அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம்
*கோவிட் காலத்தில் மத்திய அரசு துறைகளில் அமுல்படுத்தப்படும் ரோஸ்டர் முறைகளில் இருந்து மாற்று திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கலாம் என அஞ்சல் வாரியம் தனது 15.07.2020 தேதியிட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது
*RTP சேவைக்காலத்தை பணியில் சேர்ப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தகுதியுள்ள அனைவருக்கும் அமுல்படுத்திட நமது சம்மேளனம் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது
*நாடாளுமன்றம் மாநிலங்களவை உறுப்பினர் மான்புமிகு ராஜீவ் சந்திரசேகர் அவர்கள் நீலகிரி குன்னூர் தபால்காரராக பணியாற்றி ஓய்வு பெற்ற திரு D. சிவன்(GDS).அவர்களின் சிறப்பான அஞ்சல் சேவையை பாராட்டி நன்றி தெரிவித்து ஒரு லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கியுள்ளார் எத்தனை துறைகள் இருந்தாலும் மக்களோடு இணைந்து அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக தபால்காரர்கள் திகழ்கின்றார்கள் என புகழாரம் சூட்டியுள்ளார்
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment