...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, January 6, 2017

                                   பொங்கலோ பொங்கல் -
                     -பொங்கட்டும் கோபத்தீயில்              பொங்கட்டும்   பொங்கல்

பொங்கல் பண்டிகை நாங்கள்  கொண்டாட முடியாதென்றால் --தமிழகத்தில் எந்த அதிகாரிகளும் பொங்கல் கொண்டாட அனுமதிக்க மாட்டோம் --இது முன்னாள் மாநிலசெயலர் அண்ணன் பாலு அவர்கள் 2000 இல் மாநிலசெயலராக இருந்தபோது விடுத்த எச்சரிக்கை --
விளைவு -முந்தினநாள் மதியமே முடங்கியது சென்னை CPMG அலுவலகம் --எந்த உயர் அதிகாரிகளும் வெளியே வரமுடியவில்லை --CPMG  எங்கு பேசினாரா ?யாரிடம் கேட்டாரோ ?தெரியாது வந்தது விடுமுறை .2000 இல் பொங்கல் கொண்டாடினோம் .இது வரலாறு --
அந்த கூட்டத்தில் கடைசியா அண்ணன் பாலு இவ்வாறு பேசினார் : இந்த சூழலில் ஊழியர்களை போராட சொல்வது சாதாரண விசயம் --யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ஊழியர்கள் எவரும் பணிக்கு வரப்போவதில்லை --பணிக்கு வந்த ஊழியர்களும் மனப்பூர்வமாக வேலை செய்ய போவதில்லை --அலுவலகம் திறந்து இருக்கும் -ஆனால் வேலை நடக்காது ---ஆகவே இப்பொழுதில் இருந்து இது முற்றுகை போராட்டமாக மாறுகிறது என்று அறிவித்தார் .விஷயங்கள் கேள்வி பட்டு சென்னை பெருநகர தோழர்கள் குவிய தொடங்கினார்கள் -முன்னதா அண்ணன் பாலு நீ வா !நீயாவது வா !என்று எவரையும் அழைத்திடவில்லை -விபரீதத்தை உணர்ந்துகொண்டு நிர்வாகம் இறங்கிவந்தது .வெற்றி பெற்றோம் .
அன்றைய போராட்டங்களில் தலைவர்களும் -தளபதிகளும் முன்னின்று வெற்றிகண்டார்கள் .
                                         விதியே !என் 
                                         தமிழ் சாதியை 
                                         என்ன செய்ய நினைத்தாய் !
                                         மானம் தமிழர் கேட்ட தாலாட்டு 
                                       மரணம் தமிழர் ஆடிய விளையாட்டு

 ஆனால்  இன்று  .கடிதம் எழுதினோம் ...CPMG பார்க்க முடியவில்லை (நேற்று கூட CPMG சென்னை CPMG அலுவலக வளாகத்தில் தான் இருந்தார் என்பது வேறு )இது COC எடுக்கவேண்டிய பிரச்சினையா ?CGEWCC (CENTARAL GOVT WELFARE COORDINATION COMMITTEE எடுக்க வேண்டிய பிரச்சினையா ?என்று நமக்குள் வாதப்பிரதிவாதங்கள் வேண்டாம் .எல்லா மாநிலச்சங்கங்களுக்கும் தனித்தனியாக CPMG அவர்களுக்கு கடிதங்களை அனுப்பி அதை தங்கள் வலைத்தளங்களில் பிரசுரித்து விட்டு தங்கள் கடமையையை முடித்துவிட்டதாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் .பொங்கல் பண்டிகை நெருங்க நெருங்க ஊழியர்கள் பொங்க தொடங்கிவிட்டார்கள் .பல கோட்ட செயலர்கள் பொங்கல் விடுமுறைக்கு விடுப்பு இல்லை என்றால் பணி புறக்கணிப்பு செய்வோம் என்றும் மாஸ் விடுப்பு எடுப்போம் என்றும் --வேலைநிறுத்தோம் செய்யலாம் என்றும் தலமட்டங்களில் இருந்து தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள் .வேலைநிறுத்தம் என்பது ஒரு கடைசி ஆயுதம் ..அந்த புனித ஆயுதத்தை கடைசியில் தான் கையாள வேண்டும் .போராட்டம் நடத்தினால் அதிகாரிகளுக்கு லாபம் -நமக்கு இழப்பு ?
தன்மான  இனத்துக்கு ஒரு மான பிரச்சினை   என்றால்  ஒட்டுமொத்த இனத்தையே கஷடப்படுத்துவது நமது நோக்கமாகவும் --இலக்காகவும் இருக்கக்கூடாது .
 COC என்ற அமைப்பில் உள்ள 9 மாநில சங்கங்கள் --அதில் உள்ள 15 மாநில சங்க நிர்வாகிகள் --ஒன்பது மாநில சங்கத்தில் உள்ள அனைத்து கோட்ட /கிளை சங்க நிர்வாகிகள் தலா 15 பேர் --இன்னும் உள்ள கேசுவல் லேபர் --ஓய்வூதியர் சங்கம் -நாம்  அங்கம் வகிக்கும்  மத்திய அரசு ஊழியர் மஹாசம்மேளன ஊழியர்கள்என அனைத்து தரப்பினரையும் திரட்டி அனைத்து மண்டல அலுவலகங்களை  12 .01.2017 &13.01.2017 முற்றுகை இடுவோம் .அதன் பிறகும் பொங்கலுக்கு விடுப்பு இல்லை என்றால் மாநில /மண்டல /கோட்ட அளவில் நடக்கும் அனைத்து அதிகாரபூர்வமான நடக்கும் கூட்டங்களை புறக்கணிப்போம் .இது எங்களது தாழ்மையான வேண்டுகோள் --
இனமான  உணர்வை அதிகாரிகள் உணராதபோது இவர்களிடம் இனி என்ன வெட்டி பேச்சு ?

           தோழமையுடன்  SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர்

   
         

0 comments:

Post a Comment