இறுதி வெற்றியும் நமக்கே !
மாநில சங்கத்தின் வெற்றி பயணத்தில்
மற்றுமொரு மைல் கல்
நமது அஞ்சல் மூன்றின் சாதனை மகுடத்தில்
புதியதொரு வைரக்கல்
தொழிற்சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க
நம்மை தவிர வேறு யாருக்கும்
பாத்தியம் இல்லை குறிப்பாக அஞ்சலில்
சாத்தியம் இல்லை என உரிமையை
மீட்டெடுத்த மகத்தான தலைமை நமது தலைமை
தமிழகம் மீண்டும் அகில இந்தியாவிற்கு
வழிகாட்டியுள்ளது -தட்டுத்தடுமாறி நின்ற
மற்ற மாநிலங்களுக்கு கூட --நம்பிக்கையின்
ஒளியை கூட்டியிருக்கிறது
நம்மை முடக்க நினைத்தவர்கள்
முடங்கி போய் விட்டார்கள்
நம்மை ஒடுக்க துடித்தவர்களும்
ஒதுங்கி கிடக்கிறார்கள்
சந்தா கொடுப்பது நாங்கள்
சங்கம் வளர்ப்பது நாங்கள் -பிறகு
எங்கிருந்து முளைத்தது இந்த புதிய வி(ச)தி
ஐந்துவருடம் அல்லது இரண்டு தடவை
என வந்தபோது அவரவர் அவரவரின்
வருடங்களை கணக்கிட்டு கொண்டிருந்தார்கள்
வழக்கு தொடுக்கவேண்டும் --வாதாடி
வாகை சூட முடியும் என
நீதிமன்றத்தின் கதவுகளை தட்டிய
பெருமை அண்ணன் KVS அவர்களை சாரும்
நீதிமன்றம் ஒன்றும் புதிதல்ல ---
நீதியை பெறுவதில் எனக்கு சிரமமுமில்லை என்று
அண்ணன் காட்டிய வழியில்
தயங்காது தளராது நின்று --இன்று
தடை உத்தரவை பெற்றதில் பெரும்பங்கு
நம் மாநில செயலர் வீரமணிக்கு உண்டு
நமக்கென்ன --இதை
சம்மேளனம் பார்த்துக்கொள்ளும் -இது
அகிலஇந்திய சங்கம் கேட்டு கொள்ளும் என
சாக்குபோக்கு சொல்லமால் --சத்தமில்லாமல்
சாதித்து காட்டியிருக்கிறது நமது தலைமை --
ஆர்ப்பாட்டம் போதும் --அடுத்த கட்டமாக
பொது போராட்டம் என காத்திருக்காமல்
மிச்சமிருக்கும் நேரத்திலும் -
தொழிற்சங்கத்தில் அரசியலை புகுத்தாமல்
தேவையான நடவடிக்கைகளை எடுத்து
ஆட்சியாளர்களின் சூழ்ச்சிகளை
அடித்துவிரட்டிய ஆற்றல் மிகு ஆளுமை
நமக்கே உண்டு !நமக்கே உண்டு !
வழக்கமான நமது கோஷங்கள்
தான் நினைவுக்கு வருகிறது
ஆம் இறுதி வெற்றி நமதே ! இந்த
இனிய வெற்றியும் நமதே !
நன்றி ..தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment