அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
IPPB க்கு ஏன் இந்த அகோர பசி ?
கடந்த 01.09.2018 முதல் மிக விமர்சையாக தொடக்க விழா காணப்பட்ட IPPB இன்று மாபெரும்நட்டத்தில் இயங்குவது என்பது நம்மை அதிர்ச்சியடையவைத்திருக்கிறது .ஆனால் வழக்கம் போல் நிர்வாகம் எதுவும் நடக்காததை போல் மீண்டும் மீண்டும் ஒவ்வொரு லாகின் தினத்தன்று IPPB TEAM உங்களுக்கு உதவும் என அவர்களை PROMOTE பண்ணுவதிலே குறியாக இருக்கிறது .
வரவு சுண்டைக்காய் அளவு --செலவு பூசணிக்காய் அளவாம் ?
உதாரணமாக கடந்த ஆண்டு IPPB ஆடிட் அறிக்கையில் வரவுக்கும் -செலவுக்கும் உள்ள இடைவெளி என்பது மிகவும் அதிகரித்துக்கொண்டு போயிருக்கின்றது ..
31.03.2020தேதிப்படி வரவு 54கோடி செலவு 388கோடி .2019யில் வரவு 48கோடி செலவு 213கோடி .கடந்த ஆண்டு வெறும் 6கோடி வருமான உயர்வுக்கு அரசு செலவழித்ததோ 175 கோடி ..சராசரி 80சதம் செலவி(வீ )னங்கள் அதிகரித்துள்ளது .
இதை சரிகட்டப்போவது நமது தலையில் தான் விழப்போகிறது ...ஆனாலும் ஒவ்வொருநாளும் IPPB குறித்து நமது அதிகாரிகள் காட்டுகிற ஆர்வம் இன்னும் எத்தனை கோடி நட்டத்தில் நம்மை அழைத்து செல்ல போகிறதோ ? நன்றி .(தகவல் தலைவர் KVS அவர்களின் அன்புடன் KVS YOU TUBE பதிவில் இருந்து )
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment