அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
நமது முன்னாள் மாநில செயலரும் முன்னாள் அகிலஇந்திய செயலருமான தோழர் J.ராமமூர்த்தி அவர்கள் தொழிற்சங்க வரலாறு குறித்த பதிவுகளை எழுதிவருகிறார்கள் .இளைய தோழர்கள் மற்றும் தோழியர்கள் அனைவரும் அவசியம் தெரிந்திருக்கவேண்டிய உண்மை வரலாறு .நமது கோட்ட சங்க உறுப்பினர்களும் இந்த உன்னத வரலாற்றை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு மீள் பதிவாக இங்கு பதிவிடுகிறோம் .
தொழிலாளி
வர்க்க இயக்கங்கள் துவங்குதலும் -
சிகாகோ
பேரெழுச்சியும் !
பகுதி - 1 ~~~~
1. வர்க்கப்
பிரிவினை
உழைக்கும்
தொழிலாளர்களுக்கு எதிரான அடக்கு முறைகளும் கொடுமைகளும், அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதும் தொடரும்போது
தன்னெழுச்சியாக
தனிமனித
எதிர்ப்புகளும், தொடர்ந்து குழுவாக எதிர்த்தலுமான
எதிர்ப்பு
நிலைகளும், பின்னாளில்
அந்தக் குழுக்களே தனித்தனியாகவோ, ஒன்று சேர்ந்தோ கூட்டு எதிர்ப்பு முயற்சிகளை பல வடிவங்களில் மேற்கொள்ளத்
துவங்கியதே அவை தொழிற்சங்க இயக்கமாக மாறக்காரணம்.
இவை
எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் தனிப்பட்ட முறையில் சொந்தமானதல்ல.
வர்க்கப்
போராட்டம்
என்றாலே
ஏதோவொரு அரசியல் கட்சிதான் அதற்கு சொந்தம் என பொய்யாக பிரச்சாரம்
செய்யப்படுகிறது. அது தவறு. இதனை உணர்ந்துதான் நாம் வர்க்கமாக ஒண்றிணைவோம்; அரசியல் தேவையில்லை என்கிறோம்.
அரசன்
- குடி மக்கள் ;
ஆண்டான்
அடிமை ;
பிரபுக்கள்
- கூலி ;
நிலச்சுவான்தார்-
விவசாயக் கூலித் தொழிலாளர் ;
தொழிற்சாலை
முதலாளி- தொழிலாளி;
இப்படியாக
முதலாளி வர்க்கத்தினர் ஒரு பகுதியாகவும் தொழிலாளர் வர்க்கத்தினர் ஒரு பகுதியாகவும் பிரியத் துவங்கினர்.
இதுவே
பின்னாளில் முதலாளி வர்க்கம் ; தொழிலாளி வர்க்கம் என வர்க்கப் பிரிவினையானது.
அதுவே
தொடர்ந்து வர்க்கப் போராட்டமாக உருவெடுக்கலாயிற்று.
இதில்
எந்த வகையான உழைப்பைச் செலுத்துபவர்களும் தொழிலாளி வர்க்கமாகவும், எந்தவிதமான முதலீட்டை செலுத்துபவர்களும், அவர்களுக்கான உயர்நிலை நிர்வாகிகளும்
முதலாளி
வர்க்கமாகவும் அடையாளப் படுத்தப் பட்டனர்.
இப்படியான
குழு நிலைப் போராட்டங்கள் அநேகமாக ஆண்டான்- அடிமை பிரிவினை தொடங்கிய காலத்திலேயே தொடங்கப்பட்டு விட்டன. ஆனால் அவையெல்லாம் வர்க்கப் போராட்டமாக அடையாளப் படுத்தப் படவில்லை_____(தொடரும் )
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்டசெயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment