...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, July 27, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
                                                  முக்கிய செய்திகள் 
     BSNL 4G டெண்டர் கேன்சல்...Jio 5G டெக் தொழில் நுட்பத்தில் கூகிள் உடன் முதலீடு...
BSNL சந்தாதாரர்கள் எல்லோரும் 4G தொழில் நுட்பத்தை அடையாமல் 3G தொழில் நுட்பம் மட்டும் உபயோக படுத்த வைத்துவிட்டு.... அதே நேரம் Jio 5G தொழில் நுட்பம் நிறைவேற்ற வைத்தால்...கொஞ்ச நாளில் BSNL வாடிக்கையாளர் அனைவரும் Jio விற்கு மாறுவர். 
அப்புறம் வாடிக்கையாளர் இல்லாமல் BSNL நஷ்ட கணக்கு காட்டப்படும். பிறகென்ன... BSNL நிறுவனம் குறைந்த தொகைக்கு அம்பானிக்கு விற்கப்படும். அரசு நிறுவனம் தனியாருக்கு போகும். இந்தியா முழுதும் உள்ள BSNL டவர்கள் கருவிகள் கட்டிடம் என்று சகலமும் Jio வாக மாறும்.  
*   வங்கித் துறையில் இணைப்பை வலுக் கட்டாயமாக திணிக்கிறது மத்திய அரசு. ஆனால் பொது இன்சூரன்ஸ் துறையில் இணைப்பு வேண்டும் என்று தொழிற் சங்கங்கள் கோரிக்கை வைத்து, 3 அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை இணைப்பது என்றும் எடுத்த முடிவில் இருந்து மத்திய அரசு பின் வாங்குகிறது. ஏன் இந்த முரண்பாடு? ஒரு முரண்பாடும் அரசுக்கு இல்லை. இணைப்பானாலும், முறிப்பானாலும் அது தனியார்க்கு பயன்படுமா என்பதுதான் அரசின் கவலை.    
*          நாட்டு மக்களைப் காப்பாற்றிட, அரசமைப்புச்சட்டத்தின் தலைவர் என்ற முறையில், மத்திய மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பித்திட வேண்டும் என்று நாட்டின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு, மத்தியத் தொழிற்சங்கங்கள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தொமுச உட்பட பத்து தொழிற்சங்கங்கள் சார்பில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:    தொழிலாளர்நலச் சட்டங்களை, தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றும் விதத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்களை நிறுத்தி வைத்திட வேண்டும். தொழிலாளர்நலச் சட்டங்கள் அனைத்தையும் நான்கு தொழிலாளர் சட்டங்களாக மாற்றும் முயற்சியை நிறுத்தி வைத்திட வேண்டும். இவை தொடர்பாக இந்தியத் தொழிலாளர் மாநாட்டை உடனடியாகக் கூட்டி அதன்பின்னரே இவற்றின் மீது நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். சுகாதாரம், கல்வி  மற்றும் வேளாண்மையை விரிவாக்கும் விதத்தில் முதலீடு செய்யப்பட வேண்டும். இன்றியமையாப் பண்டங்கள் சட்டத்தைத் திருத்துவது உட்பட வேளாண்மை தொடர்பாகக்கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டங்கள் மூன்றையும் ரத்து செய்திட வேண்டும்.   
நன்றி .   தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை                  
   
                                                

0 comments:

Post a Comment