அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
என்னாச்சு ?நெல்லையில் மட்டும் விதியின் விளையாட்டு அதிகரித்துள்ளதே !
மருத்துவ விடுப்பு கேட்டு விண்ணப்பிக்கும் ஊழியர்களுக்கு அவர்களது மருத்துவ சான்றிதழை அரசு மருத்துவரிடம் தான் சான்றிதழ் பெற்றுத்தர வேண்டும் என நமது நெல்லை கோட்ட நிர்வாகம் புது நிபந்தனைகளை விதித்துவருகிற்து
மருத்துவ விடுப்பை பொறுத்தவரை CGHS பயனாளராக இல்லாத பட்சத்தில் அரசு மருத்துவமனை அல்லது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களிடம் மருத்துவ சான்றிதழ் பெறவேண்டும் .8 KM பரப்பில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் கிடைக்காத பட்சத்தில் கெஸட் அங்கீகாரமில்லாத ஊழியர்கள் பதிவு செய்யபட்ட மருத்துவர் (RMP)மூலம் மருத்துவ சான்றிதழ் சமர்ப்பித்திடலாம் .ஆனால் நமது கோட்டத்தில் அவ்வாறு பெறப்பட்ட மருத்துவ சான்றிதழ் மறுக்கப்பட்டு வருகிறது .
அதேபோல் GDS தபால்காரர் /MTS பதவிகளில் ENGAGEMENT செய்யப்படும்பொழுது நமது மண்டலத்தில் வேறு எந்த கோட்டத்திலும் இல்லாத புதிய நெருக்கடிகளை கோட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் படி உபகோட்ட அதிகாரிகள் அமுல்ப்படுத்துவருகிறார்கள் .விளைவு OUTSIDER கிடைப்பது சிரமம் அப்படியே OUTSIDER வந்தாலும் பட்டுவாடா வெகுவாக பாதிக்கப்படுகிறது .இதுகுறித்து மண்டல அலுவலகத்தில் இருந்து எந்த தாக்கீதும் இல்லாத பட்சத்தில் வெறும் சட்டத்தை காட்டி கோட்டத்தில் அசாதாரண சூழலை உருவாக்கிஇருப்பது நல்லதல்ல ....
இந்த பின்னணியில் நமது அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு சங்கங்களிள் கூட்டு பொதுக்குழு விரைவில் கூடி நாம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம் ....
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment