...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, August 22, 2019

அன்பார்ந்த தோழர்களே ! 
 RPLI  PROPOSAL  புது பாரம் (படிவம் ) நமக்கு மேலும் ஒரு பாரம் 
               RPLI பிடிப்பதற்கு புது படிவம் மற்றும் புதிய முறை மாற்றப்பட்டுள்ளது .அதன்படி CONFIDENTIAL REPORT இனிமேல் உபகோட்ட அதிகாரிகள் எழுதவேண்டியதில்லை என்றும் சம்பந்தப்பட்ட ஏஜென்ட் /GDS அதை நிரப்பி நேரிடையாகவே சம்பந்தப்பட்ட தலைமை அஞ்சலக CPC க்கு அனுப்பிவிடலாம் .
இதுவரை மருத்துவ அறிக்கை உபகோட்ட அதிகாரிகள் மூலம் அனுப்பப்பட்டது .இனிமேல் சம்பந்தப்பட்ட ஏஜென்ட் /GDS  கள் தான் இந்த பணிகளையும் முடித்து அனுப்பவேண்டும் .இதற்காக புதிய PROPOSAL FORM வினியோகிக்கப்படும் .ஆகவே இனி மேளா நடக்கிற நாட்களில் அவசரஅவசரமாக ரசீதை போட்டு ASP களுக்கு அனுப்பினால் போதும் என்றில்லாமல் அனைத்து வேலைகளையும் ஏஜென்ட் /GDS தான் மேற்கொள்ளவேண்டும் .ஏற்கனவே உபகோட்டங்களுக்கு அனுப்புவதால் தான் PROPOSAL  CPC க்கு வர தாமதம் ஆகிறது என்பதனை   கருத்தில் கொண்டுதான் இந்த புதிய முறை அமுல்படுத்தப்பட்டுள்ளதாம் .ஆனால் இந்த கடினமான கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு நிர்வாகம எதிர்பார்பதைபோல் RPLI பாலிசிகளை GDS ஊழியர்களால் பிடித்து தரமுடியுமா என்பதே முக்கிய கேள்வியாகும் .பாவம் GDS தோழர்கள் இனி அவர்கள் பாலிசி பிடிக்கும் வேலையை காட்டிலும் மருத்துவரிடம் சென்று கையெழுத்து வாங்கவும் காத்துக்கிடக்க வேண்டிய நிலை ஏற்படும் .
ஏற்கனவே PLI க்கும் IP /ASP களுக்கும் சம்பந்தமில்லை என்ற நிலையில் இன்று RPLI யும் IP /ASP கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறது .போகிறபோக்கை பார்த்தால் PLI தனி வாரியம் தனியாக அஞ்சல் துறையை விட்டு மெல்லமெல்ல விலகி செல்கிறதா -விலக சொல்கிறதா ? 
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


0 comments:

Post a Comment