...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, August 19, 2019

அன்பார்ந்த தோழர்களே !
                                               நேற்றைய நிகழ்வுகள் 
18.08.2019 ஞாயிறு காலை இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் (BEFI) திருநெல்வேலி மாவட்ட 5 வது மாநாடு மற்றும் 12 வது மாநில மாநாடு வரவேற்பு குழு கூட்டம் நெல்லைமூட்டா  அலுவலகத்தில் நடைபெற்றது .நெல்லையில் அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றினைக்கும் விதமாக நடந்த நிகழ்வில் NELLAI NFPE சார்பாக கலந்துகொண்டு நமது பங்களிப்பை செலுத்தினோம் .வந்திருந்த அனைத்து சங்கத்தினரும் நமது போராட்டத்தின்இன்றைய நிலை குறித்து கேட்டறிந்தனர் .
 நேற்று இரவு மருதகுளத்தில் நடைபெற்ற மின்னொளி கபடி போட்டியில் தொழிற்சங்க செயலர் என்ற அந்தஸ்தோடு ஒரு போட்டியை துவக்கி வைக்கும் வாய்ப்பு கிடைத்தது .NELLAI NFPE புகழ் எல்லா அரங்கிலும் நிலைநிறுத்த படுவது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் .
                                       நாளைய நிகழ்வுகள் 
20.08.2019 அன்று காலை 10 மணிக்கு நமது SSP அவர்களுடனான மாதாந்திர பேட்டி நடைபெறுகிறது .ஏற்கனவே நாம் மாதாந்திர பேட்டியில் விவாதிக்கவேண்டிய பிரச்சினைகளை அனுப்பியுள்ளோம் .அதன் விவரங்கள் நாளை பிரசுரிக்கப்படும் .
                                           ஆர்ப்பாட்டம் 
  20.08.2019 செவ்வாய் மாலை 6 மணிக்கு SSP அலுவலகம் முன்பு GDS ஊழியர்களை இலக்கு எனும் பெயரில் உபகோட்ட அதிகாரிகளால் துன்புறுத்தப்படும் கொடுமையை எதிர்த்து GDS ஊழியர்களின் சங்கங்களின் சார்பாக நடைபெறும் ஆர்பாட்டத்தில் பங்கேற்பு .
                     அனைத்து இயக்கங்களையும் வென்றெடுக்க அணிதிரள்வோம் .
 போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கொட்ட செயலர் நெல்லை 



0 comments:

Post a Comment