.
இப்படியான குழு நிலைப் போராட்டங்கள் அநேகமாக ஆண்டான்- அடிமை பிரிவினை தொடங்கிய காலத்திலேயே தொடங்கப்பட்டு விட்டன. ஆனால் அவையெல்லாம் வர்க்கப் போராட்டமாக அடையாளப் படுத்தப் படவில்லை_____(தொடரும் )
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்டசெயலர்கள் நெல்லை 


அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
*கடந்தவாரம் வெளிவந்த ஆய்வாளர் தேர்வு முடிவுகளில் 390 பேருக்கு OMR கொற்றுக்கொள்ளப்படாததை சுட்டிக்காட்டி மத்தியசங்கம் எழுதிய கடிதம் 

Ref: P/4-1/Examination                                                                                          Dated – 06.07.2020

To

The Secretary
Department of Posts
Dak Bhawan, New Delhi - 110001

Sub: - Rejection of OMR sheets by the machine in evaluation of Marks for 390 Candidates due to Error in OMR Sheet and Discrepancies in final key answer of IP Exam results and Declaration of Result after rectification.

Ref: -   Dte. letter F. No. A-34013/01/2020-DE of Govt. of India, Ministry of Communications Dated 24.06.2020.

Sir,

Apropos reference, it is dismayed to note the following discrepancies in the valuation of the IP examination and the results declared thereon.

1.        While declaring the results, a clear injustice had been caused to 390 candidates whose exam papers have been rejected and not taken for the valuation of marks due to error in OMR sheets of the candidates by the machine. The fault in the machine cannot be a ruse to deny the fair chances of the officials and in such a case, a remedial and redressal mechanism should have been made to consider the plight of those candidates. Simply declaring non consideration of them due to machine fault is against to the principle of natural law. Remedy should have been made first before implementing the results.

2.        Out of the 390 candidates, 36 candidates belong to Tamilnadu Circle. Some of them are intimated that due to self-valuation of their marks with reference to the answer keys scoring better marks than to the candidates declared qualified. It is learnt that four officials have already represented on this score from the Tamilnadu circle.

3.        As alleged, no evaluation of marks by the machine due to error in OMR sheets is incorrect. For assessing the actual marks, manual valuation of the marks in re3spect of affected  candidates including all 390 candidates listed in Annexure –V should be processed and announcement of results should be made accordingly in order to ensure protect the safeguard of the outstanding candidates. Till resolving such this, it is requested that action may be made to put on hold the results declared.

4.      Secondly there are discrepancies in uploading the final key answer. It has many discrepancies and those discrepancies have certainly altered in the final outcome of Result. Hence, unless this issue is clarified the result may also kindly be put on hold. Some of the discrepancies are given below.
All the 15 questions are one and the same in both A and D series. But, the final key   answer is different. This discrepancy certainly altered the final outcome of the Result.

5.      Further, in the Directorate letter u/r intimated that in paper I-twelve questions, Paper-II-eleven questions, Paper-III-four questions and in Paper-IV-nine questions have been ignored and full marks have been awarded to all the candidates. This procedure followed is against the established norm of Examinations in the Country. When a question is wrong, answer is wrong or any such discrepancies noticed in such cases, the marks will be awarded to such candidate, who has attempted to answer it. This method has been upheld by many High Courts in the Country. But, now Directorate deviated the established convention and awarded 72 marks to all the candidates. Thus, there is every possibility a person who would have not been successful might have successful, because of this erroneous method. This Decision may not withstand the scrutiny of the law of the land. Basically, 36 questions of 72 marks found to be ambiguous, have more than one answer etc., itself is not legally correct. Later ignoring those questions and awarding equal marks to one and all may be another issue seems to take away the legality of this result.

It is therefore requested to kindly look into this issue seriously and take necessary action and cause immediate solutions in this regard and declare the result after rectification.

With regards,

Yours sincerely,

(R. N. Parashar)
General Secretary