அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
DAK MITRA (அஞ்சல் நண்பன் ) திட்ட முன்மொழிவை முளையிலே கிள்ளி எறிய வேண்டும் ..களையினை இப்போதே அகற்றாவிட்டால் பயிருக்கு ஆபத்து !
அஞ்சல் வாரியம் தனது 13.10.2021தேதியிட்ட கடிதத்தில் FRANCHISEE திட்டத்தை மறுபரீசீலனை செய்திடவும் அதுகுறித்து அனைத்து மாநில CPMG களிடம் வருகிற 25.10.2021 குள் கருத்துக்களை கேட்டும் தாக்கீது அனுப்பியுள்ளது .
புதிய மொந்தையில் பழைய கள் OLD WINE IN THENEW BOTTLE
என்ற பழமொழிக்கேற்ப ஏற்கனவே கிராமப்புற பஞ்சாயத்து தலைமையகங்களில் அஞ்சல் சேவையை விரிவாக்க கொண்டுவந்த PSSK திட்டமும் அஞ்சல் சேவை கிடைக்கப்பெறாத பகுதியில் FRANCHISEE மூல்ம் அஞ்சல் சேவைகளை செய்திட கொண்டுவரப்பட்ட திட்டமும் வந்த வேகத்திலே புறமுதுகிட்டு ஓடிய கதை நமக்கு நினைவிருக்கும் .PSSKமற்றும் FRANCHISEE திட்டங்களிலாவது வெறும் STAMPS SALE REGISTRATIONBOOINKG மட்டுமே இருந்தது .ஆனால் இன்று அனைத்து சேவைகளையும் தனியாருக்கு தாரை வார்க்க அஞ்சல் வாரியம் புதிய ஒப்பனையோடு இந்த பழைய நீர்த்துப்போன திட்டத்தை ஏலத்திற்கு கொண்டுவர அஞ்சல் வாரியம் முனைந்திருக்கிறது .தற்போதுள்ள FRANCHISEE விட கூடுதலாக சேமிப்பு திட்டங்கள் இன்சூரன்ஸ் வசதிகள் பட்டுவாடா என அனைத்தையும் கார்ப்பரேட் முதல் கடைக்கோடி பெரும் முதலாளிகளுக்கு கொடுத்திட வரைவு திட்டத்தை வடிவமைத்துள்ளது நமது அஞ்சல் வாரியம்
கார்ப்பரேட் நிறுவனங்களை பொறுத்தவரை ஏற்கனவே நம்மோடு போட்டியில் இருக்கும் DHL மற்றும் BLUEDART கம்பெனிகளோடு இணைந்து செயல்படவும் அவைகளோடு ஒரு போட்டியாளராகவும் செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது மிகவும் அபத்தமானது மட்டுமல்ல ஆபத்தமானதும் கூட . .சுருக்கமாக சொன்னால் எப்படி தொலைத்தொடர்பு துறையில் அரசாங்க கேபிள் பைப்லைன் வழியாக தனியார் கம்பெனிகளுக்கு 3Gமற்றும் 4Gஇணைப்பை தாராளமாக கொடுத்துவிட்டு வெறும் 2G உடன் BSNL மற்றும் MTNL நிறுவனங்களை போட்டியிட வைத்துவிட்டு இன்று BSNL நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்தினார்களோ அதேபோல் நமது மெயில் வேன் நமது GDS நமது .வணிக நற்பெயர் இவைகளை பயன்படுத்தி நம்மையே அழிக்க துணிந்துவிட்டார்கள் .என்னசெய்வது இங்கே பானைக்கே பசிக்கிறது ?வெளியே பயிரை மேய்கிறது ?
அஞ்சல் சேவை இல்லாத பகுதி என்பதே இல்லாத நிலையில் இந்த வரைவு திட்டம் தேவைதானா ?இதன் மூலம் சுமார் 5லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெறுவார்கள் என்கின்ற கதையை பொதுமக்கள் நம்பலாம் .ஏற்கனவே நம்மிடம் 3லட்சம் GDSஊழியர்கள் ஏஜென்ட் என்கின்ற பெயரில் இன்னமும் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாவதை நம்மால் மறக்கவும் முடியாது .மறுக்கவும் முடியாது .
நம்மைவிட வேறெங்கும் இந்த அளவிற்கு பரந்துவிரிந்த நெட்ஒர்க்வேறெங்கும்உண்டா ? அஞ்சல் இலாகாவால் கடைக்கோடி பொதுமக்களுக்கு கொடுக்கமுடியாத சேவையை வேறெந்த கார்ப்பரேட் கம்பெனிகள் செய்திட முடியும் ..
குடிகாரன் கையில் குழந்தையா ?குழந்தையின் கையில் கத்தியா ?பைத்தியக்காரன் கையில் துப்பாக்கியா ?மக்கள் சேவை செய்யும் இந்தத்துறை கார்ப்பரேட் கைகளிலா ?
அஞ்சல் துறைக்குள் புகுந்திட நினைக்கும் இந்த கார்ப்பரேட் கனவு நச்சு திட்டத்தை ஆரம்பத்திலே விரட்டி அடிப்போம் .களையினை இப்போதே அகற்றாவிட்டால் பயிருக்கு ஆபத்து !ஆம் தாய் உயிருக்கும் ஆபத்து !
இன்றே அணிதிரள்வோம் !அஞ்சல் துறையில் பெருமுதலாளிகளின் கால்பதிக்கும் கனவினை கலைத்திடுவோம்
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment