விரக்தியின் உச்ச கட்டத்தில் போசு அணியினர் -----
சமிபத்தில் தொழிற்சங்கங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து நமது அஞ்சல் மூன்று தமிழ்மாநில சங்கம் பெற்றுக்கொடுத்த தடை உத்தரவினை குறித்து தமிழக போசு அணியினரின் புலம்பலை பார்த்திருப்பீர்கள் .ஏற்கனவே அஞ்சல் மூன்றின் மாநில சங்கத்திடம் அந்த பொறுப்புகளை கொடுத்துள்ளதால் தாங்கள் அதில் தலையிடவில்லை என தற்பெருமை பேசிவருவ்து அவர்களின் இயலாமையையை மட்டுமல்ல விரக்கதியையும் வெளிப்படுத்தியுள்ளது .
*23 மாநில சங்கங்கள் இருக்கும் பொழுது ஏன் மத்திய சங்கம் தமிழ் மாநிலத்தை கேட்டுக்கொண்டது ?
*போசு அணியின் மாநில சங்கங்களிடம் அந்த பொறுப்பை ஏன் கொடுக்கவில்லை ?
தமிழகத்திடம் அந்த பொறுப்பை கொடுத்தினால் தான் அன்று நமது சம்மேளன மாபொதுச்செயலரால் வாரணாசியில் படகு சவாரி ஆனந்தமாக செல்ல முடிந்தது .நாடுமுழுவதிலும் ஆர்ப்பாட்டம் நடந்திடும் போது எங்காவது ஒரு இடத்தில் பொதுச்செயலர் போராட்டத்தில் கலந்துகொண்டிருக்க வேண்டாமா ?
2018மே GDS ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்ததின் போது சின்ன ஆதரவை கூட வெளிப்படுத்தாமல் சிம்லா LTC பயணத்தில் இருந்தவர் தான் பொதுச்செயலர்?
பிறகு இவராவது போராடவாவது ? இனிமேல் 1984 வேலைநிறுத்தம் குறித்து தம்பட்டம் அடிக்கும் முன் 2018 GDS 16 நாட்கள் குறித்து ஒரு நிமிடமாவது யோசித்துவிட்டு பேசவும் .
நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடிகிளியே...இவர்கள் வாய்ச் சொல்லில் வீரரடி.......
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment