அன்பார்ந்த தோழர்கள் !தோழியர்களே !
நன்றி !நன்றி !நன்றி !
ஞாயிறு பணிசெய்ய உத்தரவிட்ட நெல்லை கோட்டநிர்வாகத்தின் தன்னிச்சையான போக்கை கண்டித்து பாளை தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த உங்கள் அனைவருக்கும் நெல்லை NFPE சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
ஆதரவு கரம் நீட்டிய அனைத்து தொழிற்சங்க அமைப்புகளுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
ஆர்ப்பாட்ட முடிவில் எடுக்கப்பட்ட முடிவுகளை உறுதியாக நின்று அமுல்படுத்துவோம் .அதன்படி இந்தவாரம் பணிக்கு வரச்சொல்லி பாளையம்கோட்டை போஸ்ட்மாஸ்டர் உத்தரவிட்டால் தங்களது இயலாமையை/உண்மை நிலைமையை /குடும்பசூழ்நிலையை எழுத்துப்பூர்வமாக ஒவ்வொரு தோழர் /தோழியர்களும் கொடுத்திடவேண்டும் .(அதன் மாதிரி படிவம் தனியே கொடுக்கப்பட்டுள்ளது ) அதனையும் மீறி எந்த ஊழியர்களையாவது கட்டாயப்படுத்தினால் சனிக்கிழமை மாலை நமது முக்கிய நிர்வாகிகள் கூடி அடுத்தகட்ட முடிவுகளை அறிவிப்பார்கள் .
நமது தோழர்கள் /தோழியர்களின் உணர்வினை இனியாவது புரிந்துகொண்டு கோட்ட நிர்வாகம் நல்லதொரு முடிவினையெடுத்திட கேட்டுக்கொள்கிறோம் .
அடுத்தகட்டமாக சட்டப்போராட்டங்களிலும் முடியாவிட்டால் வேலைநிறுத்தம் என்ற முடிவிற்கு செல்லவேண்டும் என நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்த பட்டதையும் கோட்ட சங்கம் மேல்மட்ட நமது தலைவர்களிடம் கலந்துபேசி முடிவெடுப்போம் என்பதனையும் தெரிவித்துக்கொக்கிறோம் .
நேற்றைய ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றிபெற களப்பணியாற்றிய அஞ்சல்மூன்று /அஞ்சல் நான்கு /மற்றும் GDS நிர்வாகிகளுக்கும் குறிப்பாக NFPE மகிளா கமிட்டி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை செலுத்துகிறோம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment