...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, January 13, 2017

வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பு  --01.01.2004 க்கு முன்பாக பணியில் சேர்ந்து --பிறகு பதவி உயர்வு பெற்ற அனைத்து GDS ஊழியர்களுக்கும் பழைய பென்ஷன் --பதவி உயர்வு பெறாத ஊழியர்களுக்கும் 5/8 என சேவைக்காலத்தை சேர்க்க வேண்டும் -டெல்லி முதன்மை தீர்ப்பாயாக உத்தரவை தொடர்ந்து சென்னை நிர்வாக தீர்ப்பாயகம் உத்தரவு     மதுரை  தொழிற்சங்க வரலாற்றில் மீண்டும் ஒரு மணிமகுடம்---நிர்வாகம் உத்தரவை அமுல்படுத்துமா ?வழக்கம் போல் இழுத்துடிக்குமா ?


GDS ஊழியர்கள் 01.01.2004 முதல் பதவி உயர்வு பெற்றாலும்  பென்ஷன் பெற முடியாத நிலை தற்போது நிலவுகிறது .இதை எதிர்த்து மதுரை கோட்ட தோழர்கள் அண்ணன் சின்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலில் வழக்கு ஒன்றை 1405/14 தொடர்ந்து நடத்தி வந்தனர் .இதில் விசாரணை முடிந்து விட்ட நிலையில் -(-இந்த வழக்கை மையப்படுத்தி சுமார் 350 தோழர்கள் வழக்கு தொடர்ந்தனர்) .இன்று இந்தவழக்கில் தீர்ப்பு  வழங்கப்பட்டுஉள்ளது இதில் அனைத்து மனுதாரர்களுக்கும்  இந்த உத்தரவு பொருந்தும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக நமது வழக்கறிஞர் திரு .R .மலைச்சாமி அவர்கள் தெரிவித்தார்கள் .அதில் டெல்லி மத்திய தீர்பாயகம் உத்தரவு படி மனுதாரர்களுக்கு பென்ஷன் உள்ளிட்ட அனைத்து பண பயன்களுக்கும் அளிக்கப்படவேண்டும் எனவும் ---பதவி உயர்வு பெற்ற ஊழியர்களின் GDS சேவைக்காலம்  கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .இந்த வழக்கை தொடுக்க முழு முயற்சிகளை மேற்கொண்ட அண்ணன் சின்ராஜ் (முன்னாள் மாநில உதவி செயலர் )அவர்களுக்கும் --வழக்கறிஞர் திரு .R .மலைச்சாமி அவர்களுக்கும் தமிழ்நாடு NCA பேரவை சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .டெல்லி மத்திய தீர்ப்பாயகம்  உத்தரவு மொத்தம் 336 பக்கங்கள்.முழு விவரங்கள்     அதிவிரைவில்  வெளியிடப்படும் 
.உங்கள் அனைவருக்கும் தமிழ்நாடு NCA பேரவை சார்பாக பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் 
 தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் பொதுச்செயலர் NCA பேரவை 

0 comments:

Post a Comment