...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, August 17, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
மீண்டும் ஒரு வெற்றி --ஜூன் மாதம் பணிஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு INCREMENT வழங்கிடவேண்டும் என தோழர் ஐயம்பெருமாள் வழக்கில் உச்சநீதிமன்றம் அரசு தாக்கல் செய்த SLP மனுவை தள்ளுபடி செய்து உன்னத தீர்ப்பை வழங்கியுள்ளது 
வழக்கம் போல் வழக்கு தொடுத்தவர்களுக்கு மட்டுமே இந்த தீர்ப்பு பொருந்தும் என அரசு அறிவிக்கப்போகிறதா அல்லது ஒரு மாதிரி அரசாக (MODEL EMPLOYER)  இருந்து ஜூன் மாதம் ஓய்வுபெற்ற அனைவருக்கும் ஒரு INCREMENT வழங்கி ஓய்வூதியத்தை மறுநிர்ணயம் செய்ய DOPT முடிவெடுக்க ஆணை பிறப்பிக்கப்போகிறதா ? 
 MACP வழக்குகளில் கூட DEFENSE ஊழியர்களுக்கு பொருந்தும் தீர்ப்பை சிவில்  ஊழியர்களுக்கு அமுல்படுத்திட தயங்கும் அரசு -இந்த வழக்கில் என்ன சொல்லப்போகிறது ---பொறுத்திருந்து பார்ப்போம் ..
                            பாளையம்கோட்டை தலைமை அஞ்சலக ஊழியர்களின் கவனத்திற்கு ஞாயிறு பணிசெய்ய யாரையும் கட்டாயப்படுத்தமாட்டோம் -இதுவரை யாரையும் கட்டாயப்படுத்தவுமில்லை என்றும் ARRANGEMENT செய்வது பாளையம்கோட்டை போஸ்ட்மாஸ்டர் தான் என்று நிர்வாகம் எழுத்துப்பூர்வமாகவும் -கேட்கின்ற மேல்மட்ட அதிகாரிகளிடமும் சொல்லிவருகிறது .ஆகவே யாரையும் கட்டாயப்படுத்தமாட்டோம் என்கின்ற நிர்வாகத்தின் நிலையினை ஊழியர்கள் உணர்ந்து கொண்டு தொடர்ந்து நமது கோட்ட சங்க செயல்பாட்டிற்கு உங்கள் ஆதரவை நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் 
                                                   இறுதி வெற்றி நமதே !
                தோழமை வாழ்த்துக்களுடன் 
                                    SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment