...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, August 6, 2019

   அன்பார்ந்த தோழர்களே ! 
               சென்னையில் அஞ்சல் நான்கு சங்கம் சார்பாக  நாளை 07.08.2019 அன்று CPMG அலுவலகம் முன்பு தர்ணா      
                  தபால்காரர் /MTS காலிப்பணியிடங்களை நிரப்பிடவேண்டும் சீருடை அலவன்ஸ் ரூபாய் 10000 ஆக உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் தர்ணா போராட்டம் வெல்லட்டும் .நமது கோட்டத்தின் சார்பாக தோழர் SK .ஜேக்கப் ராஜ் SK .பாட்சா மற்றும் T .புஷ்பாகரன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
                                                  நன்றி !நன்றி ! நன்றி !
 ஞாயிற்றுக்கிழமை பணிசெய்ய அழைக்கும் நிர்வாக உத்தரவிற்கு எதிராக நாம் நடத்தும் .போராட்டத்திற்கு ஆதரவாகவும்  நமது வேண்டுகோளினை ஏற்றும் மாநிலங்களவை உறுப்பினர் திருமதி விஜிலா சத்தியானந்த் அவர்கள் நமது CPMG மற்றும் நமது SSP அவர்களிடம் நேற்று காலை புதுடெல்லியில் இருந்து தொலைபேசியில் பேசினார்கள் அவர்களிடம் நமது SSP அவர்கள் பெண் ஊழியர்களை இனிமேல் கட்டாயப்படுத்தி ஞாயிறு பணிக்கு அழைக்கமாட்டோம் என உறுதியளித்துள்ளார் .மேலும் இதுகுறித்த முழுவிவரங்களை நமது MP அவர்கள் 08.08.2019 அன்று நெல்லை வந்தவுடன் நேரில் சந்தித்த பின் தெரிவிக்கிறோம் .நமது கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் செயல்படுத்தும் நமது அன்பிற்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திருமதி விஜிலா சத்தியானந்த் அவர்களுக்கு கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் 
                                        பாளை சட்ட மன்ற உறுப்பினருடன் சந்திப்பு 
 நமது கோரிக்கைகளுக்கு ஆதரவு வேண்டி மக்கள் பிரதிநிதிகளை நாம் சந்தித்துவருகிறோம் .அதன் ஒருபகுதியாக நேற்று நமது பாளை சட்டமன்ற உறுப்பினர் திரு .TPM .மைதீன் கான் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது .நேற்றைய சந்திப்பில் தோழர்கள் ஜேக்கப் ராஜ் வண்ணமுத்து மற்றும் SK .பாட்சா ஆகியோர் கலந்துகொண்டனர் .
                                           PLESAE இதை நம்புங்கள் 
1.01.08.2019 அன்று நமது ஆர்பாட்டத்தில் சுமார் 60 பேர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக நிர்வாக தரப்பு அறிக்கை அளித்துள்ளது 
                    நன்றி .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment