அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !வணக்கம் .
LSG பதவி உயர்வின் அடுத்தகட்டமாக நமது மண்டல அலுவலகத்தில் இருந்து கோட்ட ஒதுக்கீடும் வந்துவிட்டது .நமது கோட்டத்தில் 8 VACANCY இருந்தாலும் 7 தோழர்களுக்கு நமது கோட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது .ஒருவர் மதுரை கோட்டத்தில் இருந்து RE -ALLOTMENT யில் வருகிறார் .இதில் எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள் ?எத்தனை பேர் பதவி உயர்வை மறுப்பார்கள் என்பதை பொறுத்துதான் பிற கோட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் நமது கோட்டத்திற்கு கொண்டுவரமுடியும் .எப்படியோ 67 பேர் பதவி உயர்வை பெற்றலும் வெறும் 7 தோழர்களுக்கு மட்டுமே நமது கோட்டம் கிடைத்திருப்பது ஒரு துரதிஷ்டமே ! பதவி உயர்வை மறுக்காதீர்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லுகின்ற அளவில் யாரும் இல்லை .MACP யா ?LSG யா ? இல்லை எதுவும் வேண்டாம் உள்ளூர் போதும் என்கின்ற ஒரு நெருக்கடி இன்று நமது கோட்டத்தில் சுமார் 60 தோழர்கள் சந்திக்கின்றார்கள் ..இன்று 12 மணிக்கு நமது கோட்ட அதிகாரியுடனான மாதாந்திர பேட்டி நடைபெறுகிறது .அதற்குள் DECLINE செய்பவர்கள் யார்?யார் ?பதவியுயர்வை ஏற்றுக்கொள்பவர்கள் யார்?யார் ? என்கின்ற விவரத்தை தோழர்கள் தெரிவிக்கவேண்டுகிறோம் .கோட்ட REALLOTMENT மற்றும் DECLINE செய்வதற்கான படிவங்கள் இத்துடன் அனுப்பப்பட்டுள்ளது .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment