...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, October 29, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !வணக்கம் .

 LSG பதவி உயர்வின் அடுத்தகட்டமாக நமது மண்டல அலுவலகத்தில் இருந்து கோட்ட ஒதுக்கீடும் வந்துவிட்டது .நமது கோட்டத்தில்  8 VACANCY இருந்தாலும்  7 தோழர்களுக்கு நமது கோட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது .ஒருவர் மதுரை கோட்டத்தில் இருந்து RE -ALLOTMENT யில் வருகிறார் .இதில் எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள் ?எத்தனை பேர் பதவி உயர்வை மறுப்பார்கள் என்பதை பொறுத்துதான்  பிற கோட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் நமது கோட்டத்திற்கு கொண்டுவரமுடியும் .எப்படியோ 67 பேர் பதவி உயர்வை பெற்றலும் வெறும் 7 தோழர்களுக்கு மட்டுமே நமது கோட்டம் கிடைத்திருப்பது ஒரு துரதிஷ்டமே ! பதவி உயர்வை மறுக்காதீர்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லுகின்ற அளவில் யாரும் இல்லை .MACP யா ?LSG யா ? இல்லை எதுவும் வேண்டாம் உள்ளூர் போதும் என்கின்ற ஒரு நெருக்கடி இன்று நமது கோட்டத்தில் சுமார் 60 தோழர்கள் சந்திக்கின்றார்கள் ..இன்று 12 மணிக்கு நமது கோட்ட அதிகாரியுடனான மாதாந்திர பேட்டி நடைபெறுகிறது .அதற்குள் DECLINE செய்பவர்கள் யார்?யார் ?பதவியுயர்வை ஏற்றுக்கொள்பவர்கள்  யார்?யார் ? என்கின்ற விவரத்தை தோழர்கள் தெரிவிக்கவேண்டுகிறோம் .கோட்ட REALLOTMENT மற்றும் DECLINE செய்வதற்கான படிவங்கள் இத்துடன் அனுப்பப்பட்டுள்ளது .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Thursday, October 28, 2021

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 

LSG பதவி உயர்வில் மேற்கு மண்டலத்திற்கு ஒதுக்கப்பட்ட ஊழியர்களுக்கு நமது மாநில /மண்டல செயலர்களின் அறிவுறுத்தலின் படி நமது CPMG அவர்களுக்கு தென்மண்டலத்திற்கு மறு ஒதுக்கீடு செய்ய விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .இந்த நிலையில் யாரும் DECLINE செய்யவேண்டாம் எனவும் கீழ்கண்ட மாதிரி கடிதத்தை உடனே அனுப்பிவிட்டு அதன் நகலை கோட்ட சங்கத்திற்கு அனுப்பிவைக்கவும் கேட்டுக்கொள்கிறோம் .

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Wednesday, October 27, 2021

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 

                                    IPPB  க்கு ஏன் இந்த அகோர பசி ?

கடந்த 01.09.2018 முதல் மிக விமர்சையாக தொடக்க விழா காணப்பட்ட IPPB இன்று மாபெரும்நட்டத்தில் இயங்குவது என்பது நம்மை அதிர்ச்சியடையவைத்திருக்கிறது .ஆனால் வழக்கம் போல் நிர்வாகம் எதுவும் நடக்காததை போல் மீண்டும் மீண்டும் ஒவ்வொரு லாகின் தினத்தன்று IPPB TEAM உங்களுக்கு உதவும் என அவர்களை PROMOTE பண்ணுவதிலே குறியாக இருக்கிறது .

வரவு சுண்டைக்காய் அளவு --செலவு பூசணிக்காய் அளவாம் ?

உதாரணமாக கடந்த ஆண்டு IPPB ஆடிட் அறிக்கையில் வரவுக்கும் -செலவுக்கும் உள்ள இடைவெளி என்பது மிகவும் அதிகரித்துக்கொண்டு போயிருக்கின்றது ..

31.03.2020தேதிப்படி வரவு 54கோடி செலவு 388கோடி .2019யில் வரவு 48கோடி செலவு 213கோடி .கடந்த ஆண்டு வெறும் 6கோடி வருமான உயர்வுக்கு அரசு செலவழித்ததோ 175 கோடி ..சராசரி 80சதம் செலவி(வீ )னங்கள் அதிகரித்துள்ளது .

இதை சரிகட்டப்போவது நமது தலையில் தான் விழப்போகிறது ...ஆனாலும் ஒவ்வொருநாளும் IPPB குறித்து நமது அதிகாரிகள் காட்டுகிற ஆர்வம் இன்னும் எத்தனை கோடி  நட்டத்தில் நம்மை அழைத்து செல்ல போகிறதோ ?    நன்றி .(தகவல் தலைவர் KVS அவர்களின் அன்புடன் KVS YOU TUBE பதிவில் இருந்து )

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Monday, October 25, 2021

                                                           NFPE ---P 4

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் --தபால்காரர் மற்றும் MTS

திருநெல்வேலி கோட்டம் --627002

                                    39-வது கோட்ட மாநாடு அறிவிப்பு 

நமது அஞ்சல் நான்கின் 39-வது கோட்ட மாநாடு வருகிற 05.12 .2021  ஞாயிறு அன்று பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் கோட்ட தலைவர் தோழர் A .சீனிவாச சொக்கலிங்கம்  அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெறுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் ..

*மாநாட்டு நன்கொடையாக நமது உறுப்பினர்களிடம் ரூபாய் 500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது .

*விரிவான அழைப்பிதழ் விரைவில் அனுப்பப்படும் .

                                                   அகில   இந்திய மாநாடு --உடுப்பி 

நமது அகில இந்திய சங்கத்தின் 28 வது மாநாடு வருகிற டிசம்பர் 12 மற்றும் 13ஆகிய தேதிகளில் கர்நாடகா மாநிலம் உடுப்பி நகரில் நடைபெறுகிறது .மாநாட்டில் சார்பாளர்கள் மட்டுமே கலந்துகொள்ளவேண்டும் என நமது அகிலஇந்திய பொதுச்செயலர் அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று நமது கோட்டத்தில் நான்கு சார்பாளர்கள் மட்டும் கலந்துகொள்ளமுடியும் .மாநாட்டில்  சார்பாளர்களாக கலந்துகொள்ள விரும்பும் தோழர்கள் இன்றே தங்கள் விருப்பத்தினை தெரிவிக்கவும் ..

நன்றி .தோழமையுடன் T.புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு 

Saturday, October 23, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                       வாழ்த்துகிறோம் ! வாழ்த்தி வழியனுப்பிக்கிறோம் !

நாளை 24.10.2021 அன்று நடைபெறும் எழுத்தர் தேர்வில் பங்கேற்கின்ற அனைத்து தபால்காரர்கள் /MTS மற்றும் GDS சொந்தங்களுக்கு   தாங்கள் அனைவரும் இந்த தேர்வில் வெற்றிபெற NELLAI --NFPE வாழ்த்துகிறது . .தொலைதூரங்களில் இருந்து மதுரைக்கு செல்லும் ஊழியர்களுக்காக தனியாக ஒரு இனோவா கார் ஒழுங்குசெய்யப்பட்டுள்து .காலை சரியாக 5.15 முதல் 5.30 குள் புறப்பட வசதியாக பெயர் கொடுத்த அனைவரும் பாளை புதிய பேருந்து நிலையம் (பெருமாள்புரம் )BIG BAZAR முன்பாக வந்திட கேட்டுக்கொள்கிறோம் ..இதன் ஒருங்கிணைப்பாளராக தோழர் R.ஹரிஹர சுதன் GDS கோவிலுத்து BO அவர்கள் செயல்படுவார்கள் .(84898-23578)  மேலும் தொடர்பிற்கு SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை அவர்களை தொடர்புகொள்ளவும் .நண்பர் உதயகுமார் காரிலும் இரண்டு (1+1]  இருக்கைகள் இருக்கிறது .

தேர்வு மையத்திற்கு செல்ல  Thirumangalam to Dindigul route    Achampathu ku செல்லும் வழியில் 4 way யில் இருந்து கீழே இறங்க வேண்டும்   Theni நோக்கி திரும்ப வேண்டும் .சிறிது தூரத்தில் college வந்து விடும்  ...

.             Wishing success to all candidates 

நன்றி.தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

       

       




Thursday, October 21, 2021

 விரக்தியின் உச்ச கட்டத்தில் போசு அணியினர் -----

சமிபத்தில் தொழிற்சங்கங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து நமது அஞ்சல் மூன்று தமிழ்மாநில சங்கம் பெற்றுக்கொடுத்த தடை உத்தரவினை குறித்து தமிழக போசு அணியினரின் புலம்பலை பார்த்திருப்பீர்கள் .ஏற்கனவே அஞ்சல் மூன்றின் மாநில சங்கத்திடம் அந்த பொறுப்புகளை கொடுத்துள்ளதால் தாங்கள் அதில் தலையிடவில்லை என தற்பெருமை பேசிவருவ்து அவர்களின் இயலாமையையை மட்டுமல்ல விரக்கதியையும் வெளிப்படுத்தியுள்ளது .

*23 மாநில சங்கங்கள் இருக்கும் பொழுது ஏன் மத்திய சங்கம் தமிழ் மாநிலத்தை கேட்டுக்கொண்டது ? 

*போசு அணியின் மாநில சங்கங்களிடம் அந்த பொறுப்பை ஏன் கொடுக்கவில்லை ?

தமிழகத்திடம் அந்த பொறுப்பை கொடுத்தினால் தான் அன்று நமது சம்மேளன மாபொதுச்செயலரால் வாரணாசியில் படகு சவாரி ஆனந்தமாக செல்ல முடிந்தது .நாடுமுழுவதிலும் ஆர்ப்பாட்டம் நடந்திடும் போது எங்காவது ஒரு இடத்தில் பொதுச்செயலர் போராட்டத்தில் கலந்துகொண்டிருக்க வேண்டாமா ?

2018மே GDS    ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்ததின் போது சின்ன ஆதரவை கூட வெளிப்படுத்தாமல் சிம்லா LTC  பயணத்தில் இருந்தவர் தான் பொதுச்செயலர்?

பிறகு இவராவது போராடவாவது ? இனிமேல் 1984 வேலைநிறுத்தம் குறித்து தம்பட்டம் அடிக்கும் முன் 2018 GDS  16   நாட்கள் குறித்து ஒரு நிமிடமாவது யோசித்துவிட்டு பேசவும் .

நெஞ்சில் உரமும் இன்றி  நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடிகிளியே...இவர்கள் வாய்ச் சொல்லில் வீரரடி.......

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 








 

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் .

நேற்று நமது நெல்லை அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு கோட்ட சங்கத்தின் கூட்டுபொதுக்குழு மிகச்சிறப்பாக நடைபெற்றது .மழை மிரட்டலுக்கும் பொருட்படுத்தாமல் சுமார் 50 தோழர்களுக்கு மேல் பங்கேற்றது மிக்க மகிழ்ச்சி நன்றி .கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் 

1.அஞ்சல் மூன்றின் முன்னாள் மாநிலசெயலர் அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு அவர்க்ளின் 6வது ஆண்டு நினைவஞ்சலி கடைபிடிக்கப்பட்டது .

2.நெல்லை அஞ்சல் நான்கின் 39 வது மாநாடு வருகிற டிசம்பர் 5ம் தேதி ஞாயிறன்று பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் வைத்துநடத்துவது என்று அறிவிக்கப்படுகிறது .(முன்னதாக டிசம்பர் 12 என முடிவெடுத்தநிலையில் அஞ்சல் நான்கின் அகில இந்திய மாநாடு டிசம்பர் 12 மற்றும் 13 ம் தேதிகளில் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் நடைபெறுவதால் நமது மாநாடு 05.12.2021 க்கு மாற்றப்பட்டுள்ளது .மாநாட்டிற்கு நன்கொடையாக நமது அஞ்சல் நான்கு உறுப்பினர்களிடம் ரூபாய் 500 மட்டும் நன்கொடையாக பெறுவது என்று தீர்மானிக்கப்பட்டது .

3.தபால்காரர்களுக்கு combined duty உத்தரவை அமுல்படுத்தாத வண்ணம் GDS  கிடைக்காத பட்சத்தில் OUT SIDER களை தடையின்றி அனுமதித்திட கோட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவது 

4.GDS OFICIATING பார்க்கின்ற விஷயத்தில் மனிதாபிமான அடிப்படையில் நடந்துகொள்ளாமல் GDS ஊழியர்களை மிக கடுமையையாக நடத்தும் திருநெல்வேலி உபகோட்ட அதிகாரியின் அத்துமீறல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது .மேலும் இதுகுறித்து வருகிற மாதாந்திர பேட்டியில் பேசிடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது .( ஆகவே உபகோட்டம் தாண்டி OFFICIATING பார்க்க கூடாது ,கணக்குகளை பிடித்துக்கொடுத்தால் தான் CONFORMATION போடுவேன் என மிரட்டும் போக்குகள் குறித்து மேலும் விவரங்களை தோழர்கள் உடனே கோட்ட சங்கத்திற்கு அனுப்பவும் )

5.நமது கோட்டத்திற்கு புதிதாக வந்த தோழர்களை பொதுக்குழுவில் அறிமுகப்படுத்தி அவர்களை பாராட்டி புகழாரம் சூட்டப்பது .அதன்படி தோழர் உதயகுமார் ,தோழர் மாரிமுத்து தோழர் ராமகிருஷ்ணன் தோழர் மகாராஜன் தோழர் மந்திரம் மற்றும் தோழர் மணிகண்டன் ஆகிய தோழர்களுக்கு இந்தபொதுக்குழுவில் வரவேற்புக்கொடுக்கப்பட்டது .

நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 

SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, October 20, 2021

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !   வணக்கம் .

இன்று 20.10.2021 புதன் மாலை 6    மணிக்கு   பாளை தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும் அஞ்சல் நான்கு -  அஞ்சல்  மூன்று கூட்டு பொதுக்குழுவில் தாங்கள் அனைவரும் கலந்துகொள்ளும்படி அன்போடு அழைக்கிறோம் ..

கூட்டு தலைமை --தோழர்கள் T .அழகுமுத்து கோட்டத்தலைவர் அஞ்சல் மூன்று A .சீனிவாசசொக்கலிங்கம் கோட்ட தலைவர் அஞ்சல் நான்கு

பொருள் --1.நமது முன்னாள் மாநிலசெயலர் அண்ணன் பாலு அவர்களின்                                 6வது நினைவஞ்சலி

                            2.அஞ்சல் நான்கின் நெல்லை கோட்ட மாநாடு நடத்துவது                                                         சம்பந்தமாக

                                3.மீண்டும் தலைதூக்கும் தபால்காரர்களுக்கு COMBINED                                                         DUTYபிரச்சினை 

                 அனைவரும் வருக !தங்கள் ஆலோசனைகளை தருக 

                            தோழமை வாழ்த்துக்களுடன் 

                SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

முக்கிய அறிவிப்பு --வருகிற 24.10.2021ஞாயிறு அன்று மதுரை நாகமலை வெள்ளைசாமிநாடார் கல்லூரியில் வைத்து நடைபெறும் LGO    தேர்விற்கு செல்லும் ஊழியர்களுக்காக வேன் ஒழுங்கு செய்யமுடிவெடுக்கப்பட்டுள்ளது .வருகிறவர்கள் தங்கள் பெயர்களை கொடுத்தால் வேன் ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும் .21பேர்செல்லும் வேன் வாடகை ரூபாய் 8000 17பேர் செல்லும் வேன் ரூபாய் 7000.வருகிறவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் DIVIDE செய்து சிரமம் இல்லாமல் சென்றுவரலாம் .ஆகவே தேர்வுக்கு செல்லும் ஊழியர்கள் தங்கள் விருப்பங்களை எங்களுக்கு தெரிவிக்கவும் .தொடர்புக்கு 94421-23416

Saturday, October 16, 2021

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் மூன்றாம் பிரிவு ,தபால்காரர் மற்றும் MTS

நெல்லை கோட்டம் நெல்லை -627002

-----------------------------------------------------------------------------------------------------------------

அஞ்சல் மூன்றின் முன்னாள் மாநில செயலர் அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு  அவர்களின் 6வது ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நெல்லை கோட்ட அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு சங்கங்களின் கூட்டு பொதுக்குழு கூட்டம்

----------------------------------------------------------------------------------------------------------------------

நாள் --20.10.2021 புதன் நேரம் மாலை 6 மணி

இடம் --பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 

கூட்டு தலைமை --தோழர் T .அழகுமுத்து கோட்ட தலைவர் அஞ்சல் மூன்று

                                 ---தோழர் A.சீனிவாச சொக்கலிங்கம் கோட்ட தலைவர்                                                         அஞ்சல்  நான்கு

ஆய்படு பொருள் ----1.அண்ணன் பாலு அவர்களின் நினைவஞ்சலி 

                                        2.நெல்லை அஞ்சல் நான்கின் கோட்ட மாநாடு                                                             நடத்துவது  சம்பந்தமாக

                                      3.GDS  OFFICIATING சம்பந்தமாக வந்த சமீபத்திய                                                         உத்தரவும்   -அதை தொடர்ந்து எழுந்துள்ள COMBINED                                                         DUTY  பிரச்சினைகள் சம்பந்தமாக

                                    4.DAK மித்ரன் குறித்த தகவல்கள் --கருத்துக்கள்

                                    .5.நமது கோட்டத்திற்கு இடமாறுதலில் வந்துள்ள  புதிய                                                         இளைய   தோழர்கள் --அறிமுகம்                                                                                     அறிமுகப்படுத்துபவர்   தோழர் R .மகாராஜன் OA                                                         கோட்ட அலுவலகம்

                                    6.இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )

                                     மிக நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெறும் இந்த கூட்டு பொதுக்குழுவில் தோழர்கள் /தோழியர்கள் பங்கேற்று தங்களது குறைகள் விமர்சனங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கிடுமாறு அன்போடு அழைக்கிறோம் 

                                              தோழமை வாழ்த்துக்களுடன் 

SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று 

T.புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு 

Thursday, October 14, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

DAK MITRA (அஞ்சல் நண்பன் ) திட்ட முன்மொழிவை முளையிலே கிள்ளி எறிய வேண்டும் ..களையினை இப்போதே அகற்றாவிட்டால் பயிருக்கு ஆபத்து !

அஞ்சல் வாரியம் தனது 13.10.2021தேதியிட்ட கடிதத்தில் FRANCHISEE திட்டத்தை  மறுபரீசீலனை செய்திடவும் அதுகுறித்து அனைத்து மாநில CPMG களிடம் வருகிற 25.10.2021 குள் கருத்துக்களை கேட்டும் தாக்கீது அனுப்பியுள்ளது .

புதிய மொந்தையில் பழைய  கள் OLD WINE IN THENEW BOTTLE 

 என்ற பழமொழிக்கேற்ப ஏற்கனவே கிராமப்புற பஞ்சாயத்து தலைமையகங்களில் அஞ்சல் சேவையை விரிவாக்க கொண்டுவந்த PSSK திட்டமும் அஞ்சல் சேவை கிடைக்கப்பெறாத பகுதியில் FRANCHISEE மூல்ம் அஞ்சல் சேவைகளை செய்திட கொண்டுவரப்பட்ட திட்டமும் வந்த வேகத்திலே புறமுதுகிட்டு ஓடிய  கதை நமக்கு நினைவிருக்கும் .PSSKமற்றும் FRANCHISEE திட்டங்களிலாவது வெறும் STAMPS SALE  REGISTRATIONBOOINKG மட்டுமே இருந்தது .ஆனால் இன்று அனைத்து சேவைகளையும் தனியாருக்கு தாரை வார்க்க அஞ்சல் வாரியம்  புதிய ஒப்பனையோடு  இந்த பழைய  நீர்த்துப்போன  திட்டத்தை ஏலத்திற்கு கொண்டுவர அஞ்சல் வாரியம் முனைந்திருக்கிறது .தற்போதுள்ள  FRANCHISEE விட கூடுதலாக சேமிப்பு திட்டங்கள் இன்சூரன்ஸ் வசதிகள் பட்டுவாடா என அனைத்தையும் கார்ப்பரேட் முதல் கடைக்கோடி பெரும் முதலாளிகளுக்கு கொடுத்திட வரைவு திட்டத்தை வடிவமைத்துள்ளது நமது அஞ்சல் வாரியம் 

கார்ப்பரேட் நிறுவனங்களை பொறுத்தவரை ஏற்கனவே நம்மோடு போட்டியில் இருக்கும் DHL மற்றும் BLUEDART கம்பெனிகளோடு இணைந்து செயல்படவும் அவைகளோடு ஒரு போட்டியாளராகவும் செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது மிகவும் அபத்தமானது மட்டுமல்ல ஆபத்தமானதும் கூட . .சுருக்கமாக சொன்னால் எப்படி தொலைத்தொடர்பு துறையில் அரசாங்க கேபிள் பைப்லைன் வழியாக தனியார் கம்பெனிகளுக்கு 3Gமற்றும் 4Gஇணைப்பை தாராளமாக கொடுத்துவிட்டு வெறும் 2G உடன் BSNL மற்றும் MTNL நிறுவனங்களை போட்டியிட வைத்துவிட்டு இன்று BSNL நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்தினார்களோ அதேபோல் நமது மெயில் வேன் நமது GDS நமது  .வணிக நற்பெயர் இவைகளை பயன்படுத்தி நம்மையே அழிக்க துணிந்துவிட்டார்கள் .என்னசெய்வது இங்கே பானைக்கே பசிக்கிறது ?வெளியே பயிரை மேய்கிறது ?

அஞ்சல் சேவை இல்லாத பகுதி என்பதே இல்லாத நிலையில் இந்த வரைவு திட்டம் தேவைதானா ?இதன் மூலம் சுமார் 5லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெறுவார்கள் என்கின்ற கதையை பொதுமக்கள் நம்பலாம் .ஏற்கனவே நம்மிடம் 3லட்சம் GDSஊழியர்கள் ஏஜென்ட் என்கின்ற பெயரில் இன்னமும் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாவதை நம்மால் மறக்கவும் முடியாது .மறுக்கவும் முடியாது .

நம்மைவிட வேறெங்கும் இந்த அளவிற்கு பரந்துவிரிந்த நெட்ஒர்க்வேறெங்கும்உண்டா ?   அஞ்சல் இலாகாவால் கடைக்கோடி பொதுமக்களுக்கு கொடுக்கமுடியாத சேவையை வேறெந்த கார்ப்பரேட் கம்பெனிகள் செய்திட முடியும் ..

குடிகாரன் கையில் குழந்தையா ?குழந்தையின் கையில் கத்தியா ?பைத்தியக்காரன் கையில் துப்பாக்கியா ?மக்கள் சேவை செய்யும் இந்தத்துறை கார்ப்பரேட் கைகளிலா ?

அஞ்சல் துறைக்குள் புகுந்திட நினைக்கும் இந்த கார்ப்பரேட் கனவு நச்சு திட்டத்தை ஆரம்பத்திலே விரட்டி அடிப்போம் .களையினை இப்போதே அகற்றாவிட்டால் பயிருக்கு ஆபத்து !ஆம் தாய் உயிருக்கும் ஆபத்து !

இன்றே அணிதிரள்வோம் !அஞ்சல் துறையில் பெருமுதலாளிகளின் கால்பதிக்கும் கனவினை கலைத்திடுவோம் 

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் .

SB உத்தரவு 29/2021 யின் சாராம்சங்கள் 

MIS/SCSS/SSA மற்றும் PPFகணக்குகளை முன்னதாக முறித்துக்கொள்ளும் போது அல்லது இறப்பின் காரணமாக கணக்கை முடித்துக்கொள்ளும் போதும் ஏற்படுகின்ற சிக்கல்களுக்கு ஒரு தீர்வினை இந்த SB 29/2021 தருகிறது .இதன்படி இனிமேல்

1.வட்டி விகிதங்களில் மாற்றம் செய்திட இனி தலைமை அஞ்சலகங்களுக்கு அனுப்பவேண்டியதில்லை .அனைத்து CBS அலுவலகங்களிலும் HINTTM மெனு பயன்படுத்திட முடியும் 

ஆகவே இனிமேல் கீழ்கண்ட கணக்குகளுக்கு இந்த உத்தரவை கட்டாயமாக குறிப்பீடு செய்திட வேண்டும் .(i) SSA Claim closures  (ii)SCSS Claim closures before Maturity. (Iii) SCSS Claim closures after Maturity with date of death , before the date of Maturity. (iv) PPF pmc (V)Closure of PPF accounts migrated / transfer in from Banks. (vi) Claim closure of  MIS accounts entirely.(vii) Partial claim closure for MIS accounts exceeding the maximum limit.

PPFகணக்குகள் வங்கிகளில் இருந்து அஞ்சலகங்களுக்கு மாற்றப்பட்ட கணக்குகளை முடித்திட தலைமை அஞ்சலகங்களில் மட்டுமே முடியும்

 .நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 












 



.








(vii) Partial claim closure for MIS accounts exceeding the maximum limit.


          HIARM menu has to be invoked by SBCO for recalculation and recovery of excessively credited interest, if the depositor deceased before Maturity as HINTTM can not be used .


Also for PPF migrated/opened on transfer in from Banks, Closure should be done at H.Os only.

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !சிந்தீப்பீர் !

மாநில அஞ்சல் நிர்வாகமே !

லாகின் டே (login day )என்ற பெயரில் பினகிலே (finacle )செயற்கை செயலிழப்பை செய்யும் கோட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு !

நாடெங்கும் நவராத்திரி கொண்டாடும் வேளையில் அஞ்சல் ஊழியர்கள் மட்டும் அலுவலகத்தில் நித்தமும் சிவராத்திரியை கொண்டாடும் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் .இவ்வளவு நாள் finacle பிரச்சனை என்றால் இன்போசியஸ் காரணம் சிபி காரணம் என சொல்லிவந்த காலங்கள் போக இன்று அளவுக்கதிகமான சர்வர் அளவீடை தாண்டி கணக்கில்லா கணக்குகளை ஒரே நாளில் தொடங்க சொல்லி வலியுறுத்தியத்தின் காரணமாக நேற்று செயற்கையான நெட்ஒர்க் பிரச்சனையை நமது ஊழியர்கள் சந்திக்கவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது .

இதற்கு காரணமான அதிகாரிகள் அனைவரும் வழக்கமான தங்கள் அலுவலக நேரம் முடிந்தவுடன் அவரவர் இல்லம் தேடி இனிய பயணம் மேற்கொண்டிருந்தன்ர் .மாலை முதல் finalcle கிடைக்கவில்லை என்கின்ற நமது புலம்பல்கள் ஏனோ நிர்வாகத்தின் காதுகளுக்கு எட்டவில்லை .விளைவு பல அலுவலகங்களில் கணக்கை முடிக்க முடியாமல் ஊழியர்கள் திணறி கொண்டிருந்த்னர் .ஒருபக்கம் மேகம் இருட்டிக்கொண்டு இருளினை பாய்ச்சி கொண்டிருந்தது .மழைக்கு காரணமாக இடியும் மின்னலும் அவ்வப்போது எச்சரிக்கை கொண்டிருந்தது .இரவு 7.30மணிக்கு மேல் finacle செயல்படுவதாக வந்த செய்தி கேட்பதற்குள் மீண்டும் முடங்கிக்கொண்டது 

.இந்த செயற்கை செயலிழப்பிற்கு காரணம் பாங்கிங் day என்ற பெயரில் ஒரே நாளில் பலநூறு கணக்குகளை தொடங்க வற்புறுத்தியன் விளைவு என்றால் மிகையாகாது .நமது சர்வர் capacity எவ்வளவு ?அது எவ்வளவு டாடா வரை தாங்கும் என்கின்ற அடிப்படை  தகவல் கூட தெரியாதவர்களா இன்று கோட்ட /உப கோட்டங்களை ஆளுகிறார்கள் ! இரவு எட்டுமணிக்கு மேல் தான் finacle கிடைக்கிறது என்றால் அதுவரை இ ளவு காத்த கிளியாக ஊழியர்கள் குறிப்பாக தோழியர்கள் இருக்கவேண்டிய அவசியம் என்ன ?

லாகின் தினம் என்றால் எங்கள் ஊழியர்களை இரவுவரை அலுவலகத்திலே இருக்கவேண்டிய அவசியம் என்ன ?மூன்று வேளை சாப்பாட்டை ஒரே நேரத்தில் திணிக்கமுடியுமா ? நேற்று இரவெல்லாம் காத்திருந்த கோட்ட அலுவலக ஊழியர்கள் /DSM மற்றும் SPM ஊழியர்களுக்கு நிர்வாகம் கொடுக்கக்கூடிய நிவாரணம் என்ன ? 

இந்த கொடுமைகள் இனிமேலும் தொடர அனுமதியோம்  இ னிமேலும் வேலைநேரத்திற்கு அப்பால் நெட்ஒர்க் பிரச்சினை என்று ஊழியர்கள் குறிப்பாக பெண் ஊழியர்களை இரவு நேரம்வரை காத்திருக்க பணிக்கப்பட்டால் இந்த பிரச்சினையை நமது பகுதி மக்கள் பிரதிநிதிகள் மூலம் உரிய இடத்தில்  எழுப்பிடவும் மனித உரிமை அமைப்புகள் மற்றும் தொழிலாளர் நல அமைப்புகளிடம் நமது புகார் மனுக்கள் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் 


Saturday, October 9, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

என்னாச்சு ?நெல்லையில் மட்டும் விதியின் விளையாட்டு அதிகரித்துள்ளதே !

மருத்துவ விடுப்பு கேட்டு விண்ணப்பிக்கும் ஊழியர்களுக்கு அவர்களது மருத்துவ சான்றிதழை அரசு மருத்துவரிடம் தான் சான்றிதழ் பெற்றுத்தர வேண்டும் என நமது நெல்லை கோட்ட நிர்வாகம் புது நிபந்தனைகளை விதித்துவருகிற்து 

மருத்துவ விடுப்பை பொறுத்தவரை CGHS பயனாளராக இல்லாத பட்சத்தில் அரசு மருத்துவமனை அல்லது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களிடம் மருத்துவ சான்றிதழ் பெறவேண்டும் .8 KM பரப்பில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் கிடைக்காத பட்சத்தில் கெஸட் அங்கீகாரமில்லாத ஊழியர்கள் பதிவு செய்யபட்ட மருத்துவர் (RMP)மூலம் மருத்துவ சான்றிதழ் சமர்ப்பித்திடலாம் .ஆனால் நமது கோட்டத்தில் அவ்வாறு பெறப்பட்ட மருத்துவ சான்றிதழ் மறுக்கப்பட்டு வருகிறது .

அதேபோல் GDS  தபால்காரர் /MTS பதவிகளில் ENGAGEMENT செய்யப்படும்பொழுது நமது மண்டலத்தில் வேறு எந்த கோட்டத்திலும் இல்லாத புதிய நெருக்கடிகளை கோட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் படி உபகோட்ட அதிகாரிகள் அமுல்ப்படுத்துவருகிறார்கள் .விளைவு OUTSIDER கிடைப்பது சிரமம் அப்படியே OUTSIDER வந்தாலும் பட்டுவாடா வெகுவாக பாதிக்கப்படுகிறது .இதுகுறித்து மண்டல அலுவலகத்தில் இருந்து எந்த தாக்கீதும் இல்லாத பட்சத்தில் வெறும் சட்டத்தை காட்டி கோட்டத்தில் அசாதாரண சூழலை உருவாக்கிஇருப்பது நல்லதல்ல ....

இந்த பின்னணியில் நமது அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு சங்கங்களிள் கூட்டு பொதுக்குழு விரைவில் கூடி நாம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம் ....

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Wednesday, October 6, 2021

                               இறுதி வெற்றியும் நமக்கே !

மாநில சங்கத்தின் வெற்றி பயணத்தில்

 மற்றுமொரு   மைல் கல் 

நமது அஞ்சல் மூன்றின்  சாதனை மகுடத்தில் 

புதியதொரு வைரக்கல் 


தொழிற்சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க 

நம்மை தவிர வேறு யாருக்கும் 

பாத்தியம் இல்லை குறிப்பாக அஞ்சலில் 

சாத்தியம் இல்லை என உரிமையை 

மீட்டெடுத்த மகத்தான தலைமை நமது தலைமை


தமிழகம் மீண்டும் அகில இந்தியாவிற்கு

வழிகாட்டியுள்ளது -தட்டுத்தடுமாறி நின்ற 

 மற்ற மாநிலங்களுக்கு கூட --நம்பிக்கையின்

ஒளியை கூட்டியிருக்கிறது 


நம்மை முடக்க நினைத்தவர்கள் 

முடங்கி போய் விட்டார்கள் 

நம்மை ஒடுக்க துடித்தவர்களும் 

ஒதுங்கி கிடக்கிறார்கள் 


சந்தா கொடுப்பது நாங்கள் 

சங்கம் வளர்ப்பது நாங்கள் -பிறகு 

எங்கிருந்து முளைத்தது இந்த புதிய வி(ச)தி 


ஐந்துவருடம் அல்லது இரண்டு தடவை 

என வந்தபோது அவரவர் அவரவரின் 

வருடங்களை கணக்கிட்டு கொண்டிருந்தார்கள் 


வழக்கு தொடுக்கவேண்டும் --வாதாடி 

வாகை சூட முடியும் என 

நீதிமன்றத்தின் கதவுகளை தட்டிய 

பெருமை அண்ணன் KVS அவர்களை சாரும் 


நீதிமன்றம் ஒன்றும் புதிதல்ல ---

நீதியை பெறுவதில் எனக்கு சிரமமுமில்லை என்று 

அண்ணன் காட்டிய வழியில்

தயங்காது தளராது நின்று --இன்று 

தடை உத்தரவை பெற்றதில் பெரும்பங்கு 

நம் மாநில செயலர்  வீரமணிக்கு உண்டு 


நமக்கென்ன --இதை 

சம்மேளனம் பார்த்துக்கொள்ளும் -இது 

அகிலஇந்திய சங்கம் கேட்டு கொள்ளும் என 

சாக்குபோக்கு சொல்லமால் --சத்தமில்லாமல்

சாதித்து காட்டியிருக்கிறது நமது தலைமை --


ஆர்ப்பாட்டம் போதும் --அடுத்த கட்டமாக 

 பொது போராட்டம் என காத்திருக்காமல் 

மிச்சமிருக்கும் நேரத்திலும் -

தொழிற்சங்கத்தில் அரசியலை புகுத்தாமல் 

தேவையான நடவடிக்கைகளை எடுத்து 

ஆட்சியாளர்களின் சூழ்ச்சிகளை 

அடித்துவிரட்டிய ஆற்றல் மிகு ஆளுமை 

நமக்கே உண்டு !நமக்கே உண்டு !


வழக்கமான நமது கோஷங்கள் 

தான் நினைவுக்கு வருகிறது 

ஆம் இறுதி வெற்றி நமதே ! இந்த

இனிய வெற்றியும்  நமதே ! 

நன்றி ..தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Tuesday, October 5, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !வணக்கம் .

ஒற்றுமைக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி 

தபால்காரர் /மற்றும் MTS பதவிகளில் OFFICIATING பார்க்கின்ற GDS ஊழியர்களில் தேர்வுக்கு தகுதியுள்ள ஊழியர்களை தவிர மற்ற GDS ஊழியர்களை அவரவர் சொந்த இடத்திற்கு பணியாற்றிட அனுப்பிவிடுங்கள் என்கின்ற கோட்ட நிர்வாகத்தின் உத்தரவினை அடுத்த நிமிடமே அதை அமுல்ப்படுத்திட அனைத்து உபகோட்ட அதிகாரிகளும் புயல்வேகத்தில் செயல்பட்டு நேற்று மாலை அனைத்து GDS ஊழியர்களையும் RELIVE செய்திட உத்தரவுகள் பறந்துகொண்டிருந்ததன.இதுகுறித்து நமக்கு பல்வேறு அலுவலகங்களில் இருந்து வந்த வேண்டுகோள்களையை ஏற்று உடனடியாக நமது கோட்ட கூட்டு நடவடிக்கை குழு (NFPE P3,NFPE P4GDS மற்றும் AIGDSU )கோட்ட செயலர்களுடன் நமது SSP அவர்களை சந்தித்து ஒரு விரிவான கடிதத்தை கொடுத்துவிளக்கமாக  பேசினோம் .இந்த அதிரடி உத்தரவினால் நெல்லை கோட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட GDS ஊழியர்கள் PSD உட்பட பாதிக்கப்படுவது  மட்டுமல்ல தபால்கார்கள் மற்றும் MTS ஊழியர்கள் மீது COMBINED DUTY திணிக்கப்பட்டால் நாங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கவேண்டிய அவசியம் ஏற்படும் என்றும் நிச்சயம் நாளை முதல் தபால் பட்டுவாடா பாதிக்கப்படும் அதற்கு நிர்வாகம் தான் பொறுப்பு என ஆணித்தரமாக விவாதித்தபின் SSP அவர்கள் கீழ்கண்ட முடிவுகளுக்கு சம்மதித்தார்கள் .அதன் படி

 1.தற்சமயம் இருக்கும் ARANGEMMENT தொடரலாம் .

2.இதில் தகுதியுள்ள GDSஊழியர்களிடம்  விருப்ப மனுக்கள் கோரப்பட்டு ARANGENET போடப்படும்என உறுதியளித்தார்கள்  .நாமும் அதை ஏற்றுக்கொண்டு எக்காரணம் கொண்டும் COMBINED  DUTYஎங்கள் மீது திணிக்கக்கூடாது யாருமே இல்லாத பட்சத்தில் OUTSIDER நாளொன்றுக்கு ரூபாய் 411வீதம் அமர்த்திட SPM/போஸ்ட்மாஸ்டர் களுக்கு அனுமதி அளித்திடவும் வலியுறுத்திவந்துள்ளோம் .

தோழர்களே !இருந்தாலும் சில உப கோட்ட அதிகாரிகள் SSP அவர்களின் உத்தரவை ஏற்று நல்ல முடிவினை எடுத்தார்கள் அவர்களுக்கு எங்கள் நன்றிகள் .ஒரு உப கோட்டத்தில் மட்டும் வழக்கம் போல் எழுத்துபூர்வமான உத்தரவு வந்தால் மட்டுமே தான் அனுமதிக்கமுடியும் என்று அடம்பிடிப்பதாக தெரிகிறது .ஆகவே அந்த உபகோட்டங்களில் இன்று நமது SPMதோழர்களுக்கு ARRANGENT குறித்து வழிகாட்டுதல்கள் தேவைப்பட்டால் கோட்ட சங்கங்களை அனுகவும் .

நேற்றைய நிருவாக முடிவுகளில் உடனடி மாற்றம் வந்தது என்றால் அது முழுக்க முழுக்க நமது NFPE பேரியக்கமும் நம்மோடு சேர்ந்து குரல் கொடுத்த AIGDSU சங்கத்திற்கு மட்டுமே இந்த பெருமை சேரும் என்பதை நமது தோழர்கள் புரிந்துகொள்ளவேண்டும் .ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதனை உணர்த்திடுவோம் .

 LSG குறித்த சில தகவல்கள் 

நமது கோட்டத்தில் சுமார் 60ஊழியர்களுக்கு மேல் LSG பதவி உயர்வு வந்துள்ளது .அதில் சிலருக்கு மேற்கு மண்டலம் ஒதுக்கப்பட்டுள்ளது .ஆனால் நமது கோட்டத்தில் VACANCY வெறும் 8 இடங்களே .இதில் நகர் பகுதியில் இருப்பதோ மேலப்பாளையம் மற்றும் கீழநத்தம் மட்டும் தான் .ஆகவே பழைய முறையில் கவுன்சிலிங் அடிப்படையில் ஊழியர்களின் விருப்பு மற்றும் மறுப்பு இவைகளை தெரிந்துகொண்டு ஊழியர்களுக்கு இடமாறுதல் கொடுத்திடவும் அதற்குமுன் பழைய விருப்ப இடமாறுதல்களையும் வழங்கிடவும் இன்று கோட்ட நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்று கொடுக்கவுள்ளோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று T.புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு I.ஞான பாலசிங் கோட்ட செயலர் AIGDSU 

Friday, October 1, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

கோவிட் காலத்தில் தமது வீட்டில் யாருக்கேனும் கோவிட வந்து அதன் மூலம் தனிமைப்படுத்திக்கொண்டவர்கள் முதல் கண்டோன்மெண்ட் பகுதியில் இருந்து பணிக்குவர முடியாதவர்களுக்கான விடுப்புகளை சிறப்பு விடுப்பு மற்றும் duty ஆக மாற்றிட இன்னும் விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்கவும் .26..03.2020 முதல் இந்த வசதி உண்டு .மேலும் உதவி தேவைப்படுவோர் கோட்ட சங்கத்தை அனுகவும் .நன்றி .தோழமையுடன் ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
POSB யில் ATM சேவைகளுக்கு 01.10.2021முதல் விதிக்கப்பட்டுள்ள சேவை கட்டணங்களை தொடர்ந்து பொதுமக்கள் மட்டுமல்லாது நமது ஊழியர்களும் தங்களது ATM கார்டுகளை திரும்ப கொடுத்துக்கொண்டு வருகிறார்கள் .இந்த சூழ்நிலையில் நமது ஊழியர்களுக்காவது சேவைக்கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்திடவேண்டும் என்கின்ற கோரிக்கை எழ தொடங்கியுள்ளது .ஆகவே இதன் சம்பந்தமாக இலாகா தலைமைக்கு நாம் நமது ஆலோசனைகளை அனுப்பிவைக்கவும்   அதே வேளையில் நிர்வாகத்தின் வழியாகவும் இந்த ஆலோசனைகளை அனுப்பிடலாம் என்கின்ற முயற்சியில் நமது கோட்ட நிர்வாகத்திற்கு நாம் எழுதியுள்ள கடிதம் உங்கள் பார்வைக்கு .....

NFPE

ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                     TIRUNELVELI DIVISIONAL BRANCH

TIRUNELVELI—627002

No.P3-ORG dated at Tirunelveli 627002 the 01.10.2021

To

The Sr.Supdt. of Post Offices,

Tirunelveli Division

Tirunelveli-627002

Sir,


This union put forth the following suggestions towards exemption of various service charges for DOP employees for their transactions and accounts being  maintained by them with POSB.

                    As it is already circulated vide SB Order instructionsdtd15.09.2021 ATM service charges will be deducted from all ATM holders w.e.f 01.10.2021. In this plea, this Union submits its suggestion that as like DOP employees are exempted from the charges laid down for IPPB transactions , our  employees should also be exempted from ATM charges and all other charges like account transfer fees , fee for cheque book etc.,  prescribed in GSPR 2018 for all their accounts standing at Postoffices. Since we are doing all services related to SB branch on behalf of Ministry of Finance , our accounts has to be exempted from such fares.     

                   This suggestion may kindly be escalated to appropriate levels. This union solicits your esteemed cooperation in this regard.

                         Yours faithfully 

S.K.JACOBRAJ