...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, August 27, 2019

                                                     முக்கிய செய்திகள் 
 B.sc /Msc (Agri ) பட்ட படிப்புகள் தொழிற்சார் படிப்புகளாக அறிவிக்கப்பட்ட நிலையில் இனி     B.sc /Msc (Agri ) பட்டதாரிகளும் PLI EXTENDED CLIENT  என்கின்ற வரையறைக்குள் வருகிறார்கள் .அவர்களும் நமது PLI பாலிசிக்கு தகுதியாகிறார்க்ள என PLI இயக்குனரகம் 05.08.2019 அன்று விளக்க உத்தரவை பிறப்பித்துள்ளது .

           GDS இடமாறுதல் வழக்கில் நீதிமன்றம் கண்டனம்.
      GDS இடமாறுதல் குறித்த வழக்கில் நேற்று வழங்கிய     தீர்ப்பில்  
    நீதிபதி தனது கருத்தாக, GDS ஊழியர்களுக்கு பணியிட மாறுதல் பெற விதிகள் இருந்தும், இலாகா வேண்டுமென்றே பணி இடமாறுதல் விண்ணப்பங்களை  பரிசீலிக்காமல் இருந்துள்ளது என்றும், அவ்வாறு பரிசீலிக்காமல் இருந்ததற்கான முறையான காரணம் ஏதும் இலாகா  தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் மத்திய அமைச்சரகமே 15.04.2019 அன்று, 04.01.2019 அன்று அல்லது அதற்கு முன்பாக பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, பணியிட மாறுதல் வழங்க எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பணியிடமாற்றம் வழங்காமல், அனைத்து பணியிடங்களுக்கும் புதிய நபர்களை பணியில் சேர்க்க, தமிழ் மாநில அஞ்சல் துறை நிர்வாகம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டது, தன்னிச்சையாக செய்த அதிகார துஷ்பிரயோகம் என நீதிபதி தெரிவித்துள்ளார். பணியிட மாற்றம் கேட்டவர்களுக்கு கொடுக்காமல் அந்த இடங்களில் புதியவர்களை பணிக்குச் சேர்த்தால், பணியிடமாற்றம் விண்ணப்பித்த ஊழியர்களுக்கு அது பேரிடியாக அமையும் என்றும், பணியிட மாற்றங்களுக்கு ஏற்படும் அனைத்து செலவுகளையும் ஊழியர்களே ஏற்கும் நிலையிலும், 150க்கும் மேற்பட்டவர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்படாமல் உள்ளது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்
இறுதியாக தனது தீர்ப்பாக, 04.01.2019 அன்று அல்லது அதற்கு முன்பாக பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ள காலியிடங்களில், நீதிமன்றத்தின் ஆணையின்றி, புதிய நபர்களை பணியில் சேர்க்க கூடாது என்று ஆணையிட்டுள்ளார். அதோடு 28.10.2019 அன்று நீதிமன்றத்தில் இலாகா 04.01.2019 க்கு முன்னர் எத்தனை பணியிடமாற்றம் விண்ணப்பங்கள் வந்துள்ளன, ஏன் இது நாள் வரைக்கும் பரிசீலிக்க படாமல் வைக்கப்பட்டன என விளக்கத்தை சமர்பிக்குமாறு ஆணையிட்டுள்ளது.
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment