...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, July 14, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
                                           மாநிலச்சங்க செய்திகள் 
*RTP  குறித்த வழக்கு நமது மத்திய சங்கத்தால் Principle CAT New delhi  யில் தொடரப்பட்டு அது தொடர்ந்து வருவது உங்களுக்குத் தெரியும். எனவே வழக்கு ஏற்கனவே Principle CAT New Delhi ல் நிலுவையில் உள்ள சூழலில் புதியதாக ஒரு வழக்கு சென்னை CAT ல்  தொடர  அவசியம் இருக்காது. மேலும் புதிய வழக்கு  கால தாமதத்தை அதிகரிக்கச் செய்யும் .இதுகுறித்து நமது வழக்கறிஞரை கலந்தாலோசித்தோம்   அவரும் சற்று பொறுமை காக்கும்படி அறிவுறுத்தி உள்ளார்.  Principle CAT New Delhi ல் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதில் குறிப்பிடத்தகுந்த அளவு முன்னேற்றம் அடுத்த hearing ல் வரவில்லை என்றால் நாம் மேற்கொண்டு புதியதாக ஒரு வழக்கினை சென்னை CAT ல் தொடரலாம். மேலும் நேரடியாக உயர்நீதிமன்றத்திற்கு செல்வதற்கும் இதில் வாய்ப்பு இல்லை நமது தலைவர் தோழர் KVS அவர்கள் பொதுச்செயலாளராக இருந்த போதுதான் டெல்லி  Principal CAT ல்  இந்த வழக்கானது தொடுக்கப்பட்டது என்பதை யாரும் மறக்க முடியாது மறுக்க முடியாது. மேலும் நம்முடைய NFPE சங்கம்  மட்டுமே தபால்காரர் களுக்கான உயர் ஊதியத்திற்காக வழக்கினை தொடர்ந்து நடத்தி இறுதியில் வெற்றி பெற்று அனைத்து தோழர்களும்  லட்சக்கணக்கில் நிலுவைத்தொகை வாங்குவதற்கு காரணகர்த்தாவாக செயலாற்றி உள்ளது. அதே போன்று RTP  வழக்கிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது .ஆகவே அனைவரும் இந்தத் தருணத்தில் சற்று அமைதி காக்க வேண்டும் .மேலும் மாநில சங்கம் கூடிய விரைவில் அதனுடைய முடிவினை இது சம்பந்தமாக மூத்த வழக்கறிஞர்களை கலந்து ஆலோசித்து பின்னர் வெளியிடும். எனவே மீண்டும் அமைதி காக்க வேண்டுகிறேன்.
*இன்று 7/7/20  DPS CCR அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம் covid-19 சம்பந்தமாக பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் துரித நடவடிக்கையில்  கொடுக்க உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தபால்காரர் தோழர்கள் வேலை முடிந்தால் வீட்டுக்கு சென்றுவிடலாம் யாரும் கூட்டம் சேர வேண்டாம் சென்னை மண்டலத்தில் மட்டும் 5 தோழர்கள் இறந்தது பற்றி வருத்தம் தெரிவித்தார் எனவே அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்  என்றும் பாதுகாப்பின் அவசியத்தை பற்றியும் சொன்னார் ஏதாவது பிரச்சனை இருந்தால் என்னிடத்தில் தெரியப்படுத்துங்கள் உடனடி நடவடிக்கை எடுக்கிறேன் என்று  உறுதி அளித்தார் DPS CCR அவர்களுக்கு மாநில சங்கத்தின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி.தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T .புஷ்பாகரன் கோட்டசெயலர்கள் நெல்லை  

0 comments:

Post a Comment